மே 4, 2008 , நற்செய்தி , மறையுரை
ஈஸ்டர் 7 வது ஞாயிறு
http://gnm.org/faithbuilders/Psalm27.htm
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். 2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். 3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. 4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். 5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும். 6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். 7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். 8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். 9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். 10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன். 11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
thanks to www.arulvakku.com
இன்றைய நற்செய்தியின் எல்லா வாசகங்களுமே, நமக்கு சந்தோசத்தையும், நன்கு புரிந்து கொள்ளும்ப்படியும், இன்றைய பதிலுரையில், "வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்" என்று நாம் கூறுவது போல உள்ளது. இந்த வசனத்தை, நமக்கு பிடித்தமான வசனமாக நமது வீடுகளில் அல்லது, நமது மேஜையில் எழுதி வைத்து கொள்ள கூடியது. ஏனெனில், நாம் குறையுள்ள வாழ்வின் சமயங்களில், இந்த வசனம நம்மை தூக்கி நிறுத்தும், நம்மை உற்சாகபடுத்தும். இந்த வசனத்தின் முழு படத்தினை, இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அப்பப்பொழுது, எனக்கு இதனை நிணைவுபடுத்திகொள்ள, நான் இந்த வசனைத்தை உபயோகித்துகொள்வேன். கடவுள் நமக்கு கொடுத்த உறுதிமொழிகளை, மீண்டும் உறுதியளிக்கிறார். நாம் நிச்சயம் கடவுள் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். நமக்கு தேவையானவை கிடைக்க வலி மிகுந்த நாட்கள் அல்லது நேரங்கள் ஆகலாம், கடைசியாக நமக்கு கிடைக்க வேண்டியது, கிடைக்கும். அது முழுமையாக கிடைக்கும் வரைக்கும், இந்த வசனம், எனது விசுவாசத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.
நற்செய்தி வாசகம், இந்த உலகில் யேசு தந்தையின், நல்ல விசயங்களை அறிந்து கொண்டார் என்று கூறுகிறது. யேசுவை எப்படி நம்பினார்கள் என்று அந்த விசயத்திற்கு மதிப்பளித்தார் என்பதை கவனத்தில் கொள்வோம். நம்மை நம்புகிறவர்கள் மேல் , நாம் அக்கறை கொள்ளும்போது, அவர்கள் அதை ஏற்றுகொள்ளும்போது, நாம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.
எப்போது அவர்கள நம்மை ஏற்றுகொள்ளவில்லையோ?, அப்போதுதான், நாம் யேசுவிடம் திரும்பி, அவர்கள் நிராகரித்த அன்பை அவரிடம் காட்ட வேன்டும். யேசுவின் வார்த்தையை ஏற்றுகொள்கிறோம். அவர் தந்தையிடமிருந்து வந்தவர் என்று நற்செய்தி கூறியிருப்பதை நாம் ஏற்றுகொள்கிறோம். மேலும் தந்தையின் திட்டத்தில், நாம் நம்பிக்கை வைக்கிறோம். யேசு உனக்காக வேண்டிகொண்டிருக்கிறார். அதனால், கண்டிப்பாக உனக்கு தேவையானது, நல்ல விசயங்கள் இந்த உலகில் உனக்கு கிடைக்கும். நீ அதனை கான்பாய்!
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment