Friday, April 24, 2009

ஏப்ரல் 26, 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 26, 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 3வது ஞாயிறு
Acts 3:13-15, 17-19
Ps 4:2, 4, 7-9
1 John 2:1-5a
Luke 24:35-48
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 24
35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38 அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்;40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார்.42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்;45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46 அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
(thanks to www.arulvakku.com)


இப்பொழுது நாம் புதுப்பிக்கபட்ட மக்கள். -- ஈஸ்டர் மக்கள் -- இன்றைய திருப்பலியின் வாசகங்கள், மீட்பின் வாழ்வு வாழ்வதற்கும், பாவ வாழ்வு வாழ்வதற்கு மிக உறுதியான வித்தியாசம் இருக்கிறது என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. இன்றைய முதல் வாசகம் "மனம் திரும்புங்கள், அதனால் மனம் மாறி வாழ்வீர்கள், உங்கள் பாவங்கள் துடைத்து எறியப்படும்" என்று கூறுகிறது. இரண்டாவது வாசகம் " எனக்கு 'அவரை (கடவுளை) தெரியும்' என்று கூறிக்கொண்டு, ஆனால் கட்டளைகளை கடைபிடிக்காதவர்கள் பொய்யர்கள். உண்மை அவர்களிடத்தில் இல்லை" என்று சொல்கிறது.

மேலும் நற்செய்தியில் , "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது." என்று கூறுகிறாது.

ஏதோ ஒரு வழியில் ஒவ்வொரு நாளும், நாமெல்லாம் பொய்யர்களாக தான் இருக்கிறோம். நமது விசுவாசத்தை உதடுகளில் சொல்லிக்கொண்டு, நடைமுறையில் அதனை பின் பற்றுவதில்லை.
கிறிஸ்துவின் அன்பை நாம் உண்மையாக நம்பாதது போல நமது ஒவ்வொரு செயலும் இருக்கிறது. நமது கவலைகளோ, கடவுள் நம்மை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலிளும் காக்கிறார் என்பதை நம்பாதது போல இருக்கிறது.
ஏதோ ஒரு வழியில் ஒவ்வொரு நாளும், நாமெல்லாம் பொய்யர்களாக தான் இருக்கிறோம். நமது விசுவாசத்தை உதடுகளில் சொல்லிக்கொண்டு, நடைமுறையில் அதனை பின் பற்றுவதில்லை.
கிறிஸ்துவின் அன்பை நாம் உண்மையாக நம்பாதது போல நமது ஒவ்வொரு செயலும் இருக்கிறது. நமது கவலைகளோ, கடவுள் நம்மை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலிளும் காக்கிறார் என்பதை நம்பாதது போல இருக்கிறது.
யேசு கிறிஸ்து நம்மை துன்புறுத்துகிறவர்களையும், எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று நமக்கு கட்டளையிட்டு சொல்லும்போது அவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து தான் பேசுகிறார், என்று நாம் நம்பாதது போல நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இருக்கிறது. நமது மனதின் உறுதி, இந்த கட்டளைகளை கொடுக்கும்போது நம்மை விட புத்திசாலியாக இருந்திருப்பார் என்பதை நம்ப மறுக்கிறது.

யேசுவை பற்றிய உண்மையை உலகிற்கு அறிவிப்பதில், உங்களுடைய செயல்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறது?

அதிக கிறிஸ்தவர்கள் யேசு அவர்களுக்காக என்ன செய்தாரோ அதுவே மீட்பிற்கு போதும் எனவும், மோட்சத்திற்கு நெரடியாக சென்று விடலாம் என்று நினைத்து,அதையே ஆதாயமாக நினைத்து கொண்டு, ஒவ்வொரு நாளும் மீட்பிற்காக எதையும் செய்யாமல் இருக்கிறார்கள்.
நாமெல்லாம் மோட்சத்தின் கதவுகளில் நிற்கும்போது, மிகச் சரியாக எந்த ஒரு பிழையுமின்றி, பாவங்களே இல்லாமல் இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றால். கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மிடையே இருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும், நமது வாழ்வை, பழக்க வழக்கங்களை சோதனை செய்து, எதையெல்லாம் மாற்ற வேண்டுமோ அதையெல்லாம் மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இதனை தான் கடவுள் விரும்புகிறார்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, April 17, 2009

ஏப்ரல் 19,2009 ஞாயிறு, நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 19,2009 ஞாயிறு, நற்செய்தி, மறையுரை

Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார்.30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)


" நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " இவ்வாறு தோமையார், யேசுவை கண்டு வியப்புடன் கூச்சலிடுவதை நாம் இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். இவ்வாறு தான், ஒவ்வொரு திருப்பலியிலும், கிறிஸ்துவின் நன்மை உயர்த்தப்படும்போது, நாம் வியப்புடன் கூச்சலிட வேண்டும். ஒரு காலத்தில் எல்லா கத்தோலிக்கர்களும் இப்படிதான் "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " என்று கூறிகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது நாம் அதனை மறந்துவிட்டோம். இந்த பழக்கத்தை நாம் இப்போது புதுபித்துகொள்ள வேன்டும். இது பயபக்தியுடனும், வியப்புடனும், கிறிஸ்துவின் தலைமையை அங்கீகரித்தும், அவர் உண்மையாகவே நண்மையிலும், திராட்சை ரசத்திலும் ப்ரசன்னமாக இருக்கிறார் என்பதை தாழ்மையுடன் அங்கீகரிக்கிறீர்கள்.


போப் இரண்டாம் ஜான் பால், அவருடைய கிறிஸ்துவின் நண்மையை பற்றி எழுதிய புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "கிறிஸ்துவை எங்கெங்கெல்லாம் நாம் அங்கிகரிக்க முடியுமோ, அவருடைய பல விதமான ப்ரசன்னங்களில், நாம் அவரை அங்கீகரிக்க வேண்டும். அதற்கெல்லாம் மேலாக, நாம் கண்டிப்பாக, என்றென்றும் வாழும் கிறிஸ்துவின் உடலையும், அவரது இரத்ததையும் நாம் ஏற்று கொள்ள வேன்டும், மேலும் அதனை உண்மையாக அங்கீகரிக்க வேண்டும்"

யேசு எவ்வாறு, அவரின் சீடர்களை திரும்ப சதையும், உயிருமாய் வந்து நம்ப வைத்தார் என்பதை கவனியுங்கள். அவர்கள் எல்லாரும் அவரை ஓர் ஆவி என்று நினைத்தனர். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இந்த உய்ர்த்தெழுதலின் அதசியத்தை, நம்ப இயலாமல் அதனை ஏற்று கொள்ள முடியாமல் இருந்தனர்.
யேசு கிறிஸ்து, உயிர்த்தெழுதலின் அதிசயத்தை, அவரின் காயங்கள் மூலம் சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். அதனை ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்கு வெளிப்படுத்திகொண்டிருக்கிறார்.
நம்முடைய பொது அறிவாலும், நுன்னிய அறிவின் மூலமும், எப்படி நன்மையும்/ரொட்டி துண்டும், திராட்சை ரசமும், யேசுவின் உன்மையான உடலும், இரத்தமும் ஆனது என்பதை நம்மால் கண்டறியமுடியவில்லை. இரத்தமும் சதையுமாக 2000 வருடம் முன்பு சிலுவையில் மரணமடைந்த யேசு தான் இந்த நன்மையிலும், திரார்சை ரசத்திலும் இருக்கிறார் என்பதை நாம் நம்புவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயிர்த்தெழுந்த யேசுதான் நம்மிடம் வருகிறார் என்பது கூட நாம் புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஒவ்வொரு திருப்பலியிலும், நாம், என்றென்றும் வாழும், நித்தியவாழ்வின் இருப்பிடத்திற்கு செல்கிறோம், வாழும் கிறிஸ்துவிடமிருந்து பல பயன்கள் பெற நாம் செல்கிறோம். பெரிய வெள்ளி அன்று நமக்காக அவர் தியாகம் செய்தார் என்று அறிந்து கொள்கிறோம், ஏனெனில், நாம் பாவிகள், பாவம் செய்தவர்கள், அவருடைய காயங்களை பார்க்க ஆரம்பிக்கிறோம். இதன் பிறகு தான், கிறிஸ்துவின் திவ்ய நற்கருணையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.

கிறிஸ்துவின் மரணம் நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்டு, நம்மை பரலோகம் அழைத்து செல்ல வேன்டும் என நாம் விரும்ப ஆரம்பிக்கிற போது, திவ்ய நற்கருணையின் அதிசயத்தை நாம் நம்ப ஆரம்பிக்கிறோம். யேசுவை நாம் முழுமையாக வாங்கி, நமது வாழ்வில் அவர் முழுமையாக எப்போதும் இருக்க வேன்டும் என்று நாம் ஏங்க ஆரம்பிப்பது நமது கடைசி முயற்சியாக நடக்கிறது. நமது உடலில், தெய்வ யேசு வர வேன்டும் என விரும்புகிறோம். எந்த வழியில் வந்தாலும், நம்மை அவருக்கு பிடித்த மாதிரி மாற்ற வேன்டும் என விரும்புகிறோம்.

இந்த ஆசைதான், நாம், யேசுவை நற்கருனையில் பார்க்கும்போது கத்தி, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " என்று போற்றி புகழ்கிறோம்.



© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, April 10, 2009

ஏப்ரல் 12, 2009 ஈஸ்டர் ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 12, 2009 ஈஸ்டர் ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு

Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9 or Mark 16:1-7 or Luke 24:13-35
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறு, வருடா வருடம் நமக்கு மிக பெரிய ஆச்சரியமளிக்கும் விழாவாகும். எப்படி முதல் சீடர்கள் கல்லறையில் ஒன்றும் இல்லை என்று பார்த்த பிறகு ஆச்சரியப்பட்டார்களோ அப்படி நமக்கும் ஆச்சரியம் காத்திருக்கிறது. உயிர்த்தெழுதலில் உங்களுக்கும் ஆச்சரியங்களை கடவுள் வைத்திருக்கிறார்.

இன்றைய நற்செய்தியில், பலர் விரைந்தோடி, அங்குமிங்கும் சென்று அவர்களுக்கு வியப்பான செய்தியை, கிளர்ந்தெழுந்தெ மகிழ்ச்சியை ஒருவொருக்குவொருவர் சொல்லிகொண்டனர். ஆனால் அதன் முழு அர்த்தத்தை அவர்கள் புரிந்திருக்க வில்லை. யேசு அவர்களிடம் முன்னடியே அந்த சீடர்களிடம், தான் இறப்பிற்கு பிறகு மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று கூறியிருந்தும், கடவுளின் இந்த உயிர்த்தெழுதல் அவர்களு பல ஆச்சரியங்களை கொடுத்தது. அவர்கள் உயிர்த்தெழுதலை எதிர்பார்க்கவில்லை. மெசியாவின் நோக்கத்தில், அவர் இவ்வுலகிற்கு வந்த முக்கிய நோக்கத்தை புரிந்திருக்கவில்லை.

கடவுளுடைய திட்டங்கள், நமக்கு அடிக்கடி ஆச்சரியங்களை தருபவை. நம் வாழ்க்கையின் பல தருனங்களில், கடினமான நேரங்கள், காலங்களின் பிற்பாடு நமக்கு நல்ல மகிழ்ச்சியான வெற்றியாகும் என்று நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் நம்மிடைய நடந்த இழப்புகள், புதிய முன்னேற்றத்திற்கு, புதிய வளர்ச்சிக்கு முதல் படியாக இருக்கிறது என்பத நாம் புரிந்திருக்கவில்லை. யேசு எவ்வாறு நமது துயரங்களை ஆசிர்வதித்து எப்படி நல்லவையாக மாற்றப்போகிறார் என்று நம்மால் கற்பனை பன்னி கூட பார்க்க முடியாது.

நாம் கடினமான நேரங்களில் துயரப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்து, நமக்கு உள்ள சிலுவையிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறோம். அதனிடையே யேசு இந்த இந்த ஈஸ்டர் வெற்றியை நம்முடைய சிலுவைகளுக்காக நமக்கு கொடுக்கிறார்.

நாம் சோகத்தில் இருக்கும்போது கடவுளின் அருளை எப்படி அறிந்து கொள்வது? நாம் நம்முடைய சிலுவைகளை கண்டு குறைபட்டுகொள்ளும்போது, நாம் உயிர்த்தெழுதலை எப்படி கண்டறிவது?

ஈஸ்டர் மக்களாகியா நாம் செய்ய வேண்டியது என்ன என்றால், நமது சிலுவையின் வலியில், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை எப்படி நாம் கண்டு கொள்வது அதனை எப்படி வளர்ப்பது என்று தெரிந்து அதன்படி நடக்க வேண்டும். எப்போதுமே, நாம் யேசுவை நம்ப வேண்டும். தவறானவற்றை நல்லதாக்க திட்டமிட வேன்டும். கடவுளின் ஆச்சரியங்களை ஏற்றுகொள்ள தயாரக வேன்டும்.

Friday, April 3, 2009

ஏப்ரல் 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
குருத்து ஞாயிறு

Readings for the Entrance Procession:
Mark 11:1-10 or John 12:12-16
Psalm 24 & Psalm 47
Readings for Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11
Mark 14:1—15:47


இன்றைய ஞாயிறு, சிலுவையில், யேசு எவ்வாறு கஷ்டப்பட்டார், நம்மேல் உள்ள அதிகமான அன்பினால், அந்த வலிகளை தாங்கிகொண்டார் என்று பார்ப்பதற்கு முன், இன்று, யேசுவின் மேல் நறுமணத் தைலத்தை, ஊற்றி அவரை கொளரவித்த பெண்ணின் ஆழ்ந்த அன்பையும், அவர் யேசுவின் மேல் காட்டிய அக்கரையையும் பார்ப்போம்.

அந்த காலங்களில், டியோடரன்டோ, சென்டோ நமது உடலில் பூசிகொள்ள கிடையாது, நல்ல குளிக்கும் அறையும் கிடையாது. அதனால், அந்த காலத்தில் மக்கள், பல வாசனை தைலங்களையும், மூலிகைகளையும் ஒன்றாக கலந்து நறுமண தைலத்தை தயாரித்து, அதனை உபயோகித்து வந்தனர். கலந்த நறுமணத்தைலத்தை கலயத்தில் வைத்து அதிகமான நாட்கள் அதனை புளிக்க வைப்பர். எவ்வளவு அதிக நாள் புளிக்க வைக்கிறார்களோ, அவ்வளவு மதிப்பும், விலையும் உயர்ந்தது.

இந்த நற்செய்தியில், இந்த நறுமணத்தைலம், யேசுவிற்கு அளிக்கப்படும், விலையுயர்ந்த அன்பளிப்பாகும். ரொம்ப நாட்களாக புளிக்க வைத்ததாக இருக்க வேண்டும்.
நாம் யாருக்காவது அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்றால், அருகில் உள்ள கடைக்கு சென்று புதிய பொருள் ஒன்றை வாங்குவீர்கள். ஆனால், ரொம்ப நாட்களாக நம்ம்டையே பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும், நாமே அதிகம் மதிக்கும் பொருள்தான் மிகவும் விலையுயர்ந்தது. அது தான் மிகவும் முக்கியமானது. அதனை நாம் அன்பளிப்பாக கொடுப்பது, நாம் அதனை தியாகம் செய்வதற்கு ஒப்பாகும்.

உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பொருள்/விசயம் என்று எதை அதிக நாட்கள் வைத்து கொண்டு இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாக உங்களில் அது புளித்து/மெருகேற்றி இன்னும் அதிக மதிப்புடன் இருப்பது எது?

அந்த பொருளை உஙகளால் மற்றவர்களுக்கு கொடுப்பது போல கற்பனை செய்ய முடிகிறதா? அதனை யாருக்கு கொடுக்கிறோமோ அவர்கள் மேல் நாம் ஆழ்ந்த அன்பையும், அக்கறையையும் கொண்டிருக்க வேண்டும். அதனை வைத்திருப்பதை விட, கொடுப்பதில் தான் அதிக மதிப்பும், பெருமையும் இருக்க வேண்டும். இது மாதிரி ஒன்று நடந்தால் அது அன்பினால் மட்டுமே நடக்கும்.

யேசுவின் மேல் எவ்வளவு அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு எது மிகவும் முக்கியமான பொருள் , அதனை மற்றவர்களுக்கோ அல்லது யேசுவிற்கோ கொடுப்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்? அதனை யேசு அங்கீகரித்து, பாராட்ட வேண்டும். யேசுவின் மேல் உள்ள அன்பினால், இதனை தியாகம் செய்ய விருப்பமுள்ளவர்களாக இருக்கிறீர்களா ? அவ்வளவு அன்பு யேசுவின் மேல் உள்ளதா?

வேறு மாதிரியாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் குடுவையில் இருக்கும் பொருளை, யேசுவிற்கு தாராளாமாக கொடுப்பீர்களா?
யேசு உங்களுக்கு தாராளமாக என்ன என்ன கொடுத்தார் என்பதனை இந்த புனித வாரம் முழுதும் நினைத்து பாருங்கள். புனித வியாழன், புனித வெள்ளி நாட்களில் ஆலயத்தில் இருக்கும்போதும் நினைத்து பாருங்கள்.

மறுபடியும், உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுகொள்ளுங்கள். "உங்களில் எதனை கொடுத்தால் யேசு, உங்களை பாராட்டுவார்? "

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm