ஜனவரி 13, 2008 நற்செய்தி - மறையுரை:
எசாயா
அதிகாரம் 42
1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். 2 அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். 3 நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். 4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். 5 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். 6 அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். 7 நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். 8 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 3
13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். 14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார். 15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். 16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். 17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
இன்றைய ஞாயிறு, நாம் "ஞானஸ்நாணம்" மற்றும் "திருமுழுக்கு " திருவிழாவை கொண்டாடுகிறோம். இதன் பிறகு தான் யேசு அவருடைய சமுக தொன்டையும், நற்செய்தி அறிவித்தலையும் தொடங்கினார். நாம் ஞானஸ்நாணம் பெற்றபோது, இதே அனுபவத்தை அடைந்தோம். நமது முதல் அருட்சாதனம், நம்மை கிறிஸ்துவின் வாழ்வில் மூழ்க செய்கிறது. அதற்கு அடுத்த இரண்டு அருட்சாதனமும் ( புது நண்மை, உறுதிபூசுதல்) , நமது புனித வாழ்வையும், மேலும் அதனுடன் வாழ நமக்கு அதிகாரத்தையும் தருகின்றன. "இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்" இதையே தான், கடவுள் இசையாஸ் இறைவாக்கினர் மூலம் நமக்கு கூறுகிறார்.
கடவுளுக்கு பிடிக்கும் செயலை, உன் மூலம் செய்ய பரிசுத்த ஆவி உன்னை தூண்டிவிடுகிறார். அது என்ன செயல்?. பரிசுத்த ஆவி உன் மூலம் கடவுளரசிற்கு எப்படி சேவை செய்கிறார்? நீ பரிசுத்த ஆவிக்கு உன் மூலம் கிறிஸ்துவின் சேவை செய்ய எல்லா சுதந்திரமும் கொடுக்கிறாயா?
இதற்காக தான் உனக்கு திருமுழுக்கு கொடுக்கபட்டது, ஆனல், உனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களும், நீ எதிர்கொண்ட கஷ்டங்களும், உன்னை குறிப்பான சில சேவைகளில் மட்டும் ஈர்க்க செய்கிறது. இதனால் தான், பல நாள் நோய்வாய்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் மருத்துவர்களாகவோ அல்லது நர்ஸ்களாகவோ சேவை செய்கிறார்கள். மேலும் பிறரால் ஏமாற்றபட்டவர்கள், துஷ்ப்ரயோகம் செய்யபட்டவர்கள், இது மாதிரி பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் சேவை செய்கிறார்கள். மேலும் முதலாளிகளால் ஏமாற்றபட்டவர்கள் , அவர்களே தொழில் தொடங்கி பல ஊழியர்களுக்கு நல்ல முதலாளிகளாக இருக்கிறார்கள். இவையெல்லாமே கிறிஸ்துவாய் இவர்கள் செய்கிறார்கள்.
நீ எதையெல்லாம் செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, அதையெல்லம் கிறிஸ்துவின் விருப்பமாய், நீ திருமுழுக்கின் போது உனக்கு கிடைத்தது. நீ கொஞ்சம் அந்த விருப்ப்த்தில் அக்கறை செலுத்தினால், புது நண்மை அருட்சாதனத்தில் அது புதுபிக்கப்படுகிறது. ஏனெனில் நற்கருணையில் வாழும் கிறிஸ்துவால், உன்னை அவரது சேவையில் மீண்டும் சேர்க்கிறார். இந்த ஆசிர்வாதத்தை, கிறிஸ்துவின் சேவையை கோவிலிலுருந்து நீ எடுத்து சென்றால், யேசு ஒரு காலத்தில் செய்தது போல், உன்னால் இந்த உலகை மாற்ற முடியும்.
மேலும் நீ என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, கடவுள் உன்னை என்ன செய்ய வேண்டும் என விரும்பினாரோ, அதை செய்ய முடியாமல் போகும்போது, செயல்குலைந்து போகும்போது, நீ அதற்கு தயார்படுத்தபட்டிருக்கிறாய். எந்த தடையுமில்லை. நீ தந்தையால் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறாய். அவர் நெஞ்சம் உன்னால் பூரிப்படைகிறது.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment