Friday, September 11, 2009

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு

Is 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 8
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.29 ' ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா ' என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.31 ' மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ' என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்று கடிந்துகொண்டார்.34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியின், இரண்டாவது வாசகம், கத்தோலிக்க மதத்தின் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், அதன் தொடர்புகளையும் விளக்கி சொல்கிறது.

விசுவாசமில்லாத எந்த ஒரு சேவையும், எவ்வளவு நல்ல சேவையாக இருந்தாலும், நம்மை அது மோட்சத்திற்கு இட்டு செல்லாது. நம்மில் சிலர், கோவில் வேலைகளில் ஈடுபட்டு செய்து, இறைவனின் இதயத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறோம், எல்லா ஜெபங்களையும், மிக சரியாக சொல்வதும், அதில் ஒரு அங்கமாகும். இந்த மாதிரியான எண்ணங்கள், நமது குழந்தை பருவத்திலே இருந்து வருகிறது. நாம் நல்ல மாதிரியாக இருந்தால், நமது அம்மா அப்பா, நமக்கு பரிசு தருவார்கள் என நினைக்கிறோம். பள்ளியில் ஒழுங்காக படித்தால், ஆசிரியர் நமக்கு பரிசு தருவார் என்ற எண்ணத்தோடு உள்ளோம்.
பிரச்சினை என்னவெனில், நாம் மோட்சம் செல்லக்கூடிய தகுதியை என்ன செய்தாலும் பெற முடியாத நிலையில் தான் உள்ளோம். அதனால் தான் யேசு இந்த பூமிக்கு வந்து, நமது பாவங்களை சிலுவையில் எடுத்து கொண்டார்.

விசுவாசமற்ற எந்த ஒரு வேலையும், நம்மை மோட்சத்திற்கு எடுத்து செல்லாது. ஏனெனில்:
யேசுவின் மேல் விசுவாசம் கொண்டவர்களாக நாம் இருந்தால், "யேசு நம் மேல் அளவு கடந்த அன்பு கொண்டு, நமக்காக சிலுவை மரணமடைந்து, உயிர்த்தெழுந்தார், அதனால் நாம் நித்திய வாழ்வை அடைவோம்" என்ற நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இது தான் நமக்கு மோட்சத்தின் கதவை திறக்கும். எனினும், அந்த கதவுக்குள் நாம் நடக்க வேண்டுமானால், நாம் யேசுவை பின் செல்ல வேண்டும். அவரை பின் செல்வதற்கு, அவர் நமக்காக இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று நம்புவதை விட இன்னும் அதிகம் நாம் செய்ய வேண்டியிருக்கிறது, அது என்னவெனில், அவரது வாழ்வையும், எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நம்ப வேண்டும். யேசுவை பின் செல்வது, நமது சொந்த வாழ்வை பாதிக்கும், நாம் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கிறிஸ்துவை போல நாம் மாறவேண்டும்.
நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பதை நாம் செய்யும் நல்ல காரியங்களே நிருபிக்கிறது. யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பது, அவர் மேல் அதிக அளவு அன்பு செய்து, அவர் யாரையெல்லாம் அன்பு செய்கிறாரோ, அவர்களையெல்லாம் நாமும் அன்பு செய்வதில் உள்ளது. மற்றவர்கள் அனைவருமே அவர்களுக்கு நமது அன்பை பெற அந்த தகுதி இருந்தாலும், இல்லையென்றாலும், நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.

யேசுவின் மேல் உள்ள விசுவாசம் என்பது, நாம் அவர் என்ன சொன்னாலும், அதனை செய்ய தயாராக உள்ளோம் என்பதை காட்டுகிறது. அவரை போலவே நமது எல்லா செயல்களிலும் நடந்து கொள்வது, அவரது குண நலன்களை நாமும் பின் பற்றுவது, அவரது அழைப்பை ஏற்று கொள்வது. (குருவாக, இறைசேவையாளராக).
யேசு இன்றைய நற்செய்தியில் கேட்பது போல் "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" நம்மை கேட்டால், நமது பதில், நீங்கள் எங்களது மெசியா, எங்களை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர், நீங்கள் தான் கடவுள், எப்படி வாழ்வேண்டும் என, எங்களுக்கு சொல்லி கொடுப்பவர், நம் மேல் அதிக அன்பு கொண்டவர், மற்றவர்கள் மேல் நாம் அன்பு கொள்ள நமக்கு அதிகாரம் அளிப்பவர், அதனால், நமக்கு சிலுவை துன்பம் வந்தாலும், நம்மை காப்பவர். என்று சொல்பவர்களாக நாம் இருப்போம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: