ஜூன் 15 2008
ஆண்டின் 11 வது ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
இன்றைய நற்செய்தியில், யேசு மக்களின் தேவையை அறிந்து எவ்வாறு அவர்கள் மீது பரிவு கொண்டார் என்பதை காட்டுகிறது. அவருடைய இருதயம் அவர்களுக்காக வலித்தது. ஏனெனில், அவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்டோர், ப்ரச்னைக்குள்ளானவர்கள் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அதற்கு என்ன செய்தார்? அவர்களுக்கு மேய்ப்பனாக இருப்பதற்கு பதிலாக, அவர் சீடர்களை நோக்கி எல்லாருக்கும் மேய்ப்பனாக இருங்கள் என்று கட்டளையிடுகிறார்.
இன்றைய உலகில், பலர் ப்ரச்னைக்குள்ளாகும்போதும், ஒதுக்கபடும்போது, துன்பத்திற்கு உள்ளாகும் போதும் , நாம் என்ன நினைக்கிறோம், அவர்களுக்கு சரியான காப்பாளர் இல்லை, அல்லது உதவிக்கு ஆள் இல்லை. பல கோவில்களில், குருவானவர் இல்லாமல் இருக்கிற போது, மற்றும், பங்கு சேவைகளுக்கு தேவையான ஆட்கள் இல்லாத போதும், நாம் யேசு கூறுவது, அதிக மேய்ப்பாளர்களை அனுப்புங்க்ள என்று யேசுவை நோக்கி கேட்கிறோம். யேசு நமது தோள் மேல் தட்டி, "நீயே அந்த வேலையை செய்" என்கிறார்.
நாம் குருகுலத்திற்கு அதிக பேர் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறோம். மிகவும் குறைவானவர்களே செமினரி பள்ளிக்கு செல்கிறார்கள். யேசு "இதற்காக ஜெபம் செய்து கொண்டே இருக்காதீர்கள், நீங்களும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது, எழுந்து சென்று உங்கள் வேலையை ஆரம்பியுங்கள் " என்று கூறுகிறார்.
நிறைய பேர் கடவுள் அவர்கள் வேண்டுதலை கேட்கவில்லை, அவர்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கவில்லை என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். யேசு அவர்கள் விண்ணப்பத்திற்கு நம் மூலமாக பதிலளிக்கிறார். நம்மில் ஒரு சிலர் தான் யேசுவுக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து, அவரின் செயலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். அநியாயங்களுக்கும், மற்ற தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க தேவையான கிறிஸ்தவர்கள் நம்மிடையே இல்லை. அதனால், பலர் துன்பங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடவுள் இதனை பற்றி கவலை கொள்ளாதவ் தோற்றமளிக்கிறார்.
யேசு அந்த முழு நாட்டிற்கும் சேவை செய்பவராக இருந்தார். சீடர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் மூன்று வருடம் மிக அதிகமாகவே அறுவடை செய்தார். குரு மேய்ப்பாளருக்கென்றே சில கடமைகள் இருக்கும், அவர் அதனை செய்யும்போது, அதனை தவர மற்ற சேவைகள்/செயல்கள் அனைத்து நம்மால் செய்ய முடியும்,. குருவானவர் உதவியுடன், நாம் அந்த செயல்கள் செய்யலாம். இதன் மூலம், எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு செய்தால், இந்த திருச்சபை முழுமையானதாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்கும், மேலும், இன்னும் சிறப்பாக மணமாற்றத்தை செய்ய முடியும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, June 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment