Friday, December 21, 2007

டிசம்பர் 23 2007 , மறையுரை நற்செய்தி:

டிசம்பர் 23 2007 , மறையுரை நற்செய்தி:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 1

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ' யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ' என்றார். 22 ' இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23 இம்மானுவேல் என்றால் ' கடவுள் நம்முடன் இருக்கிறார் ' என்பது பொருள். 24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.



thanks to www.arulvakku.com


அன்பு தான் இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். அன்பின் முழு அர்த்தத்தை இன்றைய முதல் வாசகத்தில் வரும் பெயரிலும், நற்செய்தியில், இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியதாக குறிப்பிடுவதிலும் பார்க்கிறோம்: இம்மானுவேல், அதன் பொருள் "கடவுள் நம்முடன் இருக்கிறார்". அன்பை அடைவதற்கான பொருள் கடவுள் நம்மோடு இருப்பது. அன்பை கொடுப்பது என்பது நம்மிடம் உள்ள கடவுளை மற்றவர்களுக்கு கொடுப்பது.

மற்றவர்களை அன்பு செய்ய உன்னிடம் ஏதுமில்லை என என்றாவது நீ நினைத்தது உண்டா? இதுமாதிர் என்றும் நடப்பதில்லை. அன்பான கடவுள் நம்மிடையே இருப்பதால், நாம் நினைப்பதை விட இன்னும் அதிகமாக அன்பை கொடுக்கலாம். சில நேரங்களில், நாம் செலுத்து அன்பின் அளவிற்கு, நமக்கு அன்பு கிடைக்காமல் போகலாம், அதனால் நாம் உறசாகம் இழந்துவிடுவோம். இன்னமும் கூட, நம்மை வேதனையுற செய்பவர்களை நாம் இழிவுபடுத்துவ்வொம். இதனால் நாம் அந்த மனிதருக்கு அன்பு செலுத்த இயலாமல் போகலாம்.
இது மாதிரியான தருணங்களில் தான் நாம் கடவுளின் மிக பெரிய அன்பையும், நமது பகைவர்களிடம் அன்பு செய்யும் ஆற்றலையும் கேட்க வேண்டும். இந்த வேண்டுதலுக்கு எப்போதுமே ஆண்டவரின் அருள் கிடைக்கும். இப்படித்தான், நாம் கடவுளின் தூதுவராக இருந்து, அவரின் அன்பை பரப்பவேஎண்டும். அன்பு செய்ய கடினப்படுபவர்களிடம், நாம் கடவுளின் அன்பை கொடுத்தால், நம்மிடம் உள்ள கடவுளை அவர்களுக்கு அறிமுகபடுத்துகிறோம்.

நாம் எதிர்பார்க்கும் அன்பு நமக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் போது, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் ஞாபக படுத்திகொள்ள வேண்டும். நாம் இம்மானுவேலை கூப்பிடவேண்டும். ஏற்கனவே முழுமையாகவும், எவ்வித நிபந்தனையுமின்றி கடவுள் நம்மிடையே இருக்கிறார். நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் குறைவாக நமக்கு அன்பு கிடைப்பதால், நாம் சோர்ந்து போகிறோம். அந்த நேரங்களில், யேசுவை நோக்கி நம் பார்வை செல்லட்டும். யேசு நம்மிடம் அன்பின் இடைவெளையை நிரப்புவார். இம்மானுவேல். இந்த பெயரைதான் வருடம் முழுதும், நாம் உபயோகிக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கான உங்கள் தயாரிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள நீங்கள், இம்மானுவேலை நோக்கி உங்கள் பார்வைகள் இருக்கட்டும். இம்மானுவேலுக்கு பாட்டு பாடுங்கள், இம்மானுவேலிடம் ஜெபம் செய்யுங்கள். உஙகளுக்கு இந்த பெயர்தான், கடவுளின் தனிப்பட்ட அன்பளிப்பாகும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: