Saturday, November 14, 2009

15 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

15 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு

Dan 12:1-3
Ps 16:5, 8-11
Heb 10:11-14, 18
Mark 13:24-32
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13
24 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.28 ' அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30 இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.32 ' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், யேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இங்கே அவர் இன்னும் அவரின் முதல் வருகையையே முடிக்கவில்லை. அந்த சீடர்களுக்கு எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கியிருக்கும்.

யேசு இறந்து, உயிர்த்தெழுந்து, மோட்சத்திற்கு எழுந்தருளிய பிறகும், அவர் இரண்டாவது வருகை காலம் தாமதமாக இருப்பதால், சீடர்கள் இன்னும் குழம்பி போனார்கள். "இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது" என்று அவர் கூறியது அவர்களுக்கு இன்னும் நினைவில் இருந்தது. இருந்தும் காலம் தான் கழிந்தது, அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பித்தார்கள், ஆனாலும் யேசு மீண்டும் வராமலிருந்தார், மேகங்களிடையே இன்னும் ப்ரசன்னமாகவில்லை. ஆனாலும் இந்த துயரம் இன்னும் போகவில்லை.
முடிவில்லாத ப்ரச்சினைகள் உங்களுக்கு ஏதாவது இருக்கிறதா? யேசு எங்கே? அவர் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்: "இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் " . அவர் எந்த ஒரு தேதியையும் அறுதியிட்டு சொல்லவில்லை. சீடர்களுக்கு எந்த ஒரு தடயமோ, குறியீடும் கொடுக்கவில்லை. அல்லது இரண்டாம் வருக்கைக்கான எந்த ஒரு சரியான குறியீடை கொடுக்கவில்லை. ஏனெனில், அவருக்கும் அது தெரியாது!. (ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது) , அப்ப எதனை சீடர்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறார்.

அவர் நெருங்கி வருகிறார்!
கடந்த 2000 வருடங்களாக, நாம் "இந்த தலைமுறையின்" அங்கமாக இருக்கிறோம், அவரின் இரண்டாவது வருகை வரைக்கும், நாம் இந்த தலைமுறைதான். கிறிஸ்துவின் மனிதகுலத்தின் தலைமுறையில் இருக்கிறோம். கிறிஸ்துவின் உடலாக இந்த திருச்சபையில் நாம் இருக்கிறோம். கடவுள் தனது மகனை தியாகம் செய்த தலைமுறையில் நாம் அங்கத்தினராக உள்ளோம்.
கடவுளின் மீட்பின் திட்டம், ஈஸ்டர் ஞாயிறிலிருந்து தொடங்குகிறது. அந்த "கடைசி நாட்கள்" அன்றிலிருந்து தொடங்கி, கிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரை இருக்கும். இது பரிசுத்த ஆவியின் காலம் ஆகும். அது என்னவென்றால், கிறிஸ்து இவ்வுலக இறைசேவையை முடித்து, மோட்சத்திற்கு எழுந்தருளியுள்ளார், ஆனால், பரிசுத்த ஆவியை நமக்கு வழங்கி உள்ளார்.
அத்தி மரத்தின் போதனை, கோடைகாலம் நெருங்கி வரும்போது நமக்கு தெரியும். நமக்கு நல்ல நேரம் எது , கெட்டது எது என்று தெரியும். அது என்னவெனில், யேசு நம்மிடம் நெருங்கி வருகிறார். உடலோடு இல்லை (திருப்பலியில் திவ்ய நற்கருணையில் வருகிறார். அதனை தவிர்த்து) , ஆனால் பரிசுத்த ஆவியாக.

உங்களின் அடுத்த அடிக்கு அருகில், யேசு வாசல் கதவின் அருகே இருக்கிறார். உங்கள் அடுத்த கால் அடி, மோட்சத்திற்கு செல்லும் அடுத்த அடியாக இருக்கும். கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கும், அதன் மூலம், நாம் மோட்சத்திற்கு செல்ல முடியும். யேசு உங்களுக்காக அந்த கதவை இப்போது திறக்கிறார். அந்த கதவு பரிசுத்தமும், அன்பும் நிறைந்தது. முழு வாழ்க்கை வாழ , அந்த கதவின் வழியே செல்லுங்கள், அந்த முழு வாழ்வை தான், கடவுள் உங்களுக்காக திட்டமிட்டிருக்கிறார்.

© 2009 by Terry A. Modica

No comments: