Friday, November 2, 2007

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 19

1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். 2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். 3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். 4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். 5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' என்றார். 6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். 7 இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர். 8 சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார். 9 இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் ' என்று சொன்னார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், சக்கேயுவின் மன உறுதியை பாருங்கள். யேசுவை பார்க்க பல வழிகளில் அவருக்கு தடுப்பு உண்டாக்கபட்டது. யேசுவை சுற்றியிருந்த கூட்டம், அவர் அருகில் நுழைய வழி விடவில்லை. மேலும், அவர் குள்ளமானதால், அவரால் தொலைவில் இருந்து பார்க்க முடியவில்லை. இருந்தும் அவர் யேசுவை பார்ப்பதை விடவில்லை. எந்த ஒரு தடையையும், ஏற்று, அவர் விலகவில்லை. மரத்தின் மேல் ஏறி முழுமையாக யேசுவை கண்டார்.

மேலும், யேசுவை காணவேண்டும் என, கடுமையான ஒரு செயலை செய்தார். பயம் ஏதுமின்றி, ஒரு மரத்தின் மேல் ஏறினார். பல தடைகள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்: மரக்கிளை தொங்கி விழலாம், மற்றவர்கள் அவரை கேலியாக பார்க்கலாம், சிலர் அவரை இறங்கசொல்லலாம். மரத்தின் மேல் அவர் தோள்பட்டை தேய்ந்திருக்கலாம். இந்த் தடைகள் எல்லாம், அவரை நிறுத்தவில்லை.

கிறிஸ்துவ வாழ்க்கை, சுலபமானது இல்லை. நாம் எல்லாருமே ஒரு வகையில், ஊனமுற்றவர்கள் தான். - தவறான எண்ணங்கள், தீங்கு உண்டு பன்னுதல், தவறான பயிற்சி அளித்தல், ஆன்மிக விசயத்தில் சோம்பலாய் இருப்பது, பயம் மற்றும் சந்தேக எண்ணங்கள், இன்னும் பல. இவைகளெல்லம், நாம் யேசுவை காண தடையாக இருக்கின்றன. நாம் இறைவனின் உதவிக்காக, ஜெபம் செய்வோம். நமது ஜெபத்தை (அ) வேண்டுதலை இறைவன் பதில் அளிக்க வில்லையெனில், கடவுள் நம்மை நிராகரித்து விட்டார் என எண்ணிகொள்கிறோம். மேலும், எவ்வித நிபந்தனையுமின்றி, மற்றவர்களை அன்பு செய்வதில்லை. சிலர் மீண்டும், மீண்டும், நம்மை தொந்தரவு செய்தால், அவர்களை மன்னிக்க நமது மனம் இடம் கொடுப்பதில்லை. அதனால் யேசுவும், நம்மை மன்னிப்பதில்லை என எண்ணுகிறோம்.


யேசுவை பின் செல்வது என்பது, கஷ்டங்களிடையே நடந்து செல்வது போன்றது, மற்றும், மற்றவர்களின் நிராகரிப்பால், தவறான குற்றசாட்டுகளால், பல கடின சிலுவைகளை நாம் சுமக்கும் போது, யேசு நம்மிடம் வரவில்லை என நினைக்கிறோம். யேசு நம்மை இந்த சோதனைகளிலிருந்து நமக்கு வழி காட்டவில்லை என நினைக்கிறோம். அதற்கு பதிலாக, சக்கேய்உவை போல நாம் இருக்க வேண்டும். யேசுவை முழுமையாக பார்க்க வேண்டும் என்று எண்ணவேண்டும். அவர் செய்தது போல், எல்லா வகையான வழிகளிலும், தடைகளை தான்டி சென்று அவரை பார்க்க வேண்டும். அவர் நிஜமாகவே நமக்கு செய்வதை புரிந்து கொள்ள வேண்டும்.

சக்கேயு மரத்தில் மேல் ஏறியவுடன், யேசு என்ன செய்தார், அவரை பேர் கூப்பிட்டு, அவர் மேல் தனி கவனம் செலுத்தினார். சக்கேயு அவர் அழைத்தலை எவ்வாறு ஏற்றுகொண்டார்? மரத்திலிருந்து கீழே இறங்கி மிகவும் சந்தோசத்துடன் யேசுவை வரவேற்றார். அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார் என்றால், அவரின் பாவங்களுக்கு சன்மானமாக மூன்று மடங்கு தருகிறேன் என்று வாக்கு கொடுத்தார்.

நாம் யேசுவை கண்டவுடன் இதுமாதிரியான, பதிலுரைகள தராவிட்டால், நாம் மேலு உயர சென்று யேசுவைக் காண வேண்டும். ஏனெனில், நமக்குள் இன்னும் பல தடைகள் உள்ளன.

thanks to www.gnm.org coypright by Terry Modica

2 comments:

Unknown said...

i read the message of sunday, 4 th november. It is very useful to me, i am also decide to give my heart to lord jesus.Thanks a lots of your holy services.

arulosai said...

thanks sj.
spread the GOOD NEWS
-arulosai