Wednesday, March 28, 2007

March 29 , மறையுரை , நற்செய்தி

மறையுரை: (http://gnm.org)
"னீ உன்னை யாரென்று நினைக்கிறாய்?" யாராவது உன்னிடம் இதுமாதிரி கேட்டிருக்கிறார்களா? இன்றைய நற்செய்தியில், யேசுவை எதிர்த்து இதுமாதிரியான் மறைமுக, மேதாவியான, தவறான குற்றச்சாட்டில் ஈடுபட்டார்கள். அவர்கள் யாரெனில் , அவர்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்த மெசியாவை, "பகைவனை அன்பு செய்", கலிலேயாவிலிருந்து வந்த எழை தொழிலாளியை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
"னீ உன்னை யாரென்று நினைக்கிறாய்?" என்று அழுபவர்கள், ஆதங்கபடுபவர்கள் யாரெனில், கடவுளுக்கோ அல்லது சமூகத்திற்கோ சேவை செய்ய நீஙகள்தகுதியானவர்கள் இல்லை என நம்ப மறுப்பவர்கள் ஆவர். அவர்கள் தகுதியை விட நம் தகுதி தாழ்ந்தது என்று நினைப்பவர்கள். அவகளுக்கே இன்னும் தகுதி வேண்டும் என்று நினைப்பவர்கள். இப்படி சவால் விடுபவர்கள், நம்மை ஒதுக்கி தள்ளி விட்டு அவர்கள் வாழ்வை எளிதாக்க முற்படுவார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு இளைய மாது,அவர் வேலை செய்யும் புத்தக கடையில், அவர் வேலை போகும் அளவிற்கு ஒரு ஆபத்தான செயலை செய்தார். அது யாதெனில், சாத்தானின் பைபிளை குப்பையில் தூக்கி எறிந்தார். அவருடைய மேலதிகாரி கண்டுபிடித்தால், அவர் என்ன சொல்வார். "னீ என்ன நினைத்துகொண்டிருக்கிறாய்? , கடையின் புத்தகம் உனக்கு புடிக்க வில்லை என்பதால், தூக்கி எறிவதா?"
னீஙகள் கிறிஸ்துவுக்காக, இது போல் ஆபத்தான செயலை ஏற்பீர்களா?
எனக்கு தெரிந்த போதகர் ஒருவர், வேத புத்தகத்தை மூடி வைத்து விட்டு, உறுதிபூசுதல் வகுப்பு எடுத்தால் ப்ரச்னைக்குள்ளானாரி. புத்தகத்தில் உள்ள் கருத்துகள் மானவர்களை சென்று சேராதபோது, அவர் தன் சொந்த விசுவாச வாழ்வின் அனுபவஙகளை எடுத்து கூறினார், அவர்களோடு பகிர்ந்துகொண்டார். அது அந்த மானவர்களை சென்றடைந்தது. அவர் அதனால் கண்டனத்திற்கு உள்ளானார். "ஏன் கண்டனத்திற்கு உள்ளானார்", அவர் முறைப்படி வகுப்புகள் நடத்தவில்லை என்பதற்காக"னி யாரென்று நினைத்துகொண்டிருக்கிறாய், இயக்குனரின் அதிகாரத்தை மீறி உன் இஷ்டத்திற்கு வகுப்புகள் எடுக்கிறாய்" என்று சொல்வார்கள்.
எப்போதும் , "னி யாரென்று உன்னை நினைத்து கொண்டிருக்கிறாய்" என்ற கேள்வி கேட்கப்பட்டாலோ, தூய அன்பினால் ஊக்குவிக்கபடுவோமானால், மற்றவர்கள் மீட்பின் பால் அக்கறை இருந்தால், மற்றும் கடவுளின் ஆனையை செய்ய விருப்பமிருந்தால். நாம் கிறிஸ்துவை போல் இருக்கிறோம்.
னமக்கு அதிகாரம் கடவுளிடமிருந்து வருகிறது, ஆனால் கவனமாயிருங்கள், ஏசு கிறிஸ்து குறிப்பிடுவது போல், நாம் நம்மையே பெருமைபடுத்திக்கொண்டால், அந்த பாராட்டு, ஒன்றுமில்லாததாக போய்விடும். கட்வுள் தான் நம்மை பெருமைபடுத்துவார், அதுவே கணக்கில் எடுத்து கொள்ளப்படவேண்டும்.
கடவுள் வார்த்தயை கேட்பவர்களே, அவரின் அங்கீகாரத்தை ஏற்றவர்கள் ஆவர். இறைவனின் அங்கீகாரத்திற்காக முயற்சி செய்யுங்கள். கடவுளுக்கு சேவை செய்யவும், அவர் அன்பை மற்றவர்களுக்கு பரவசெய்ய வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை மீண்டும் உறுதிபடுத்தி கொள்ளுங்கள். நீங்கள் செய்வதை ஏற்றுகொள்ளாதவர்களிடமிருந்து வரும் எதிர்ப்புகளை சமாளிப்பீர்களா?
கிற்ஸ்துவிடம், போதுமான சக்தியும், தைரியத்தயும் வேண்டி பெறுவோம். மேலும் இறைவன் உஙகளை பெருமைபடுத்துவதை கேட்கும் சக்தியை, பரிசுத்த ஆவியிடம் வேண்டுவொம்.




யோவான் (அருளப்பர்) நற்செய்தி (http://www.arulvaakku.com)
அதிகாரம் 8
51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 52 யூதர்கள் அவரிடம், ' நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! 53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? ' என்றார்கள். 54 இயேசு மறுமொழியாக, ' நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். 55 ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன். 56 உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார் ' என்றார். 57 யூதர்கள் அவரை நோக்கி, ' உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா? ' என்று கேட்டார்கள். 58 இயேசு அவர்களிடம், ' ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

No comments: