Friday, November 20, 2009

நவம்பர் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
Dan 7:13-14
Ps 93:1-2, 5
Rev 1:5-8
John 18:33b-37
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 18
33 பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்டான்.34 இயேசு மறுமொழியாக, ' நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? ' என்று கேட்டார்.35 அதற்கு பிலாத்து, ' நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? ' என்று கேட்டான்.36 இயேசு மறுமொழியாக, ' எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல ' என்றார்.37 பிலாத்து அவரிடம், ' அப்படியானால் நீ அரசன்தானோ? ' என்று கேட்டான். அதற்கு இயேசு, ' அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர் ″ என்றார்.


(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து அரசர் தானா என்ற கேள்வி எழும்போது, யேசு அதற்கு பதிலளிக்காமல், கடவுளரசின் உண்மையான அர்த்தத்தை விளக்குகிறார். அவர் அரசர் என்பதை மறுக்காமல், "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்" என்று கூறுகிறார். அவர் எந்த ஒரு நாட்டிற்கும், அல்லது இந்த உலகத்திற்கோ அரசர் இல்லை, மாறாக, அவர் உண்மையின் அரசர், நேர்மையின், இயற்கையின் அரசர்.


யேசு நமக்கு ஆசிரியராகவும், உண்மையை எடுத்துரைக்கும் குருவாகவும் இல்லாவிட்டல், இந்த உலகத்தில் நடக்கும் பொய்யான பாசாங்குகளால் நாம் இழுத்து செல்லப்படுவோம், இந்த உலகை பொய்யினால் ஆளும் சாத்தானின் பிடியில் மாட்டுவோம். ஆனால், கடவுளின் உலகை சாத்தான் ஆள்கிறது என்பதே உண்மையை திரிக்கப்பட்டதாகும்.நிச்சயமாக சாத்தான் இந்த உலகை ஆளவில்லை. யேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்து கடவுளின் எல்லா உயிரனங்களையும் மீட்டார் என்பதை நினைவில் கொள்க. கிறிஸ்துவின் அரசை ஏற்றுகொண்டு, அவரின் குரலை கேட்டு அறிந்து, உண்மையின் வழி வாழ்வபவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள், அவர்கள் கடவுளரசில் இருக்கிறார்கள்.
நாம் பாவம் செய்யும்போது, அந்த நிலைமையின் உண்மையை புரிந்து கொள்வதில்லை. நமது வாழ்வின் முழு அரசராக யேசு இன்னும் இருக்கவில்லை.
எடுத்து காட்டாக, யாராவது ஒருவர், உங்களிடம் எதையோ கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியவில்லை என்று வைத்து கொள்வோம். அது கோவில் கட்டும் பணியாக இருக்கலாம். பக்கத்து வீட்டு நோயாளிக்கு உதவி செய்வதாக இருக்கலாம், அல்லது வேலை ஸெய்பவர்களாக இருக்கலாம், அவர் உங்களை விட விசுவாசம் குறைந்தவராக இருக்கலாம்.
அவர்கள் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? உங்களுடைய சொந்த வேலைகளால் நீங்கள் மிகவும் அசதியாகவும், மிகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறீர்களா? அதனால் மற்றவர்களின் தேவைகளை உங்களால் நிறைவேற்ற முடியவில்லையா? நமது உடல் தான் நாம் ஏற்கனவே அதிகமாக மற்றவர்களுக்கு செய்கிறோம், அதனால், நாம் இந்த பூமியில் அனுபவிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது என்று சொல்லும். இது தான் தீய எண்ணங்களால் உண்மையான நிலையை நாம் அறியாமலிருப்பது. நம் தேவைகளை , விருப்பங்களை அடைந்தால் தான் நமக்கு சந்தோசம் , ஆனால் மற்றவர்களுக்கு உதவிசெய்வதால், ஒன்றும் இல்லை என்று நாமாக நினைத்து கொள்கிறோம்.
நிதர்சனமான நிலையில், யேசுவின் குரலை கேட்டு, அந்த பழக்கத்தை தொடர்வோமானால், அது ஒரு பெரிய இன்ப அனுபவமாகும். மேலும், யேசு "இன்னும் அதிகமாக செல்" என்றும் "நல்ல சமாரித்தன் போல் மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள் " என்றும் கூறுகிறார். யேசு கூறும் நற்போதனைகளை கேட்டு, அதனை நாம் விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினால், நாம் கடவுளை, அவர் குரலை புரிந்து கொள்வதில் முன்னேறுவோம். நாம் செய்த நற்செயல்களால், விளையும் சந்தோசத்தில், நாம் இன்னும் கடவுளை புரிந்து கொள்பவர்களாக ஆவோம். அந்த நற்கணிகளை அடையாளம் கொள்வோம். ஆனால், நாம் பாவம் செய்யும்போது, நல்ல செயல்களால் நமக்கு கிடைக்கும் கணிகளை நாம் அறிந்து கொள்வதில்லை. கிறிஸ்து அரசரின் ஆட்சியின் கீழும், பரிசுத்த ஆவியின் ஞானத்தாலும், நாம் நமது பாவ சிந்தனையிலும், நடத்தையிலிருந்து மீள்வோம்.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: