Friday, August 14, 2009

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு

Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '

(thanks to www.arulvakku.com)

"வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்று இன்றைய நற்செய்தியில், திவ்ய நற்கருணையின் கட்டளையை , யேசு நமக்கு சொல்வதை நாம் காண்கிறோம். இது எந்த மாதிரியான வாழ்வு? யேசு கொடுக்கும் வாழ்விற்கும், நீங்கள் பிறந்த வளரும் இந்த வாழ்விற்கும் என்ன வேறுபாடு?

யேசு அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஒவ்வொரு திருப்பலியிலும், நமக்கு கொடுக்கிறார், அதனை முழுதும், நாம் வாங்கிகொள்ளலாம், தெய்வீகமாகவும், மனிதனாகவும் நாம் பெறலாம். அவரது அன்பினால், நாம் முழு ஊட்டமுடன் நனைய விரும்புகிறார். அவருடைய ஆற்றலை பெற்று , நமது சோதனையில் தாண்டி வர அந்த ஆற்றல் உதவும். நம் காயங்களை குணப்படுத்த அந்த ஆற்றல் உதவும். மேலும் அவரது வாழ்வு, மோட்சத்திலும் மட்டுமல்ல , இந்த பூமி வாழ்விலும், நமக்கு கிடைக்கின்றது.

யேசுவை நாம் வாங்குவது, அவரை போல நாம் மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், உண்மையாக யேசுவின் உடலும், இரத்தமும் தான் என்று நாம் நம்பினால், திருப்பலிக்கு பிறகு ஏன் நாம் மாறி வருவதில்லை?

திருப்பலியின் முதலில் நடைபெறும் பாவமன்னிப்பில் முழுமையாக, ஆர்வத்தோடு பங்கேற்று, கவனமாக எல்லா நற்செய்தி வாசகங்களையும் கேட்டு, குருவோடு எல்லா ஜெபங்களையும் சொல்லி, கடவுளின் ஆற்றல் மேல் நம்பிக்கை கொண்டு, "ஆண்டவரே நான் உன்னை பெற தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்" என்று சொல்லி, அவரது உடலை வாங்கினால், அவரது உடலோடும், இரத்ததோடும் ஒன்றாவோம்.

இப்போது, நாமும் அவரின் உடலாகவும், இரத்தமாகவும், இந்த பூமியில் உள்ளோம், அதன் அர்த்தம் என்னவெனில், யேசுவின் பிரசன்னமாக இந்த உலகத்தில் இருக்கிறோம். மற்றவர்கள் நம்மை பெற்று கொள்ள அனுமதிக்க வேண்டும், அல்லது வேறு விதமாக சொல்வதனால், யேசுவின் ஆற்றல், மற்றவர்களுக்கும் கிடைக்க நாம் உதவியாக இருக்க வேண்டும்.

நாம் மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கும் போது, கடவுளின் அன்பை அவர்கள் பெறுகிறார்கள் , அவர்கள் அந்த அன்பை திரும்பி கொடுக்காவிடில், நமது அன்பை, நம்மை முழுதுமாக அவர்கள் பெற்றுகொள்கிறார்கள். நாம் பெறுவதை விட அதிகமாக கொடுக்கிறோம்.அதே போல, கடவுளரசிற்காக, நமது நேரத்தையும், திறமையையும் கொடுத்தோமானால், நாம் திவ்ய நன்மையாகிறோம். யேசுவின் உடலோடும், இரத்தத்தோடும், ஒன்றாகிறோம்.
மற்றவர்கள், நமக்கு கொடுக்க வேண்டியதை, கொடுக்காத போது, நாம் அழியாமல், முழுமையாக மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டுமானால், நாம் யேசுவிடமிருந்து அவர் ஆற்றலையும் , அனைத்தையும் வாங்கியிருக்க வேண்டும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், திவ்ய நற்கருணை வழிபாட்டில் ஈடுபட்டு, அவரின் ஊட்டசத்துகளை நாம் பெற வேண்டும். அது தான், நமது வாழ்விற்கு தேவையான சக்தியாக இருக்கிறது.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

(thanks to www.azhagi.com)

No comments: