ஜூன் 8, 2008 நற்செய்தி , மறையுரை:
ஆண்டின் 10 வது ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 9
9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். 10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். 11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ' உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? ' என்று கேட்டனர். 12 இயேசு இதைக் கேட்டவுடன், ' நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 13 ' பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ' என்றார்.
(www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நாம் யேசுவை போல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் குறிப்பிட்டு உள்ளது. யாரெல்லாம் இந்த சமுகத்தில் ஒதுக்கபடுகிறார்களோ, அவர்களை நாம் எப்படி நெருங்கி, அவர்கள் கூடவே இருந்து அவர்களுக்கு உதவியாக இருக்க முடியும். உங்கள் பங்கில், யாரெல்லாம் ஒதுக்கபட்டவர்கள், அல்லது கண்டுகொள்ளபடாதவர்கள்? யாரெல்லாம், எந்த ஒரு பங்கு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்ளாதவர்கள், அவர்கள் அழைக்கபடவில்லையா? உங்கள் வேலையிடத்தில், உங்களை அவர்களுக்காக வேண்டிகொள்ள சொல்வார்கள், ஆனால் அவர்கள் கோவிலுக்கு செல்வதில்லை. அவர்கள் அதற்கு தகுதி ஆனவர்கள் இல்லை என தள்ளப்பட்டவர்களா? யாரெல்லாம், உங்கள் பங்கில், எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கபடுவதில்லை? ஏனெனில், அவர்கள் வித்தியாசமானவர்கள், அதிக பாவம் செய்பவர்களாய் இருக்கிறார்களா? அல்லது வேரு காரணமா?
இவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருக்கும் மத்தேயுகள். யேசு கூப்பிட்டவுடன், மத்தேயு அவர் பின் சென்றார். யாரும் அவரை அழைக்காமல் இருந்தால், யேசுவின் சீடராய அவர் ஆகியிருக்க முடியுமா? முடியாது. ஏனெனில், வரி வசூலிப்பாவர் எவராக இருந்தாலும், அவரை கழுவு நீருக்கு சமமாக யூத சமூகத்தில் பாவிப்பார்கள்.
அதிகமான நேரங்களில், நமக்கு தெரிந்தவர்கள், அவர்கள் திருப்பலிக்கு வராதவர்கள், அல்லது பங்கு நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள், எல்லாம், அவர்கள் இந்த குழுவிற்கு உகந்தவர்கள் அல்ல என்று நினைப்பவர்கள், மேலும், அவர்களை யாரும் அழைக்கவில்லை. மேலும், நாம் பல தடவை அவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்களை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் என்று நம்ப வைத்தாலும், நமது பல முயற்சிகளிலும், அவர்கள் ஏற்று கொள்ள வில்லையெனில், அவர்கள் லாயக்கில்லாதவர்கள் என்று நாம் தவறாக தீர்ப்பிட கூடாது.
மணமாற்றுதல் என்பது, நாம் அவர்களோடு சேர்ந்து நடந்து, மிகவும் கருணையுடன் நல்ல நட்பை உண்டாக்கி கொண்டால் தான் அது பயனுள்ளதாக கூடும். இதனால், நாம் அவர்களோடு அடிக்கடி சேர்ந்து பல ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும் என்றில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மத்தேயும் யேசுவின் பன்ன்ரண்டு சீடர்களுல் ஒருவராகி, ஆரம்ப கால திருச்சபை வளர மிகவும் உறுதுணையாக இருந்தார். நமது அழைப்புகள், நாம் கனவில் கூட நிணைக்க முடியாத விழைவுகள் ஏற்படுத்து என்பதை நினைவில் கொள்.!
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment