Saturday, January 5, 2008

ஞாயிறு ஜனவரி 6 2008, நற்செய்தி - மறையுரை:

ஞாயிறு ஜனவரி 6 2008, நற்செய்தி - மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 1

1 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: 2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். 3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். 4 இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். 5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். 6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். 7 சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. 8 ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. 9 உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. 10 எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. 11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். 12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். 13 செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். 14 அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. 15 எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. 17 ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு. 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ' யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ' என்றார். 22 ' இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23 இம்மானுவேல் என்றால் ' கடவுள் நம்முடன் இருக்கிறார் ' என்பது பொருள். 24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.


http://arulvakku.com thanks


இன்றைய ஞாயிறில், மூன்று ஞானிகளும், குழந்தை யேசுவை வணங்கி ஆராதித்ததை கொண்டாடுகிறோம். இந்த ஞானிகள் யூதர்கள் இல்லை. அவர்கள் யூதர்களின் அரசனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் தான் இன்றைய கொண்டாட்டம் இருக்கிறது. யேசுவின் முக்கியத்துவத்தை, அதனை முழுமையாக புரிந்து கொள்ளாமலேயே, அவரை நம்பினவர்கள் இந்த ஞானிகள். இவர்களே நமக்கும், இந்த உலகத்திற்கும் யேசுவை நம்புவதற்கு நல்ல எடுத்துகாட்டு.


அவர்கள் யேசு எவ்வாறு அரசராக போகிறார்? எப்படி இந்த உலகை மாற்ற போகிறார் என்பதை அறியாமலேயே யேசுவை வணங்கினார்கள். உண்மையை அறியும் ஞானிகளாக, அவர்கள் பல வேத நூல்களை படித்து, ஆராய்ந்து தெரிந்து, அவர்கள் பழக்க வழக்கங்களையும் தாண்டி அவர்கள் பல விசயங்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் கடவுளின் ஆவியின் கட்டளையின் படி நடந்து கொண்டனர். அது அவர்கள் வாழ்வை மாற்றியது.

கடவுளின் ஆவிதான் ஒருவரை விசுவாசம் செய்ய வைக்கிறது. ஏனெனில் விசுவாசம் பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு ஆகும். (கொரிந்தியர் அதிகாரம் 12). இன்றைய விழாவின் அர்த்தமே "கண்டறிதல்" ஆகும். இந்த வெளிப்பாடு தான் நம் வாழ்வை மாற்றுகிறது.இந்த விழாவே இறைவன் நமக்கு அன்பளிப்பாக கொடுத்தது. ஏனெனில் அது நமக்கு தேவை.

ஞானிகள் குழந்தை யேசுவின் அருகில் இருந்த போது, எப்படிபட்ட உணர்வுடன் இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். எப்படி இந்த குழந்தை இவ்வளவு ஏழ்மையான குடும்பத்த்தில் பிறந்து, யாருக்கும் தெரியாத குடும்பம், எப்படி அரசராக முடியும், என்றெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே, அவர்கள் வாழ்னாள் முழுதும் அந்த குழந்தை யேசுவை நிணைத்து கொண்டு இருந்தார்கள். மேலும், இஸ்ரேயல் நாட்டிலிருந்து வரும் செய்திகள கேட்டு கொண்டிருந்தார்கள். யேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கேட்டறிந்தார்கள். யேசுவின் சீடர்கள் அதனை எல்லோருக்கும் எடுத்து சொல்லிவருவதையும் அறிந்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை பின்பற்றி கிறிஸ்தவர்களாக மாறியதையும், அவர்கள் பொருட்கள் அனைத்தும், வரலாற்று சின்னமாக உள்ளது. அவைகள் அனைத்து வணக்கத்துடன், கிறிஸ்துவின் காலத்திலிருந்து போற்றி பாதுகாக்கபடுகிறது.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

1 comment:

Anonymous said...

Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.