செப்டம்பர் 2 , நற்செய்தி மற்றும் மறையுரை :
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 14
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். 9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். 10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். 11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். 14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
http://www.arulvakku.com/
இன்றைய நற்செய்தி நம்மிடம் ஒரு கேள்வி கேட்க வைக்கிறது. "நான் நல்ல விசயங்கள், சேவைகள் செய்யும்போது என்னுடைய எதிர்பார்ப்புகள் என்ன? (என்னுடைய நோக்கம் என்ன? ) ". "சுய லாபங்களுக்காக" ? சுய நலத்தினால்? .. நம் நோக்கம் ஏதாவது நமக்கு கிடைக்கும் என்று நினைத்து மற்றவர்களுக்கு உதவி செய்தால், அந்த நோக்கம் தவறானது. இது கிறிஸ்துவை போல் வாழும் வாழ்வு அல்ல.
நற்செய்தியின் எடுத்துகாட்டு, நாம் புனித மாக வாழ வேண்டும் என்றால், இயலாதவர்களூக்கு நாம் விருந்து படைக்க வேன்டும் என்று அர்த்தமில்லை. யேசு அதனை சொல்லவில்லை. இந்த எடுத்துகாட்டை அப்படியே எடுத்து கொண்டால், நாம் முக்கியமான விசயத்தை விட்டு விடுகிறோம்.
உண்மையான செய்தி என்னவென்றால், நாம் எது செய்தாலும், நம் சுய லாபத்திற்கு அல்லாமல், அன்பிற்காக செய்ய வேண்டும். நாம் மற்றவர்களுக்கு அவர்கள் நன்மைக்காகவே செய்யவேண்டும். நம்மை எதிர்த்து யாராவது பாவம் செய்தால் கூட, நாம் அவர்களுக்காக, பாவம் விட்டு மாறவேண்டும் என்று கடவுளிடம் வேன்டுகிறோம். நமது ஜெபம், அவர்களுடைய ஆன்மாவிற்காக இருக்க வேண்டும். அதனால் நாம் கடவுளிடம் பெறும் ஆசிர்வாதம், ஒரு ஊக்கமாகும், அதுவே நோக்கமாக இருக்க கூடாது.
நமது நோக்கத்தையும், எதிர்பார்ப்புகளையும், நன்றாக தெரிந்து கொண்டால், நாம் யேசுவை போல் வாழ முடியும், "உனக்குள்ள பலன்களை உயிர்த்தெழும்போது, மிக சரியாக உனக்கு கிடைக்கும்" என்று உறுதியளிக்கிறார். இந்த உறுதியளிப்பின், முழுமை பெறும் நாள், எப்போது , நாம் உயிர்த்தெழுந்த யேசுவை போல வாழ ஆரம்பிக்கிறோமோ அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது.
அப்பப்பொழுது,யேசு நமக்கு கிடைக்கும் அருட்கொடையானது, நம்மை யேசு என்ன வெல்லாம் செய்ய சொல்கிறாரோ, அதனை எந்த ஒரு சுய நலமில்லாமலும், தூய மனத்துடனும், , தாராளமாகவும் செய்ய நம்மை தூண்டுகிறது. மேலும் பல நன்மைகளும், கொடைகளும் பெறுவோம், ஆனால் அதனால் தான், நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கிடையாது.
http://www.gnm.org
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment