Friday, April 25, 2008

ஏப்ரல் 27, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஏப்ரல் 27, 2008
6வது ஈஸ்டர் ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 14

15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். 16 ″ உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். 17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். 18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். 19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். 20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். ″

thanks to www.arulvakku.com


இன்றைய நற்செய்தியில், யேசு, "பரிசுத்த ஆவி" தான் நமக்கு துணையாளர் என்று கூறுகிறார். சில அறிஞர்கள் இந்த வார்த்தைக்கு "ஆலோசனை" வழங்குபவர்கள் என்று கூறுகின்றனர். கிரேக்க மொழியில், இதற்கு அர்த்தம் என்ன வெனில், "கூடவே இருப்பவர்". அந்த கால கிரேக்க சமூகத்தில், இதற்கு சட்ட வல்லுனர் அல்லது சட்ட சம்பந்தமான உதவியாளர் என்று பொருள். பரிசுத்த ஆவிதான நமக்கு சட்ட உதவியாளர் என்று யேசு கூறுகிறார். பரிசுத்த ஆவிதான், நாம் தவறாக குற்றம் சாட்டபடும்போது, நமக்காக பேசுபவர்.


பரிசுத்த ஆவியே உண்மையை வெளிப்படுத்தும் ஆவியார் என்று யேசு குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மை பற்றிய உண்மையை கடவுளுக்கு எப்போதுமே தெரியும். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும், தவறான செய்திகள் என்ன சொன்னாலும், கடவுளுக்கு உண்மை தெரியும். கவனத்தில் கொள்ளுங்கள்: கடவுள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பதே நமக்கு முக்கியம். மேலும் நம்மை பற்றிய அவருடைய கருத்து நாம் நிணைப்பதைவிட நல்லதாகவே இருக்கும்.

நாம் நம்மையே மிகவும் தவறாக , அதிகபடியாகவே தீர்ப்பளித்து கொள்கிறோம். அதனால் தான், மற்றவர்கள் நம்மை பற்றி எவ்வளவு தவறாக நினைப்பார்கள் என்று கவலைபடுகிறோம். நாம் நமது மனசாட்சியுடன் நேர்மையாக நமது பாவங்களை நினைத்து பாவமன்னிப்பு கேட்டு, உண்மையாகவே நாம் நமது பாவ வழியிலிருந்து மீண்டு மேலே வர விரும்பினால். யேசு, "நான் உன்னை தண்டிக்கமாட்டேன், இனிமேல் பாவம் செய்யாதே" என்று கூறுகிறார்.

நீ சோதனையில், அல்லது ஆபத்தில் இருக்கும்போது, யேசு அங்கே வந்து, உங்களை காப்பாற்றவேண்டும் சில நேரங்களில் ஆசைபடுவது உண்டா? அவர் நம்மை என்றும் அனாதையாக விட்டது இல்லை. அவர் பரிசுத்த ஆவியின் மூலம், நம்மிடையே இருக்கின்றார். நம்மை காக்க வேண்டிய நேரத்தில் நம்மை காக்கின்றார்.

கடவுளை அன்பு செய்ய, நாம் அவருடைய கட்டளைகளை ஏற்று கடைபிடிக்க வேண்டும். நாம் அதில் தவறும்போது, உண்மையின் ஆவியானவர் தந்தையிடம்: "இந்த குழந்தை உண்மையாகவே பரிசுத்தமாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறது" மற்றும், நம்மிடம் " நாம் உனக்கு எப்படி பரிசுத்த வாழ்வில் வாழ வேண்டும் என கற்றுகொடுக்கிறேன் மற்றும் எப்படி பாவங்களை தவிர்ப்பது " என்று கூறுகிறார். மற்றவர்களிடம்: "நீ என்னை அன்பு செய்தால், எனது பெரு மதிப்புள்ள இந்த நன்பனையும் அன்பு செய்வாக" என்று கூறுகிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: