Saturday, August 22, 2009

ஆகஸ்டு 23, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 23, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை ' என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65 மேலும் அவர், ' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் ' என்றார்.66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67 இயேசு பன்னிரு சீடரிடம், ' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? ' என்று கேட்டார்.68 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் உண்மையான இறை சேவையை அதனுடைய நோக்கத்தை அறிந்த பின் பல சீடர்கள் யேசுவை விட்டு பிரிந்து சென்றதை பார்க்கிரறோம், அவர்கள் அனைவரும், அவரோடு பின் சென்று, அவர் சொல்லியதை கேட்டு, வந்தவர்கள், எப்படி யேசு சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன" என்று கூறினார். அந்த சீடர்கள் அவர் கூறியதை மேலோட்டமாகவே பார்த்தனர். உடலுக்கு எது தேவை என்று ஆராய்ந்தனர். யேசு கூறிய நித்திய வாழ்வை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அந்த வாழ்வு தான் சந்தோசமான வாழ்வு, வெற்றியின் வாழ்வு,மேலும் நித்திய வாழ்வும் ஆகும்.

யேசுவை அவர்கள் புனிதமாக அல்லது தெய்வீகமாக பார்க்கவில்லை. அவரை மனிதனாகவே பார்த்தனர், மெசியாவாக பார்க்க வில்லை. மனிதர்களின் தலைவராகவே பார்த்தனர். ஆன்மாக்களின் தலைமையாக பார்க்கவில்லை. ரோமானியர்களிடமிருந்து அவர்களுக்கு விடுதலையளிப்பவராகவே பார்த்தனர், பாவங்க்களுக்கு விடுதலை அளிப்பவராக பார்க்கவில்லை.

யேசுவின் உடலையும், இரத்தத்தையும், உண்ணவேண்டும் என்று கூறிய அவரது யோசனை, யாராலும் நினைத்து பார்க்க முடியாதது. ஆனால், அதில் உள்ள பரிசுத்த எண்ணத்தை, அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நித்திய வாழ்வை அவர்கள் எடுத்து கொள்ளவில்லை. யேசு இயற்கைக்கு மாறாக உள்ள சிந்தனையுடன் உள்ளார், அதனால், அவரை பின் செல்வது கற்பனையான ஒன்றாகும். என்று நினைத்தனர்.

உண்மையான சீடர்கள் - அவரோடவே இருந்து இன்னும் அதிகம் அவரிடம் கற்றரிய வேண்டும் என்று இருந்தவர்கள்- அவர்களுக்கும் யேசு சொன்னதை புரிந்து கொள்ள வில்லை. ஆனால் அவர்கள், யேசுவின் வார்த்தையில் பரிசுத்த ஆவியின் சக்தியை அறிந்து கொண்டனர்.
மற்றவர்கள் மூலமாக யேசு உங்களிடம் வந்துள்ளார், ஆனால், நீங்கள் அவரை அறிந்து கொள்ளாமல் இருந்தீர்கள்? ஏனெனில், அந்த மனிதரை மனிதராகவே பார்த்தீர்கள், மேலும், அவரிடம் கிறிஸ்துவிடம் இல்லாத பழக்க வழக்கங்களை கவனத்தில் எடுத்து கொண்டீர்கள்.

ஒவ்வொரு மனிதரும், கடவுளை போலவே படைக்கபட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும், பரிசுத்த ஆவியின் கொடையால், உயிரோடு இருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடம் கூட கிறிஸ்து இருக்கின்றார். நல்ல வெற்றியுள்ள , கிறிஸ்துவின் அன்பில் வாழ, ஒவ்வொரு மனிதரிடமும், மேலோட்டமாக பார்க்காமல், உள்ளே கிறிஸ்துவை கண்டு, அவர்கள் அனைவரையும், கிறிஸ்துவின் ப்ரசன்னமாகவே பார்க்க வேண்டும்.
திவ்ய நற்கருணையில், யேசுவின் உண்மையான ப்ரசன்னத்தை, உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லையா? மற்றவர்களிடம் இருக்கும் யேசுவை உங்களிடம் வருபவரை அறிந்து ஏற்றுகொள்ளுங்கள். அதன் மூலம், திவ்ய நற்கருனையை இன்னும் நன்றாக புதிய வழிகளில் பார்ப்பீர்கள்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
(thanks to www.azhagi.com)

No comments: