Friday, August 7, 2009

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை
ஆண்டின் 19வது ஞாயிறு

1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30--5:2
John 6:41-51


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். '


(thanks to www.arulvakku.com)


"என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" நித்திய வாழ்வை நம்புவோர் அனைவருக்கும் நானே உயிர் தரும் உணவு " என்று இன்றைய நற்செய்தியில் யேசு கூறுகிறார்.
திவ்ய நற்கருணையை ஏன் "வாழ்வு தரும் உணவு" என்று கூறினார். ?
இதற்கு பதிலாக அவரே "' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' " என்று கூறுகிறார். இதையே வேறு விதமாக சொல்வதானால், அவரது வாழ்வை நமக்காக கொடுத்தார் - சிலுவையில் - . நமது பாவங்கள் நம்மை இறப்பின் பாதைக்கு நம்மை அழைத்து சென்றது, ஆனால், யேசு எந்த பாவமும் இல்லாதவர், முழு இறைவன் , நமக்காக அவர் இறந்த்தார். அதனால், நாம் நித்திய வாழ்வை அடைய முடியும்.

உயிர்த்தெழுந்த அவரின் உடல், மரணத்தை வென்றது. அதனால், அவரது உடல், சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த்தது, நமது வாழ்விற்கு உணவாக கிடைக்கிறது. இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம். அவரது மரணத்தை நாம் திருப்பலியில் மீண்டும் காட்சியாக கொண்டு வருவதில்லை, மாறாக, அவரது வாழ்வோடு நம்மை இணைத்து கொள்கிறோம்.

"திருப்பலி பீடத்தில் நடக்கும் தியாக" செயல்கள், நாம் கிறிஸ்துவின் முழுமையோடு , அவரின் வாழ்வோடு, அவரது நற்செயல்களோடு, அவரது சிலுவை துன்பங்களுடன், உயிர்த்தெழுதலிலும், மேலும், மோட்சத்திற்கு எழுந்தருளியதோடும், நாம் பங்கு கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணித்து, அவரோடு நாம் இணைகிறோம், அதன் மூலம், நாம் இந்த உலகிற்கு அவரின் இறைசேவையை தொடர முடியும். நமது விருப்பங்களை தியாகம் செய்து , அவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். இது நம்மை கிறிஸ்துவின் பின் சென்று, மோட்சத்திற்கு அழைத்து செல்லும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் யேசுவின் உடலையும் அவரது இரத்தத்தையும் நமக்கு அருளப்பட்டு, நமது வாழ்விற்கு தேவையான உணவு வழங்க்கப்படுகிறது. எப்பொழுதுமே சாப்பிடத்தகுந்த உணவை பெறுகிறூம். போப் ஜான் பால் குறிப்பிட்டுள்ளதை நாம் நினைவு கூறலாம், இரண்டாம் வாத்திகான் சங்கம் திவிய நற்கருணை தான், கிறிஸ்துவ வாழ்விற்கு ஊற்றாகவும் , ஆதாரமாகவும் உள்ளது என்று கூறுகிறது.


கிறிஸ்துவின் கடைசி இரா உணவிலிருந்து , நமக்கு திவ்ய நற்கருணை தொடர்ந்த்து கிடைத்து வருகிறது. முதல் அப்போஸ்தலர்களிலிருந்து தொடங்கிய திருப்பனி , இன்றும் குருவானவர்கள் மூலம் தொடர்ந்த்து நடைபெற்று வருகிறது. நாம் அனைவரும், இந்த திருப்பலியில் பங்கு கொள்ளும்பொழுது, கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை நாம் கொண்டாட வேண்டும். அந்த திவ்ய நன்மையை பெற உள்ள தடைகளை தூர எறிந்து அவரை பெற வேண்டும்.

அப்போஸ்தலர்களுடன் எப்படி யேசு இரா உணவின் போது இருந்தாரோ, அப்படியே உண்மையாக ஒவ்வொரு திருப்பலியிலும் இருக்கிறார், அங்கே கூறியது போல, "இது என் உடல், என் இரத்தம்" என்று கூறுகிறார். பக்தியுடன், மரியாதையுடனும், அன்புடனும் திவ்ய நற்கருனையில் யேசுவை வழிபட்டால், அவர் தான் நம் மீட்பர் என்று நம்பி அவரை பெற்றால், அது தான், நமது நித்திய வாழ்வின் ஊற்றாகவும், தொடக்கமாகவும் இருக்கும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm


special thanks to WWW.azhagi.com (tamil editor)

No comments: