Friday, December 14, 2007

டிசம்பர் 16 2007, ஞாயிறு , நற்செய்தி மறையுரை:

டிசம்பர் 16 2007, ஞாயிறு , நற்செய்தி மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 11

2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். 3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார். 4 அதற்கு இயேசு மறுமொழியாக, ' நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். 5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் ' என்றார். 7 அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ' நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? 8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். 9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. 11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

thanks to (www.arulvakku.com)


சந்தோசம் தான் இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். இன்றைய முதல் வாசகத்தில் கூறுவது போல " திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்" இது தான் நமது சந்தோசத்திற்கு காரனம் ஆகும். நமது பாவங்களுக்காகவும், அதனுடைய அழிவிலிருந்து நம்மை காக்க மிகபெரிய வெகுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. யேசு அவருடைய மிக பெரிய தியாகத்தாலும், சிலுவையில் அதற்கான வெகுமதியை நமக்காக அளித்தார். இதற்காக தான் யேசு இந்த பூமியில் நம்மில் ஒருவராக பிறந்தார். நமக்கு நித்திய வாழ்வில் ஏற்படவிருந்த மிக பெரிய இழப்பை ஈடு செய்யவும் அதிலிருந்து நம்மை மீட்கவும் யேசு இவ்வுலகில் பிறந்தார். நித்திய வாழ்வில், கடவுளின் அன்பையும், அவரையும் இழக்காமலிருக்க யேசு நமக்காக இந்த தியாகம் செய்தார். நித்திய வாழ்வில் நமக்கு ஏற்படும் இழப்பை ஒப்பிட்டு பார்க்கையில், இன்றைய உலகில் நமக்கு உள்ள ப்ரச்னைகள் எல்லாம் மிகவும் சிறியவை ஆகும்.


யேசுவின் மூலம், நமக்கு கிடைத்த வெற்றியில், எந்த ஒரு பாவமும், நமக்கு எதிராக இல்லை என்பதை உணர்ந்து அறிந்தவுடன், நாம் சந்தோசம் அடைகிறோம். கடவுள் நமக்கு செய்யும் ஒவ்வொரு செயலுமே, நமக்கு பயனுள்ளதாகவே இருக்கிறது. அவர் சாத்தானை நமக்காக தோற்கடித்தார்.

மிகவும் மோசமான நேரங்களில் கூட நாம் யேசுவிடம் நமது வாழ்வை ஒப்படைத்து, அவர் வழியில் சென்றால், அது மிக பெரிய ஆசிர்வாதம் ஆகும். கிறிஸ்துவிலும், அவரை போல வாழ்வதிலும், நமது துன்பங்கள், மற்றவர்களுக்காக நாம் செய்யும் சேவைகள், அவர்களுக்க ஆசிர்வாதம் ஆகும். இதனால், இதன்மூலம், நமது சந்தோசம் பல மடங்கு பெரிதாகும்.

அதனால், கிறிஸ்துவில் நமக்கு கடைசி வரை இன்பம்/சந்தோசம் கிடைக்கிறது. நாம் இந்த சந்தோசத்தினால், மகிழ்ச்சி அடைவோம். வருத்தங்கள், துக்கம் எல்லாம் பறந்து போகும். கருணையும், இரக்கமும், விசுவாசமும் உள்ள கடவுளை நினைத்து நாம் சந்தோசம் அடையும் போது, நமது துன்பங்கள் எல்லாம் ஓடோடி போகும்.

இரண்டாவது வாசகம் குறிப்பிடுவது போல, கடவுள் நமது சோதனைகள வெற்றி கொள்ளும் வரை நாம் காத்திருக்க வேண்டும். சந்தோச மனநிலையுடன் இருக்க, நாம் நமது விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும். கடவுளின் அன்பின் மேலும், அவர் நம் மேல் உள்ள அக்கறையில், துளியும் சந்தேகமில்லாமல் இருக்க வேன்டும். மேலும் நாம் குற்றம் சொல்லக்கூடாது. குறை கூற கூடாது. ஏனெனில் குறை சொல்வது என்பது, நாம் க்டவுளை நம்பவில்லை என்று அர்த்தம். நாம் கடவுளை விட பெரியவன் என்ற எண்ணம் வரும், எப்படி நமது ப்ரச்னைகளை நாம் தீர்க்கமுடியும் என்ற எண்ணம் வரும்.

கடவுள், நம்மை உண்மையாக பார்த்துகொள்கிறார், நமது நன்மைகளூக்காக உழைக்கிறார் என்கிற நல்ல செய்தியை கேட்கும்ப்போது, நாம் மகிழ்ச்சியடைகிறோம். அந்த மகிழ்ச்சியில் இருத்து நமக்கு சந்தோசம் கிடைக்கிறது. யேசு நற்செய்தியில் கூறுவது போல "என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்",அதனால், நாமெல்லாம் இறைவனின் ஆசிர்வாதத்தை அடைகிறோம்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: