Friday, April 4, 2008

ஏப்ரல் 6 2008 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 6 2008 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஈஸ்டர் 3 வது ஞாயிறு

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 24

13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வ+ரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. 17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். 18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார். 19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். 20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. 22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; 23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். 24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள். 25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! 26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார். 27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். 28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். 30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். 31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். 32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள். 33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். 34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள். 35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் வரும் இரு சீடர்களும், யேசுவை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. யேசு இறைவாக்கினரின் நூல்களில் உள்ள வசனத்தை சொல்லியதும், பிறகு, அப்பத்தை எடுத்து கடவுளை போற்றி பிட்டு கொடுத்ததும் தான், அவ்விரு சீடர்களின் கண்களும் திறந்தது. இது இரண்டு பகுதிகளாக நடந்த செயல்முறையாகும். முதலில் இறைவாக்கினரின் வசனத்தை கேட்ட பின்பு, அவர்கள் இதயம், யேசுவை அறிந்து கொண்டது, ஆனால், கண்களால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. (அவர்கள் இதயம் பற்றி ஏறிந்தது). இரண்டாவது பகுதி, யேசு அப்பத்தை எடுத்து, கடவுளை போற்றி, அதை பிட்டு கொடுத்தபோது தான் அவர்களின் கண்கள் திறந்து கொண்டது.


இப்போது, நாம் திருப்பலியில் பங்கு கொள்ளும்போது, நாம் யேசுவோடு இதேபோல ஒரு பயணம் செல்கிறோம். முதலில் நாம் இறைவார்த்தை கேட்கும் பகுதியில் செல்கிறோம்.அதன் பிறகு ப்ரசங்கம் நடக்கிறது, அதில் நற்செய்தி விளக்கமளிக்கபடுகிறது. இப்போது, நாம் நமது முழு இதயத்தோடு, நற்செய்தியையும், ப்ரசங்கத்தையும் கேட்க வேண்டும்.

நன்கு பயிற்சி பெற்ற சகோதரர், சகோதரிகள் வாசகத்தை, அதற்குரிய அர்த்தத்துடன், வாசிக்கும்போது, நமது இதயம் யேசுவை அறிந்து கொள்ளமுடியும். நன்கு பயிற்சி பெற்ற பாதிரியாரோ அல்லது டீகண் நமக்கு அந்த நற்செய்தியை பற்றி விளக்கமளிப்பார்கள். ஒருவேளை அவர்கள் நல்ல ப்ரசங்கம் செய்யாவிட்டால் கூட, நமது இதயம் யேசு என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியும்.

அதன் பிறகு, நாம் நற்கருணை வழிபாட்டிற்கு செல்கிறோம். திருப்பலியில், குருவானவர், அப்பத்தையும், திராட்சை இரசத்தையும், புனிதமாக்கும்போதும், யேசுவேதான் அதனை செய்கிறார். குருவானவரின் கைகளையும், குரலையும் உபயோகித்து யேசுவே தான் அந்த அப்பத்தையும் இரசத்தையும் புனிதப்படுத்துகிறார். யேசு எப்படி அந்த இரண்டு சீடர்களுக்கும் செய்தாரோ அதையேதான் நமக்காக செய்கிறார்.


நாம் நமது இதயத்தை திருப்பலியின் முதல் பகுதியில் திறந்தோமானால், மேலும் தொடர்ந்து அவரையே நோக்கினால், நாம் அப்பத்தையும், இரசத்தையும் அதற்குரிய சுயமான அர்த்ததை விட , அதை விட மேலே நாம் பார்க்க முடியும். நாம் யேசுவை பார்ப்போம். அவரை நம் இதயத்தில் அறிந்து கொள்வோம். எவ்வித சந்தேகமுமின்றி,உயிர்த்த யேசுவை நாம் நற்கருணையில் காண்போம். அவரை அடைவோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

www.gnm.org

No comments: