Friday, August 28, 2009

ஆகஸ்டு 30, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 30, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7
1 ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.3 பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. 5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ' உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ' என்று கேட்டனர்.6 அதற்கு அவர், ' வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.7 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் ' என்று அவர் எழுதியுள்ளார்.8 நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.9 மேலும் அவர், ' உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.10 ' உன் தந்தையையும் தாயையும் மதித்துநட ' என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ' என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!11 ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ' நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ″ கொர்பான் ″ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று ' என்றால்,12 அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.13 இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ' நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.15 வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.16 ( 'கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்' ) என்று கூறினார். 17 அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,18 அவர் அவர்களிடம், ' நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?19 ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது ' என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.20 மேலும், ' மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.23 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன ' என்றார்.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், பரிசேயர்களை கடிந்துரைக்கிறார். ஏன், அவர்கள் கடவுளை தங்கள் உதட்டில் மட்டுமே வைத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால், உள்ளத்தில், கடவுளை விட்டு வெகு தூரத்தில் இருக்கின்றனர். யூத சட்டங்க்களை யேசுவும், அவரின் சீடர்களும் சரியாக நிறைவேற்றவில்லை, என்று பரிசேயர்கள் குறை கான்பதில் கொஞ்சம் கூட அன்பு இல்லை என்று யேசு குறிப்பிடுகிறார்.

மனிதர்களை விட அவர்களுக்கு சட்டங்கள் தான் முக்கியமானதாக இருந்தது. பரிசேயர்களிடத்தில், தான் தான் சரி என்ற எண்ணம் இருந்தது. "உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட பெரியவன் நான், நான் கட்டளைகளை சரியாக கடைபிடிக்கிறேன் , ஆனால் நீங்கள் கடைபிடிப்பதில்லை" என்று கூறி கொள்ளும் மனப்பான்மை.


கீழ்படிதல், சட்டங்களின் பிடிப்பால் ஏற்படக்கூடியதாக இருந்தால் அது கபட வேஷம் ஆகும். இது தான் , தான் என்ற அகந்தை. அது சட்டங்களினால் , தான் மேன்மை பெற்றவன் என்ற நினைப்பாகும். இந்த மாதிரியான விசயங்களை நாம் இப்போது கூட பார்க்கிறோம். திருப்பலியில் பாதிரியார்கள், திருப்பலியை இப்படி தான் செய்ய வேண்டும் என்று நடைமுறைகள் உள்ளன ஆனால் பாதிரியார்கள் சில மாற்றங்கள் செய்தால், நம்மில் சிலர் அதனை குறை கூறுகிறோம்.

இப்படி நடக்கும் போது, "வீணான தற்பெருமைக்காக என்னிடம் ஜெபம் செய்கிறார்கள்" என்று யேசு கூறுகிறார். இதனால், திருப்பலியின் உண்மையான அர்த்தம் போய்விடுகிறது.

நடைமுறைகளுக்கும் , சட்டங்களுக்கும், எது முதல், எது அடுத்தது என்று ஓர் வரைமுறை உள்ளது. இதில் சில நடைமுறைகள் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைவது உண்டு. அதில் மிக முக்கியமானது, பத்து கட்டளைகள் ஆகும், இது எப்போதுமே மாறுவதில்லை. இந்த நடைமுறைகள் எல்லாம், நமக்கு மோட்சத்திற்கு செல்ல உதவியாக இருக்கிறது.

தவறான நடவடிக்கைகளை நாம் பார்க்கும்போது, அதனை நாம் எதிர்த்து பேசியே ஆகவேண்டும். ஏன் நாம் அதனை செய்ய வேண்டும் எனில், அந்த தவறுகளை செய்பவர்களின் பாவங்களை போக்கவும், அவர்களின் தூய வாழ்வின் வளர்ச்சிக்கும் நாம் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அவர்களின் தவறுகளுக்கு உண்டான மூல காரணத்தை அறிந்து, அந்த தவற்றை களைய பரிந்துரைத்தோமானால், உண்மையான அன்பும், அவர்களிடத்தில் தோன்றி, அந்த தவறுகளும், அதற்கு மேல் நடைபெறாது. அப்போது தான், நமது முயற்சி வெற்றியடையும்
இப்படி நடந்து கொண்டால் தான், இரண்டாவது வாசகத்தில் உள்ளது போல, "செயல்களினாலும் கடவுளிடம் நாம் செல்லலாம்" என்பதை நாம் ஏற்றுகொண்டு நடந்து வருகிறோம். யாக்கோபு சொல்வது போல, "உண்மையான மதம்" என்பது மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளும். ஆனால் பரிசேயர்களோ, சீடர்களின் பசியை பொருட்படுத்தவில்லை, மாறாக சட்டதிட்டங்க்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.



(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: