Friday, May 23, 2008

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா மே 25, 2008

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
மே 25, 2008


இணைச்சட்டம் (உபாகமம்)

அதிகாரம் 8
2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். 3 அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

14 நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். 15 அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். 16 உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்: இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

அதிகாரம் 10
16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! 17 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. 53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். 54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '


(thanks to www.arulvakku.com )



இன்றைய ஞாயிறு நாம் யேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை கொண்டடுகிறோம். நாம் ஏன் நண்மையை கிறிஸ்துவின் உண்மையான உடலாக, அவரின் உண்மையின் ப்ரசன்னமாக நம்புகிறோம்.

முதல் வாசகம், கடவுள் மனிதர்களின் பசியை ஆற்றியைருக்கிறார், தாகத்தை தீர்த்திருக்கிறார், என்று கூறுகிறது. எப்பொழுதெல்லாம் நாம் கடினமான வாழ்க்கை பயணத்தில் தடைபெற்று, துன்பமடையும்போது, கடவுள் நமக்கு தேவையானதை கொடுக்கிறார். இஸ்ரேயலருக்கு என்னவெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம், இப்போதும் நமக்கு துன்ப நேரங்களில் செய்கிறார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னமாக, நமக்கு தேவையானவற்றை தூய நண்மையாகவும், பரிசுத்த ஆவி மூலமும் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நாம் ஞான்ஸ்நானம் பெற்ற போது நம் உடலில் வந்து நம்மில் வாழ்கிறார். பரிசுத்த ஆவியானவர், நல் வழி காட்டி, நமது பரிசுத்த வாழ்வை வளர செய்கிரார்.

இன்றைய நற்செய்தி நாம் திருப்பலியில் பெறும் கிறிஸ்து உண்மையான யேசுவின் ப்ரசன்னம் என்று கூறுகிறது. திரு உடல் ஒன்றும் அன்பின் குறியீடு கிடையாது. நமது பாலைவன வறண்ட வாழ்வில், நமக்கு இந்த திரு உடலும் திரு இரத்தமும் தேவையாய் இருக்கிறது. பாம்புகளும், தேளுகளும் உள்ள துன்ப வாழ்வில், யேசு உணமையான உடலுடனமும், திரு இரத்தத்துடனும், நமது பசியையும், தாகத்தையும் தீர்க்கிறார். நாம் அவரை விழுங்கும்போது, யேசுவும் நம்மை விழுங்குகிறார். அவரை நம்மில் இழுத்துகொள்ளும்போது, அவர் நம்மை அவரில் இழுத்துகொள்கிறார். இந்த ஒன்றினைப்பில், நாம் நமது சோதனையில் நடந்து , அவரின் ஆறுதலோடு , வெற்றி அடைகிறோம்.

இரண்டாவது வாசகம், "திருவிருந்து உண்ணும்போதும், பருகும்போதும், கிறிஸ்துவோடு ஒன்றினைகிறோம்" என்று கூறுகிறது. இந்த திருச்சபை ஒன்றினைப்பின் மூலம், அவர் எல்லாவித உதவிகளையும் நமக்கு செய்கிறார். இந்த ஒற்றுமையில், நமக்கு இல்லாத எந்த ஒரு விசயமும், உணவும், ஆற்றலும், எல்லாருக்கும் பகிரப்படுகிறது. இயேசு நற்செய்தியில் கூறுவது போல, "இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' " மோட்சத்தின் வாழ்வு நமக்கு என்றும் நிறையுள்ளதாய் இருக்கிரது. அங்கே பசியில்லா குறையில்லா நிறைவாழ்வை குறிக்கிறது.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: