Saturday, December 29, 2007

30 ஜனவரி 2007 நற்செய்தி - மறையுரை:

30 ஜனவரி 2007 நற்செய்தி - மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 2

13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் ' என்றார். 14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார். 21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். 22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். 23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″ நசரேயன் ″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

thanks www.aruvakku.com



இன்றைய ஞாயிறு திருக்குடும்ப ஞாயிறு. அதோடு சேர்ந்து நாமும் நம் குடும்ப விழாவாகவும் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்களும், நற்செய்தியும், நாம் எப்படி திருக்குடும்பமாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனை கொடுக்கிறது.

முதல் வாசகம் பெற்றோர்களை மரியாதையுடனும், போற்றுதலுடனும் பார்த்துகொள்ள வேண்டும் என்று சிறுவர்களுக்கு (குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களூக்கும்) சொல்கிறது. . பெரியவர்களிடமும், பெற்றோர்களிடமும் அனுசரனையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அவர்கள் பெரிய்வர்களானது, தெளிவில்லாமலும், பலவீனமாயும் இருக்கும்போது அவர்களிடம் கரிசனையோடு இருக்கவேண்டும், அவர்கள் உங்களை அன்பு செய்யாமல் இருந்தால் கூட அவர்களிடம் கோபிக்காமல், அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு எல்ல நேரங்களிலும் கீழ் படிய வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த வாசங்களில் என்கும் "கீழ்படி" என்று கூறவில்லை.

நாம் கடவுள் ஒருவருக்கு மட்டும் தான் கீழ்படிய வேண்டும். நமது பெற்றோர்கள் கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ அதைதான் நமக்கு கட்டளை இடுகின்றனர். மேலும் கடவுள் நம் பெற்றோருக்கு கீழ்படிய சொல்கின்றார். ஆனால், பெற்றோர்கள் கடவுளுக்கு கீழ்படியவில்லை என்றால், அவர்களை நாம் பின் சென்று, பாவத்தில் விழ வேண்டியதில்லை. அவர்கள் கடவுள் படைத்த மனிதனாய், நாம் மரியாதையும் போற்றுதலும் செய்யவேண்டும், ஆனால் அவர்கள் பாவங்களை நாம் மதிப்பதோ, அல்லது பின் செல்வதோ வேண்டியதில்லை.

இரண்டாவது வாசகம்: "உண்மையான அன்புடனும், சரியான பந்தத்துடனும்" கட்டுண்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும், கிறிஸ்துவின் அமைதியின் கட்டுக்குள் இருக்கவேண்டும் என்று சொல்கிறது. எப்படி இருப்பது? , புனித ப்ரான்சிஸ் இவ்வாறு கூறுகிறார். "அவசரபடாதீர்கள்; ஒவ்வொரு விசயங்களையும் அமைதியாக செய்யுங்கள். உங்களது உள் அமைதியை எதற்காகவும் விட்டு விட வேண்டாம். உங்கள் முழு உலகமே ப்ரசனை கொடுத்தாலும் உள் அமைதியோடு இருங்கள்"

வசனம் 18, மனைவிகளும், கணவர்களூக்கு கீழ்படிய வேண்டும் என்று கூறவில்லை. "கீழ்படிதல்" என்ற வார்த்தையை எடுத்து விட்டு, "மரியாதை" என்ற வார்த்தையை போட்டுகொள்ளுங்கள். கடவுள் கனவரை குடும்பத்தின் காவலனாக நியமித்துள்ளார். (அதனால் தான் மேரிக்கு பதிலாக சூசையப்பருக்கு கனவில் கட்டளை வந்தது என்று நற்செய்தி கூறுகிறது). தெய்வீக காவலாகவும் கனவன் இருக்க வேண்டும். (இது கடவுளை பற்றி குடும்பத்துக்கு எடுத்து சொல்லி அனைவரையும் மோட்சத்திற்கு அழைத்து செல்ல்வேண்டும்). கடவுளின் படைப்பான கனவனுக்கு மனைவி மரியாதை செலுத்தவம், அவளையே கனவனின் காவலில் தன்னை ஈடுபடுத்திகொள்கிறாள். அது தான் கடவுளின் பாதுகாவலாகும்.

மேலும் கணவன் மனைவியை அன்பு செய்ய கடமைபட்டிருக்கிறார். ஏன் மனைவியை கனவனை அன்பு செய்ய வேன்டும் என்று கூறவில்லை? ஏனெனில், இயற்கையாகவே பெண் ஆனவள், கணிவாக அனைவரையும் பார்த்து கொள்பவள். ஆனால், ஆன், காவலாளியாக படைக்கபட்டவன், அவனிடம் போர்க்குணம் தன் இருக்கும், அதனால் தான் கடவுள் அவனிடம் மனைவியிடம் அன்பு செய் என்ரு கூறுகிறார். புனிதத்துடன் இருக்க, கணவன் போர்குணத்தையும் , தனக்கு காவலாய் இருக்கம் எண்னத்தயும் விட்டு, மற்றவர்களுக்காக யேசு செய்த தியாகம் போல தானும் தியாகம் செய்ய வேண்டும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: