Tuesday, March 27, 2007

march 28th reflection

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 8
31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ' என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; 32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ' என்றார். 33 யூதர்கள் அவரைப் பார்த்து, ' ″ உங்களுக்கு விடுதலை கிடைக்கும ″ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே! ' என்றார்கள். 34 அதற்கு இயேசு, ' பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. 36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். 38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள் ' என்றார். 39 அவர்கள் அவரைப் பார்த்து, ' ஆபிரகாமே எங்கள் தந்தை ' என்றார்கள். இயேசு அவர்களிடம், ' நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். 40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர் ' என்றார்கள். 42 இயேசு அவர்களிடம் கூறியது: ' கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.

வாசகம். தானியேல் 3:14௨0, 91௯2, 95
நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? 15 இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போட 16 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் செபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. 17 அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். 18 அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்: நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும் என்றார்கள். 19 இதைக் கேட்ட நெபுத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான். 20 பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.
சிந்தனை:
இன்றைய நற்செய்தியில், யேசு கிறிஸ்து நம்மை இறைவனை விசுவசிக்க அழைக்கிறார். "என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; 32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ". இந்த விடுதலையிலிருந்து என்ன செய்ய உள்ளோம்?
கிறிஸ்துவின் போதனையிலிருந்து, நமக்கு விடுதலை வாழ்வு கிடைக்கும், இந்த விடுதலை வழ்வு, எவ்வித அர்த்தத்தையும் கொடுக்கவில்லை எனினும், அவருடைய வழியே சரியான வழி. எடுத்துக்காட்டாக, தீங்கு உண்டாகக்கூடிய ஒருவரை மன்னிப்பது, நமக்கு முரன்பாடாக இருந்தாலும், நிபந்தனையற்ற இந்த அன்பு, அவர்கள் மேல் நீடித்து இருக்கும் கோபம், வன்மம், அதிருப்தி, மற்றும் பயம் சுத்தமாக நீங்கிவிடும். நாம், நமது எதிரிகளை பழிவாங்குவதற்கு பதிலாக, நல்லது செய்ய நினைக்கும்போது, பிரச்னை மேலும் பெரிதாகும் என கவலை படவேண்டியதில்லை. பழிவாஙும் உணர்வு பிரசுனையை மேலும் பெரிதாக்கும். மற்றும், விவாதம் கூட ஒரு வகையன பழிவாஙும் செயல் தான்.அமைதியாக இருத்தல் கூட பழி வாஙும் செயல் தான்.
நாம் நமது எதிரியை அன்பு செய்வது என்பது, போதனையின்படி வாழ்ந்து சிலுவையோடு சேர்வதற்கும் சமம்.னான் நம்மையே அன்பின் வாழ்வில் ஆட்படுத்திகொள்வது அர்த்தமற்றதாக தெரியலாம். அனால் இது தான் புனிததன்மை. இவ்வழியே பாவங்களிலுருந்து விடுபட்டு, பரிசுத்த ஆவியின் துனையுடன், நாம் புனிதத்தன்மையுடன் இருக்க முடியும். நாம் நம்பிக்கை கொள்ள வேண்டியன:
அ) கடவுளுக்கு அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும், மேலும் சாத்தனிடமிருந்து உன்னை வெற்றி பெறச் செய்வார். ஆ) இறுதி முடிவு நாம் நினைப்பதை விட மிக நன்றாகவே இருக்கும்.
இன்றைய முதல் வாசகத்தில், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்னெகேவிற்கு இந்த விசுவாசம் இருந்தது. உஙளுடைய வாழ்க்கயில், இம்மாதிரியான தீய நெருப்புகள் எவை? உஙகளை அடிமைகளாகச் செய்யும் நெருப்புகள், தவ்றான முடிவை தரும் குறுக்கு வழிகள், தவறன வேலைகள், தவறன நட்பு மற்ரும் உறவுகள், ஆபத்தை தரும் தவறான முடிவுகள் இவை எல்லாம் நம்முடய கோபம், பயம், அதிருப்தி மற்றும் மனக்கவலை அதிகரிக்க செய்யும்.
விசுவாசமிக்க வழியே, யேசுவோடு நடந்து இத்தீய நெருப்பில் நடந்து அவைகளை எரித்து தள்ளலாம். யேசு புனித வெள்ளியின் வேதனை நெருப்பை தாங்கினார், ஏனெனில், வேதனையைவிட பெரிய இன்பத்தை தரும் என நம்பினார். யேசுவோடு பின் செல்ல, நாம் நமது சிலுவைகளை, நமது வெற்றிக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நமக்கு பிடிக்காத உண்மை எனினும், நம் வாழ்விலுருந்து நம்மை விடுவிக்கிறது.
எப்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்னெகேவிற்கு நெருப்பில் நடுவில் ஒருவர் வந்து பார்த்தாரோ( கடவுளின் மகன் போல), நம்மோடும் நம் இறைவன் யேசு நம் நெருப்பின் மத்தியில் இருப்பார். அந்த நெருப்பினிடையே நாம் தெய்வீகத்தை அனுபவிப்போம். இந்த நெருப்பில் (அ) துன்பத்தில் ஏசுவோட இருப்போம் எனில், புனித வாழ்வில் எழுந்தருளப்படுவோம், அங்கே கடவுளே நம் விசுவாசத்தை புகழ்வார். அங்கே கிறிஸ்துவுடன் மிக நெருங்கிய ஐக்கியத்தில் சேர்வோம்.
கிறிஸ்துவோடு முதல் அடி எடுத்து வைப்போம்: தீய நெருப்பிலிருந்து வெளியேற வழி தேடுவதை விட்டு, கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, அந்த நெருப்பினில் தேடுவோம், அவரை தழுவி, அவரோடு சேர்ந்து நில், உன் விசுவாசத்தை அவருக்கு காட்டு.


© 2007 by Terry A. ModicaDid today's reflection bless you? Please bless me!
Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: