மே 18 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
பரிசுத்த தமத்திருத்துவ பெருவிழா
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)
பரிசுத்த ஆவியின் பெருவிழாவின் அடுத்த ஞாயிறாகிய இன்று நாம் பரிசுத்த தமத்திருத்துவ விழாவை கொண்டாடுகிறோம்.
முதல் வாசகத்தில், தந்தையாகிய கடவுள் எப்படி அவரது குழந்தையாக இஸ்ரேயல் நாட்டினை பார்த்து கொண்டார் என்று பார்க்கிறோம். "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்: சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்: நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்: கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர். " இவ்வாறு நாமும் தந்தையை பார்க்கவேண்டும். நாம் இப்படி பார்க்கா முடியவில்லையெனில், நாம் பரிசுத்தமடையவேண்டும். நாம் இவ்வுலகின் தந்தையையும், பரிசுத்த தந்தையையும், வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும்.
இரண்டாவது வாசககம் முழு திரித்துவத்தையும் கான்பிக்கிறது: யேசுவின் கருணை, கடவுளின் அன்பு, மேலும், பரிசுத்த ஆவியோடு சேர்ந்து நாம் கொள்ளும் நட்பு. இதனால், இந்த காரணத்தினால், நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். நமது பாதையை திருத்தி, ஒருவர் மற்றவரோடு இணைந்து அன்புடனும் அமைதியுடனும் வாழவேண்டும்.
வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், இப்படி சொல்லலாம். யேசு நமது பாவங்களுக்காக சிலுவையில் மரணமடைந்து, நம்மையெல்லாம் பாவங்களிலிலுருந்து மீட்டார். அவருடைய அருட்கொடையால், நாம் பாவங்களிலிருந்து வெளியே வர முடியும். யேசு தந்தையின் அன்பையும் நமக்கு கொடுக்கிறார். அதன் மூலம், நாம் ஒருவருக்கொருவர் அன்பு செய்தல் வேண்டும். மேலும், யேசு பரிசுத்த ஆவியையும் கொடுத்து, அவரோடு சேர்ந்து, புனித கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.
நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை எடுத்து சொல்கிறது. "அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்." எனவே நாம் கிறிஸ்துவீன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். மூவதொரு கடவுள் மேல் விசுவாசம் கொண்டு அன்பின் மக்களாய் இந்த வாழ்வை தொடர்வோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment