Friday, September 18, 2009

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு


Wis 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16--4:3
Mark 9:30-37


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.31 ஏனெனில், ' மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.33 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ' வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார்.34 அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ' ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' என்றார்.36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,37 ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நாம் பல தீமைகளை பார்க்கிறோம்: பொறாமை நல்லதை அழிப்பதையும், சுய நலம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், தற்பெருமை, வழியில் வருவபவர்களை அழிப்பதையும் பார்க்கிறோம்.

முதல் வாசகம், வெளியாட்களின் தீய நடவடிக்கைகளால், இஸ்ரேல் நாடு எப்படி அமுக்கப்பட்டது. என்று விளக்குகிறது. நற்செய்தியில், தெய்வத்தை விட்டு விலகி நிற்பவர்களின் தீய எண்ணங்களை யேசு கண்டறிகிறார். இதை அனைத்தையும்விட பெரிய இழிவான தீமையை, ஜேம்ஸ் சொல்கிறார். பங்கு திருச்சபையில், கிறிஸ்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை குறிப்பிடுகிறார்.

பொறாமையும், சுய நலத்தின் விருப்பங்களும் தான் ஒவ்வொரு பங்கிலும் நடக்கும் ப்ரச்சினைகளுக்கு மூல காரணம் ஆகும். பங்கு கோவிலின் உள்ள ஊழியர்களிடையே ஏற்படும் பிரிவு, கோவில் சேவை செய்பவர்களிடம் ஏற்படும் ஒற்றுமையின்மை, தான் வெளியே தள்ளப்படுகிறோமோ என்று நினைக்கும் ஒவ்வொரு தொண்டரிடமும், கிறிஸ்துவ குடும்பங்களிடையே ஏற்படும் பிளவுகள், குறைவான விசுவாசம் உள்ளோரை வெளியே தள்ளும் குணங்கள் எல்லாமே பொறாமையாலும், சுய நலத்தாலுமே ஏற்படுகிறது. -- இவையெல்லாமே தீயவை.

எந்த ஒரு பிரச்சினையின் மூலக்கூற்றை அறிய வேண்டுமானால், நமது சுய நலத்துடன் கூடிய விருப்பங்களை பார்த்தோமானல் தெரியும். நேர்மையாகவும், உள்ளார்ந்த நோக்கத்துடனும், பிரச்சினையின் உள்ள நயவஞ்சக நோக்கங்க்களை பாருங்கள். மற்றவர்களிடம் இதனை பார்க்கும்போது,நீங்கள் வருத்தபட்டது உண்டா? அப்படி வருத்தபடவில்லை என்றால்? ஏன்? நீங்கள் இன்னும் உங்கள் சுய நலத்தினால் உள்ள கொளவரத்தினாலும், தற்பெருமையினாலும் இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.

இதற்கெல்லாம், யேசு நிவாரண மருந்து தருகிறார்: "யாராவது முதலாவதாக இருக்க நினைத்தால்( இந்த ஆசை நமது சுய நலத்தினால் தோன்றியது) அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் " என்று கூறுகிறார்.
சுய நலத்தினால் நம்மில் உண்டாகும் நோக்கம், பாவமாகும், ஏனெனில், மற்றவர்களிடமிருந்து வெற்றியை தட்டி பறிக்க முயற்சி செய்யும். ஜேம்ஸ் , நமது நோக்கம் என்னவாக இருந்தாலும், அது நல்ல நோக்கமாக இருந்தாலும், கடவுளிடம் வேண்டி, பரிசுத்த ஆவியுடன் இனைந்து , அந்த நோக்கத்திற்காக பாடுபட வேண்டும்- ஆனால், நாம் நமது சுய நலத்தினால், அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என நினைக்க கூடாது.

கடவுள் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து, நாம் கேட்பவற்றை கொடுக்க தயாராய் உள்ளார், ஆனால் அந்த வேண்டுதல், நமது பங்கு திருச்சபைக்கு பயனுள்ளதாகவோ, நமது குடும்பம் முழுதுக்கும் பயனுள்ளதாகவோ, இறைசேவையில் பங்கு கொள்வோருக்கு பயனுள்ளதாகவோ இருந்தால் கடவுள் நமது வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறார். மற்றவர்களுக்கு எப்படி உதவமுடியும் என்று நமது வேண்டுதல்கள் நினைத்து நாம் இறைவனிடம் வேண்டினால், அந்த ஜெபம் தூய்மையானது, அமைதிக்குரியது, முழு இரக்கத்துடன் உள்ளது, நிச்சயம் அதற்குண்டான கனியை தரும்.


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: