27 செப்டம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Num 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 9
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், ' போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ' என்றார்.39 அதற்கு இயேசு கூறியது: ' தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 42 ' என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், யேசு, 'நமக்கு எதிராக யார் யாரெல்லாம் இல்லையோ அவர்களெல்லாம், நம்மை சார்ந்தவர்கள் " என்று கூறுகிறார். இறையரசில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மக்களோடு பழகுவதில், அவர்கள் எண்ணங்கள் , நம்மிடம் அனுகுவது பற்றி பல் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.
சில நேரங்களில், ஒரு சிலர் நமக்கு எதிராக இருக்கின்றனர் என்று நாம் நினைப்போம், ஆனால், உண்மையில் அவர்கள் அது மாதிரியான எண்ணத்தில் இல்லாமல் இருப்பார்கள். எடுத்து காட்டாக , சிலர் ஒரு சில உண்மைகளை ,நம்மிடம் சொல்லும்போது, நமக்கு பிடிக்காத விசயமாக இருந்தால், அவர்களை நம் எதிரி போல் பார்க்கிறோம், ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசி ஆவர்.
வேறு சில நேரங்களில், பலர் அவர்களின் தேவைகளுக்காக, நம்மோடு சேர்ந்து இருப்பது போல் இருப்பார்கள், கடவுள் நம்மை எதற்காக தேர்ந்தெடுத்தாரோ, நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ , அதனை செய்ய அவர்கள் நமக்கு உதவுவதில்லை.
சில சமயம் இறைபணி செய்பவர்கள், நாம் எதிர்பார்ப்பது போல் அவர்கள் இறைபணி செய்வதில்லை. அதனால், கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை அவர்கள் செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம். நீங்கள் யாரையாவது உங்கள் கருத்துகளுக்காக ஆண்டவரிடம் வேண்டிகொள்ள சொல்லி, அவர்கள் அந்த கருத்துக்கு எதிராக வேண்டி கொண்டார்களா? இது மாதிரியான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா?
பல வருடங்களுக்கு முன், எனது கணவர் கம்பெனியில் ஆள்குறைப்பு நடந்தது, நிறைய பேர் வேலையிழந்தனர். எனது நண்பர் ஒருவரிடம், எனது கணவருக்கு வேலை போகக்கூடாது என்று இறைவனிடம் எங்களுக்காக வேண்டி கொள்ளஸ் சொன்னேன், ஆனால், அவளோ அந்த கம்பெனி நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அதனால், எனது கணவர் வேலை நிரந்தரமாக இருக்கும் என வேண்டிகொண்டாள். ஆனால் எனது எதிர்பார்ப்போ, எனது கணவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய ஜெபம் எனக்கு பிடிக்கவில்லை. இறுதியில், அந்த நண்பர் மட்டும் தான் கடவுள் என்ன நினைத்தாரோ, அதையே வேண்டிகொண்டாள்.
நம் நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ நமக்கு நல்லது செய்கிறார்களோ அல்லது நமக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? அல்லது கடவுளின் தூதர்களா? என்று தெரிந்து கொள்வதற்கு, நம்முடைய ப்ரச்சினைகளை ஒதுக்கி , நமது கோப தாபங்களை தள்ளி, யேசுவோடு தனிமையில் அமர்ந்து அவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். நமது பயத்தை , கோபத்தை கடவுளிடம் கொடுத்து விட்டு, நமக்கு எதிரானவர்களை மன்னித்து, இறைபணிக்காக நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், உண்மையாகவே சிலர் உங்களுக்கு எதிராக இருந்தால், ஜெபத்தில், நாம் தனியாக உட்கார்ந்து, ஞானத்தையும், அறிவையும், பரிசுத்த ஆவியிடம் கேட்டு, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் முதன்மைபடுத்த வேண்டும். அவர் நமக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்து நமது ப்ரச்சினைகளை தாண்டி வர உதவி செய்வார்.
(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment