ஜூன் 22, 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 12வது ஞாயிறு
Jer 20:10-13
Ps 69:8-10, 14, 17, 33-35
Rom 5:12-15
Mt 10:26-33
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 10
26 ' எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. 27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். 28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். 29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. 30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. 31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். 32 ' மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். 33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்
(thanks to www.arulvakku.com)
நீ இருளில் இருந்த நேரத்தை அல்லது பாவத்தில் விழுந்த நேரத்தை நினைத்து பார். அல்லது கடவுள் உன்னை நிராகரித்ததை அல்லது உனது வேண்டுதல்கள் கிடைக்காத போது, உன்னுடைய பரிசுத்த அன்பளிப்புகள் மூடப்பட்ட நேரங்களை நினைத்து பார். அந்த நேரங்களில் யேசு உன்னிடம் என்ன சொல்கிறார்? உன் காதோரோம் ரகசியமாக என்ன சொல்கிறார். இன்றைய நற்செய்தியில் யேசு இவ்வாறு சொல்கிறார்:" நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். "
பரிசுத்த ஆவியின் மூலமாக, யேசு உங்களை நற்செய்தி உலகெங்கும் கூற உங்களை அழைக்கிறார், உங்களுக்கு ஆசிர்வாதத்தையும், அதிகாரத்தையும் உங்களுக்கு கொடுக்கிறார். உங்கள் மூலமாக இருளில் இருக்கும் மற்றவர்களும் நற்செய்தியை கேட்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார். நற்செய்தியை மிகவும் தைரியத்துடனும், சத்தமாகவும், முழங்குங்கள், அப்பொழுது தான், அதை கேட்க விரும்புவர்கள், அவர்கள் செய்யும் செயல்களை விட்டு விட்டு உங்கள் மூலம் நற்செய்தியை கேட்க ஆரம்பிப்பர். உங்களது வாழ்வில், யேசு எவ்வாறு உதவினார் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல பயப்படாதீர்கள். யேசு எப்படி உங்கள் பாவ வாழ்விலிருந்து மீட்டு, நல் வழிக்கு கொண்டு சென்றார் என்பதை எடுத்து கூறுங்கள்.
நீங்கள் இவ்வள்வு துனிவுடன், யேசுவின் நற்செய்தியை கூறுகிறபொழுது, பலர் உங்களை பரிகாசம் செய்வர். ஜெரமியாவை முதல் வாசகத்தில் செய்வது போல. ஆனால், கடவுள் நம்மோடு இருக்கிறார். "எல்லாம் வல்ல இறைவனாக" எனவே நாம் தைரியத்துடன் இருக்க வேண்டும். மேலும், உங்களை பரிகாசம் செய்தவர்கள், தடுமாறு விழ்வார்கள். யேசு "யாருக்கும் அஞ்ச வேண்டாம்" என்று கூறுகிறார். கடவுள் உங்களை பார்த்து கொள்வார்.
யேசுவை மக்கள் முன்னிலையில் ஏற்றுகொண்டவர்களை, அவரும் ஏற்றுகொள்கிறார். நமது விசுவாசத்திற்காக கேலி செய்யப்பட்டாலோ, பரிகாசம் செய்தாலோ, கடவுள் உங்களை அரவனைத்து ஆறுதல் செய்வார். அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பது முக்கியமே தவிர மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யேசு சொல்வதை கேளுங்கள். உங்கள் இதயத்தில், அவர் இரகசியமாய் சொல்வதை கேளுங்கள். அவர் உங்களில் உள்ள நல்லதை தான், நல்ல குணத்தைதான் உங்கள் மதிப்பிடாக வைத்திருக்கிறார்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment