Friday, November 6, 2009

நவம்பர் 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32வது ஞாயிறு
1 Kgs 17:10-16
Ps 146:7-10 (with 1b)
Heb 9:24-28
Mk 12:38-44

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 12
38 இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ' மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;39 தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;40 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ' என்று கூறினார்.41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.42 அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். 43 அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ' இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.44 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

யேசுவின் பின்செல்வதற்கு, நாம் அதிக விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் யேசு நம்மை பல இடங்களுக்கு , நாம் எதிர்பாராத இடத்திற்கு எடுத்து செல்கிறார், அதற்கு நாம் தயாராக வேண்டும், தியாகம் செய்ய வேண்டும், நமக்கு வசதியான வாழ்க்கையை விட்டு , மிகப் பரிச்சயமான எல்லைகளை விட்டு வெளியே வர வேண்டும்.

இன்றைய நற்செய்தியிலும், முதல் வாசகத்திலும் வரும் விதவைகளை பாருங்கள், தன்னால் இதனை செய்ய முடியாது, நமக்கு உணவு இல்லை என்று தெரிந்தும், அவர்கள் எப்படி தன்னிடம் உள்ளதை கொடுத்தார்கள்? கடவுள் அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வார் என்று கண்டிப்பாக தெரிந்து தான் தன்னிடம் உள்ளதை கொடுத்தார்களா? இல்லை அவர்களுக்கு தெரியாது. கடவுளின் மேல் உள்ள அன்பினால், அவர்களிடம் உள்ள அனைத்தையும் இறைவனுக்கு கொடுத்தார்கள்.
விசுவாசம் தான் ஒரு நல்ல அன்பின் அடையாளம் ஆகும். அது என்னவென்றால், கடவுளை நம்புவதற்கு நாமே முடிவு செய்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை உள்ள நாம், நமது கஷ்டமான நேரங்களில், நமக்கு தெரிந்த பலர் கைவிட்ட பிறகும், கடவுள் நம்மை கைவிடமாட்டர் என்று நாம் நம்பினால், அவர்களை எந்த தடையுமின்றி, நாம் அன்பு செய்ய முடியும். எந்த வித நிபந்தனையின்றி, நாம் நமது விருப்பப்படி, நமது நண்பர்களை அன்பு செய்யலாம். ஆனால் கடவுள் நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுடன், மற்றவர்கள் மேல் நாம் அன்பு செய்ய வேண்டும்.
விதவை தாய் எதை தொலைக்க கூடாதோ, எதை விட்டு விட முடியாதோ, அதனை கடவுளுக்கு கொடுத்தாள். நமக்கு தொந்தரவு செய்பவர்களையும், நம்மை துயரத்தில் ஆழ்த்தியவர்களையும், நம்மை ஒதுக்கி விட்டவர்களையும், நம்மால் அன்பு செய்ய முடியாது, இருந்தும் யேசு நம்மிடம், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு நல்லது செய்து, அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
சில நேரங்களில் சிலரை அன்பு செய்வது கூட மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் ஒரு எல்லையை கடந்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. யேசுவை தொந்தரவு செய்தவர்களை, அவர் என்ன செய்தார் என்று நினைத்து பாருங்கள். புனித வெள்ளி வர, யேசு எப்போதுமே, அவர்களிடமிருந்து விலகி வந்து விடுவார். ஆனால், அவர்கள் மேல் அன்பு செய்வதை நிறுத்தி விட வில்லை. கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டு, எப்போது பேச வேண்டும், எப்போது வெளியேற வேண்டும் என்று தெரிந்து அதன் படி நடக்க வேண்டும்.
சில நேரங்களில், மிகவும் கடின மனதுடையவர்களை அன்பு செய்தாலும், அவர்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் அழைத்து வர நாம் முயற்சிக்க வேண்டும். அவர்களை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றுவதை விட, அவர்களை அதில் கஷ்டபட்டு வெளியே வர செய்யவேண்டும். நாம் மனம் வருந்தி திருந்துவதற்கு முன், கடவுள் நம் பாவங்களை சுத்தம் செய்வாரா? என்று நினைத்து பாருங்கள். நாம் மனம் திருந்திய பின்பும் கடவுள் அதனை அகற்றப்போவதில்லை.
மற்றவர்களை அன்பு செய்வதற்கு, நாம் தியாகம் செய்ய வேண்டும், கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, அவர் ஆறுதல் தருவார் என்ற உற்சாகத்துடன் நாம் மற்றவர்கள் மேல் அன்பு செய்ய வேண்டும். கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார். கண்டிப்பாக நாம் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு இறங்கலாம். மற்றவர்களுக்காக நம் ஜாடியிலிருந்து கொடுக்கும் அன்பும், மற்றும் எல்லோமுமே என்றைக்கும் குறையாது.

(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: