ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஜுன் 29, 2008
Acts 12:1-11
Ps 34:2-9
2 Tim 4:6-8, 17-18
Matt 16:13-19
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 16
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். 15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி வாசகங்களில், ஒரு 'நல்லாயனுக்கு' அல்லது 'மேய்ப்பனுக்கு' உள்ள பரிசுத்த தகுதிகளை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இந்த தகுதிகள் எல்லாம், ஆற்றல்கள் அனைத்தும், கிறிஸ்துவ தலைமைத்துவத்திற்கு தேவையானவை. இந்த தலைமைத்துவம் குருக்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பலர்.
பேதுரு யேசுவை அங்கீகரித்து, அவரை மெசியா என்று அழைத்த பிறகு, அவரை யேசு அர்ச்சித்து, இந்த திருச்சபையின் தலைமை குருத்துவராக நியமித்தார். அவர் வெளிப்படுத்திய மெசியா என்ற அங்கீகாரத்தை மற்றவர்களும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆனையிட்டார். இன்றைய உலகில், நமது பங்கு விசயங்களில், விழாக்களில், தலைமை பொறுப்பை ஏற்று ஈடுபடும்போது, நமக்கும் இந்த மெசியாவை உலக்குக்கு சொல்ல பொறுப்பு இருக்கிறது. யேசு எப்படி என்று நாம் அக்கறையுடன் எடுத்து காட்ட வேண்டும். பங்கு கூட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பதும், பாடல் குழுவினருக்கு தலைமை ஏற்று நடத்துவதும், வேதாகம பாடங்கள் நடத்துவதும், மறை மாவட்ட பொறுப்புகளில் இருப்பதும், இந்த நற்செயலுக்குன்டான வாகனங்களாகும். அது நம்மை யேசுவின் மீட்பு செயலுக்கு உகந்தவராக்கும்.
நாம், முதல் வாசகத்தில் பார்ப்பது போல, பவுல், அவருடைய மேய்ப்பு பனியில், யேசுவை போல, அவரும் அதிகம் துன்புற்றார். நாமும் உண்மையாக கடவுளரசை இந்த உலகிற்கு எடுத்து செல்ல ஈடுபட்டால், நாமும் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். யேசுவின் பரிசுத்த ஆவியில், நாம் ஆற்றலையும், வழிகாட்டுதலையும் பெற்று, நமது வெற்றிக்கு தூணாயிருக்கும். யேசு நம் முன்னே செல்கிறார், பரிசுத்த ஆவி நாம் யாரிடம் கடவுளரசை எடுத்து செல்கிறோமோ, அவர்களது இதயத்தை தயார் படுத்துகிறது.
சாத்தானின் கூண்டுக்குள் செல்லும் ஒருவனை காப்பாற்றாமல், அபாயங்களில் இருக்கும் ஒருவரை காப்பாற்றாதவர்கள் , யேசுவை உன்மையாக பின் செல்லாதவர்கள் ஆவர். ஏனெனில் இது தான், கிறிஸ்துவின் முழு வேலையாக இருந்து கொண்டு இருக்கிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Saturday, June 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment