Friday, April 10, 2009

ஏப்ரல் 12, 2009 ஈஸ்டர் ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 12, 2009 ஈஸ்டர் ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு

Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9 or Mark 16:1-7 or Luke 24:13-35
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறு, வருடா வருடம் நமக்கு மிக பெரிய ஆச்சரியமளிக்கும் விழாவாகும். எப்படி முதல் சீடர்கள் கல்லறையில் ஒன்றும் இல்லை என்று பார்த்த பிறகு ஆச்சரியப்பட்டார்களோ அப்படி நமக்கும் ஆச்சரியம் காத்திருக்கிறது. உயிர்த்தெழுதலில் உங்களுக்கும் ஆச்சரியங்களை கடவுள் வைத்திருக்கிறார்.

இன்றைய நற்செய்தியில், பலர் விரைந்தோடி, அங்குமிங்கும் சென்று அவர்களுக்கு வியப்பான செய்தியை, கிளர்ந்தெழுந்தெ மகிழ்ச்சியை ஒருவொருக்குவொருவர் சொல்லிகொண்டனர். ஆனால் அதன் முழு அர்த்தத்தை அவர்கள் புரிந்திருக்க வில்லை. யேசு அவர்களிடம் முன்னடியே அந்த சீடர்களிடம், தான் இறப்பிற்கு பிறகு மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று கூறியிருந்தும், கடவுளின் இந்த உயிர்த்தெழுதல் அவர்களு பல ஆச்சரியங்களை கொடுத்தது. அவர்கள் உயிர்த்தெழுதலை எதிர்பார்க்கவில்லை. மெசியாவின் நோக்கத்தில், அவர் இவ்வுலகிற்கு வந்த முக்கிய நோக்கத்தை புரிந்திருக்கவில்லை.

கடவுளுடைய திட்டங்கள், நமக்கு அடிக்கடி ஆச்சரியங்களை தருபவை. நம் வாழ்க்கையின் பல தருனங்களில், கடினமான நேரங்கள், காலங்களின் பிற்பாடு நமக்கு நல்ல மகிழ்ச்சியான வெற்றியாகும் என்று நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் நம்மிடைய நடந்த இழப்புகள், புதிய முன்னேற்றத்திற்கு, புதிய வளர்ச்சிக்கு முதல் படியாக இருக்கிறது என்பத நாம் புரிந்திருக்கவில்லை. யேசு எவ்வாறு நமது துயரங்களை ஆசிர்வதித்து எப்படி நல்லவையாக மாற்றப்போகிறார் என்று நம்மால் கற்பனை பன்னி கூட பார்க்க முடியாது.

நாம் கடினமான நேரங்களில் துயரப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்து, நமக்கு உள்ள சிலுவையிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறோம். அதனிடையே யேசு இந்த இந்த ஈஸ்டர் வெற்றியை நம்முடைய சிலுவைகளுக்காக நமக்கு கொடுக்கிறார்.

நாம் சோகத்தில் இருக்கும்போது கடவுளின் அருளை எப்படி அறிந்து கொள்வது? நாம் நம்முடைய சிலுவைகளை கண்டு குறைபட்டுகொள்ளும்போது, நாம் உயிர்த்தெழுதலை எப்படி கண்டறிவது?

ஈஸ்டர் மக்களாகியா நாம் செய்ய வேண்டியது என்ன என்றால், நமது சிலுவையின் வலியில், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை எப்படி நாம் கண்டு கொள்வது அதனை எப்படி வளர்ப்பது என்று தெரிந்து அதன்படி நடக்க வேண்டும். எப்போதுமே, நாம் யேசுவை நம்ப வேண்டும். தவறானவற்றை நல்லதாக்க திட்டமிட வேன்டும். கடவுளின் ஆச்சரியங்களை ஏற்றுகொள்ள தயாரக வேன்டும்.

No comments: