Friday, January 25, 2008

27 ஜனவரி 2008, நற்செய்தி - மறையுரை:

27 ஜனவரி 2008, நற்செய்தி - மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 4

12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். 13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். 14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: 15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! 16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. ' 17 அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றத் தொடங்கினார். 18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். 19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். 20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். 21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள். 23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.


(thanks to www.aruvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், முதல் வாசகத்தில் இசையாஸ் கூறியதை, நற்செய்தியில் முழுமையடைந்ததை கேட்கிறோம். உனக்கு தெரிந்த நண்பர்கள், இன்றும் தனது இருளான வாழ்க்கையில் இருந்து கொண்டு, திருந்துவதற்கான எவ்வித முயற்சியுமில்லாமல், உனக்கு மிகவும் துயரம் கொடுத்தவர்கள், யேச்வினால், அவர்கள் ஒளியின் வெளிச்சம் பார்ப்பர். அது அவர்களை குணப்படுத்தும்.

உனது வேண்டுதலாலும், ஜெபத்தினாலும், விசுவாசமிக்க அன்பினாலும், யேசு அவர்களுக்கு வெளிபடுத்தபடுகிறார். அவர்கள் உண்மைக்கு எதிராக செயல்பட்டு, யேசுவிடமிருந்து மறைய முயற்சித்தாலும் யேசுவின் மகத்தான மிகப்பெரிய ஒளி வெள்ளத்தை யாராலும் அனைக்க முடியாது. மிக விரைவாகவோ, அல்லது வரும் காலங்களில், அந்த ஒளி வெள்ளம், ஏராளானமாக சந்தோசத்தையும், அபரிதமான மகிழ்ச்சியையும் உங்களுக்கும், யாரெல்லாம் மீட்கபட்டார்களோ, அவர்களுக்கும் கொடுக்கும்.

"மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்." இவ்வாறு லூக்காஸ் நற்செய்தியில் யேசு தனது எண்ண உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நீயும், அவ்வாறு உணர்கிறாய் என்பதை யேசுவும் அறிவார். ஆனால் அவரது வேதணை மிகவும் ஆழமானது. அதனால், உனக்கு தெரிவதை விட, உனது கற்பணையை விட, யேசு அதிகமாகவே செய்கிறார் என்ற நம்பிக்கையுடன் இரு. நீ எந்த விசயத்தில் வெற்றியடையா வேண்டும் என்று ஜெபித்தாயோ, அதற்காக நிறைய யேசு செய்து கொண்டிருக்கிறார், என்ற உறுதியுடன் இரு. இந்த வெற்றியை 2000 வருடங்களுக்கு முன்பே யேசு பெற்றார். மேலும் இப்பொழுது, எல்லாவிததிலும், அவரால், செய்ய முடிந்த, முடியாத காரியங்களையும் செய்து, உனது வேண்டுதலை நிறைவேற்றுவார்.

பாவத்தில் விழுந்தவர்களின் பிடிவாதமான எதிர்ப்பால் வரும் விளைவுகளை தெய்வ அருளால் உணர்த்த வேண்டும் என ஜெபியுங்கள், அதன் மூலம் அவர்கள் இறைவனிடத்தில் வருவார்கள். யார் மூலமாவது, அல்லது ஏதாவது ஒரு தூதுவ கருவியின் மூலம் கடவுளின் ஒளிக்கு அவர்களை கொண்டு வர வேண்டும் என இறைவனிடம் ப்ரார்த்தனை செய்யுங்கள். அவர்களுடைய தெய்வீக எதிர்ப்பிற்கு, நாம் நினைக்கும் வழியைவிட, கடவுளின் வழியிலேயே, அவர்கள் எதிர்ப்பை நிர்மூலமாக்கவேண்டும் என வேண்டுங்கள். அவர்களுடைய மணமாற்றத்திற்கு பிறகு, இறைவனின் ஒளியை மற்றவர்களுக்கு மிகுந்த சக்தியுடன் பரப்பவேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்ய்ங்கள். மேலும் இந்த மணமாற்றம்,ஆழமானதாகவும், நிச்சயமானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள்.

கடவுளின் மனதை மாற்ற நாம் ஜெபம் செய்ய வில்லை என்பதை மணதில் நிணைத்து கொள்ளவும். அவர் ஏற்கனவே இருளில் இருக்கும் அன்பர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார். நாம் அவர்களை கடவுளின் கரத்தில் எடுத்து வைக்கிறோம். ஏனெனில், அவர்களே அதனை கடவுளிடம் கேட்பதில்லை.



© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: