20 ஜனவரி ஞாயிறு 2008 - மறையுரை:
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 1
29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். 30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். 31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார். 32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். 33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)
ஒவ்வொரு திருப்பலியிலும், "இவரே கடவுளின் செம்மறி, இந்த உலகின் பாவங்களை போக்குபவர்" என்று குருவானவர் கூறுவதை கேட்கிறோம். இதனை ஸ்நாபக அருளப்பர்தான் முதன் முதலில் கூறினார். இதற்கு பதிலுரையாக நாம் "இறைவா நீ என்னுள்ளத்தில் வர நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆன்மா குண்மடையும்" என்று கூறுகிறோம்.
இந்த குண்மடைதலால், நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலை அடைகிறோம். நமது ஞானஸ்நானத்தினாலும், திருப்பலியின் ஆரம்பத்தில், நாம் செய்யும் பாவ மன்னிப்பு சடங்கினாலும், நமது பாவங்களிலிருந்து முழுதுமாக நாம் விடுதலை அடைகிறோம். இந்த ஆண்ம குணமடைதலால், நாம் யேசுவை முழுதுமாக தெய்வீகத்துடனும், முழு உடலோடும் நாம் பெறுகிறோம். பிறகு, ஸ்நாபக அருளப்பரை போல, நாமும் இந்த உலகிற்கு யேசுவின் சாட்சியாய், "நான் யேசுவை பார்த்தேன், அவர் தான் கடவுளின் மகன்" என்று கூறி கோவிலை விட்டு செல்லலாம். ஆனால், இது மாதிரியான மனப்பான்மையோடுதான் நாம் ஒவ்வொருதிருப்பலியையும் விட்டு வருகிறோமோ?
இப்படி நடக்கவில்லையென்றால், நாம் திருப்பலியில் ஒழுங்காக கவனம் செலுத்தவில்லையென்று அர்த்தம். திருப்பலியின் ஒவ்வொரு பகுதியிலும், யேசு இருக்கிறார். பாவ மன்னிப்பில், நாம் நமது பாவங்களை முழுதுமாக ஏற்று, அதற்காக மன்னிப்பு கேட்கும் போது அங்கு யேசு இருக்கிறார். ஒவ்வொரு வாசகத்தில், நற்செய்தியிலும், ஒவ்வொரு வார்த்தைகளிலும் ப்ரெட்டை போல நமது ஆன்மாவுக்கு ஊட்டமளிக்கிறது. நமது ஆண்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது. பிரசங்கம் நன்றாக இல்லை என்றாலும், அல்லது திருப்பலியில் பிரசங்கம் இல்லைஎன்றாலும் , பரிசுத்த ஆவி, நமக்கு தனியாக பிரசங்கம் / மறையுரை கொடுக்கிறார். மேலும் ஒவ்வொரு ஜெபத்திலும் யேசு நம்மோடு இருக்கிறார்.
திருப்பலியின் ஒவ்வொரு அங்கமும், நம்மை மணமாற்றி, உண்மையான யேசுவின் ப்ரசன்னட்த்திற்கு சாட்சியாக நம்மை தயார்படுத்தி , கோவிலிலிருந்து நம்மை இந்த உலகிற்கு அனுப்புகிறது. ஸ்நாபக அருளப்பரை போல "நான் அவரை அறியேன்" என்று நாம் கூறலாம். இல்லையென்றால், "நான் நண்மையும், திராட்சை ரசத்தையும் தான் பார்த்தேன்" என்று கூறலாம். அல்லது "நான் பாவி, நான் செய்த இழப்பை அறியேன்" அல்லது, "நான் பாதிக்கபட்டவன், எனது காயங்களை எப்படி குணப்படுத்துவது என்று தெரியவில்லை " என்று கூறலாம்.
நாமும் யோவான் கூறியது போல, ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். 33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்' என நாமும் சான்று கூறலாம். "பரிசுத்த ஆவிதான் எனக்கு உதவி பெறும் இடத்தை காட்டினார், அதன் மூலம், எனது காயங்கள் குண்மடந்தன" என்று சான்று பகருங்கள்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, January 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment