ஏப்ரல் 20 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஈஸ்டர் 5வது ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 14
1 மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். 2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா? 3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ' என்றார். 5 தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார். 6 இயேசு அவரிடம், ' வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் ' என்றார். 8 அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார். 9 இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)
"நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்" என்று இன்றைய நற்செய்தி முடிகிறது. யேசு எந்த அர்த்தத்தில் இதனை சொல்கிறார். நாம் எப்படி யேசுவைவிட, அவர் செய்ததைவிட அதிசயங்களையும், தெய்வீக காரியங்களையும் செய்ய முடியும். இதற்கான பதில் இந்த நற்செய்தியின் அதிகாரத்தில் முழுதுமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. யேசு கடவுளோடு உள்ள நெரூங்கிய உறவையும், அவரோடு சேர்ந்து செய்யும் செயல்களையும் கூறுகிறார். யேசு எல்லா செயல்களையும், கடவுளோடு சேர்ந்து செய்கிறார். யேசு மனிதனாகவும் தெய்வமாகவும் இருந்தார். இந்த வசனங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
"நான செய்யும் செயல்கள்" என்று கூறுவது, அவர் மனிதனாக இருந்து கடவுளுக்காக செய்த செயல்களை குறிக்கிறது. அதே செயல்களை, கடவுள் நம் மேல் வைத்த அன்பின் பொருட்டு, நாமும் கடவுளுக்காக செய்யலாம்.
கடவுளின் அன்பினை பெற்ற, அவரின் குழந்தகளாகிய நாம், கடவுள் மற்றவர்களை அன்பு செய்வது போல, நாமும் அன்பு செய்கிறோம். நாம் என்ன கற்றுகொண்டோமோ, அதனை மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கிறோம். நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்கள் நம்முடன் அவர்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போதே, நாம் அவர்களுக்கு காது கொடுத்து, கேட்டு, அவர்களின் உணர்வுகளை , கவலைகள புரிந்து கொள்கிறோம். மேலும், நமது தின வேலையை முழுதுமாக செய்து, மற்றும், அருகில் இருப்பவர்களுக்கு அவர்களின் தேவையை உணர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வது. இன்னும் பல. இந்த செயலகள் எல்லாம் தெய்வீக செயல்கள் அல்ல. இவையெல்லாம், அன்பு தந்தையின், மனித குழந்தைகளாக நாம் செய்வது.
மிக பெரிய, அதிசய செயல்கள் எல்லாம், யேசு தெய்வீக நிலையில், கடவுளோடு சேர்ந்து செய்தவை. அவையெல்லாம் கடவுள் யேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள். ஏனெனில், கடவுளின் அன்பும், யேசுவின் அன்பும், ஒரே அன்பு ஆகும்.
யேசு, அவரையே, நம் பாவங்களுக்காக, சிலுவை தன்டனையில் அர்ப்பனித்து, கடவுள் அந்த மரணத்திலிருந்து யேசு எழுந்தருள செய்த பின், யேசு அவருடைய தெய்வீகத்தை , நமக்கு கொடுத்தார். அதனை கொண்டு நாம் யேசுவின் பணியை தொடர வேண்டும் என்று நமக்கு அருளினார். கடவுளின் தெய்வீகத்தை நாம் ஞானஸ்நானத்தின் போது பெற்றோம். கடவுள் நம் மூலமாக, அவரை இந்த உலகுக்கு எடுத்து செல்கிறார்.கடவுளோடு, நாம் அன்பிற்கு ஏங்குபவர்களுக்கு அன்பு செலுத்தலாம். புனித அதசயங்கள் நிகழ நாம் கருவிகளாக இருக்கலாம். கடவுள் என்ன பேசுகிறார் என்று நாம் கேட்டு, அவரின் ஞானத்தையும், அனுசரனையையும், நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நமக்கு என்ன குறைகள் இருந்தாலும், கடவுள் எதனை செய்ய சொன்னாலும், நாம் செய்யலாம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, April 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment