மறையுரை டிசம்பர் 9 2007
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 3
1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, 2 ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' என்று பறைசாற்றி வந்தார். 3 இவரைக் குறித்தே, ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். 4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். 5 எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். 6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள். 7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, ' விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? 8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். 9 ″ ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை ″ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். 10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். 11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.
www.arulvakku.com
மறையுரை
அமைதிதான், இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். முதல் வாசகம், மெசியா யேசு கிறிஸ்து, டேவிட் அரசர் வழிமுறையில் வந்தவர் என்பதை விவரிக்கிறது. மேலும், எப்படி அமைதி பெறுவது என்பதை விளக்குகிறது. எப்படி சோதனைகளிலும், வேதனைகளிலும் அமைதியோடு இருப்பது என்று கூறுகிறது. "ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்" இது மிகவும் இயற்கையான செயலாகும். நீங்கள் எப்போதாவது பரிசுத்த ஆவி உங்கள் மேல் தங்கியிருக்கிறார் என்று எண்ணியதுண்டா?
நாம் கடவுளோடு சேர்ந்து அவரில் இணைத்து கொண்டால் தான் நாம் உண்மையான அமைதியை அனுபவிப்போம். அது எப்படி என்றால், கடவுளின் வழியை, அவருடைய திட்டங்களை கடைபிடிக்கும் போது எவ்வித போராட்டமும், தோல்வியுமின்றி இருக்க வேண்டும். நாம் மற்றவர்களோடு நடத்து போராட்டத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாலோ, நமது பண ப்ரச்னைகளிலிருந்து மீண்டு வருவதாலோ, உடல் நோயிலிருந்து சுகமடைவதாலோ அமைதி போவதில்லை. அமைதி இவைகளையெல்லாம் சார்ந்திருப்பதில்லை. நாம் அமைதிக்காக, மிகவும் கடினமாக உழைத்து, சோதனைகளிலிருந்து, போராட்டங்களிலிருந்து, வெற்றி பெற்றாலும், அமைதி நம்மில் கிடைப்பதில்லை.
பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு கிடைக்கும்,ஞானமும், புரிந்துணர்வின் மூலம் நமக்கு அமைதி கிடைக்கிறது. கடவுள் நமக்கு என்ன தெரிய வேண்டும் என நினைக்கிராறோ, அவருடைய முழு அதிகாரத்தை ஏற்றுகொண்டு, அவரிடம் கீழ்படிந்து,வாழ்தல் வேன்டும். இந்த உண்மைகளை ஏற்றுகொண்டு வாழ்வதால், அமைதி வருகிறது.
இன்றைய நற்செய்தியில், ஞானஸ்நானம் கொடுக்கும் யோவான், "2 ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' " மேலும், கடவுள் வருவதற்கான பாதையை செம்மைபடுத்துங்கள் " என்று கூறுகிறார். கடவுளின் ஆவியையும், அமைதியையும் பெறுவதற்கும், திருப்பலியில், யேசுவோடு சேர்வதற்கு, நாம் நம்மையே தயார்படுத்த வேண்டும். எல்லா வழிகளிலும், அவர் நம்மை எப்படி ஏற்றுகொள்வாரோ அவ்வாறு நாம் அவரிடம் தஞ்சம் அடைய வேண்டும். எப்பட்? நமது பாவங்களை கண்டறிந்து, மணம் திரும்பி, நமது கோணலான பாதையை நேராக்க வேண்டும். நாம் யேசுவை பார்ப்பதற்கு தடையாக இருக்கும் தடைகளை தூக்கி எறிய வேண்டும். நமது தீய எண்ணங்களையும், தவறான ஆர்வத்திற்கு தடை கொடுங்கள். அப்போது தான் நாம் அமைதியை தேடி செல்ல முடியும்.
எதுவெல்லாம், கடவுளின் அமைதியையும் நம்மையும் பிரிக்கிறதோ, அதனையெல்லாம், தூக்கி எறிய வேண்டும். திருப்பலியின் மூலமும், பாவ சங்கீர்த்தனத்தின் மூலமாகவோ நாம் அந்த பாவங்களை தூக்கி எறிய வேண்டும். சின்ன பாவமோ கூட இருந்தாலும் நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து கடவுளோடு சேரவேண்டும்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
thanhs
Post a Comment