மே 16, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம் ஞாயிறு
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.21எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.22நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.23இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.25நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.26நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி ஒற்றுமையின் நற்செய்தி. யேசு இறப்பதற்கு முன் விண்ணகத்தை நோக்கி முன் நமக்காக நமது திருச்சபைக்காக அவர் வேண்டினார். உறவிற்கான அருட்சாதனத்தை எஏற்படுத்துகிறார். யேசுவும் தந்தை கடவுளும் ஒன்றானவர்கள் போல, நாமும் ஒருவரோடு ஒருவர் ஒன்றானவர்கள் தான். அதன் மூலம் நமது ஒற்றுமையின் சாட்சியாக - நிரந்தரமான , பொறுப்புடனும், சுய தியாகத்தாலும், நிபந்தனையற்ற அன்பினாலும் - நாம் கடவுளின் அன்பை இந்த உலகத்திற்கு காட்டலாம். கடவுளின் அன்பு தான் உண்மையானது என்று உலகுக்கு நிருபித்து காட்டலாம். அவரின் அன்பு, நிரந்தரமானது, பொறுப்பானது, நிபந்தனையற்றது, தியாகத்தாலனது, யார் என்ன தவறு செய்திருந்தாலும், எல்லோர் மேலும் அன்போடு இருப்பவர்.
இவ்வுலகில், நமது திருமண அருட்சாதனமே , நமது ஒற்றுமையின் எடுத்து காட்டாகும். இதன் மூலம் நாம் கற்கும் போதனை கடவுள் நம்மை எந்த நிபந்தனையுமின்றி அன்பு செய்கிறார். நல்லதோ கெட்டதோ அவர் எப்பொழுமே நம்மை அன்பு செய்கிறார். நோயுற்று இருந்தாலும், மிகுந்த நலமுடன் இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், முழு நம்பிக்கையுடன் கடவுள் நம்மை அன்பு செய்கிறார். திருமண அருட்சாதனத்தில், கணவன் அவருடைய வாழ்க்கையை மனைவிக்கு சேவை செய்வதற்காக தியாகம் செய்கிறார், மனைவி, கணவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார். கிறிஸ்து அவருடைய வாழ்வை நமக்காக , இந்த திருச்சபைக்க்காக தம் வாழ்வை கொடுத்தார். கிறிஸ்து தான் இந்த திருச்சபையின் மணமகன் அவர். திருச்சபைக்காக , அவரின் வாழ்வை கொடுத்தார். அந்த வாழ்க்கையின் அர்ப்பணிப்பால் , நாம்மையும் அவர் பின் செல்லவும், அவருக்கு சேவை செய்யவும் நம்மை அழைக்கிறார்.
திருமணம் புனிதமானது! விவாகரத்து ஆன தம்பதிகளை கத்தோலிக்க குருக்கள் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடியாது, (அவர்களது முந்தைய திருமணம் உண்மையான ஒற்றுமையின்றி இருந்தால் தான்). தம்பதிகளின் இணைப்பு ஒற்றுமை , யேசுவும் , கடவுளும் கொண்ட ஒற்றுமையாக , அதே புனிதத்துடன் இருக்க வேண்டும். நாமெல்லாம் கடவுளின் இறைசேவைக்காக நாம் ஒற்றுமையின் புனிதத்துடன் இருக்க வேண்டும். அவரின் அன்பிற்கு உதாரணமாய் இருக்க வேண்டும்
இதே ஒற்றுமை, எல்லோருக்கும் பொருந்தும், கடவுள் எங்கெல்லாம் இரண்டு பேரோடு அல்லது அதற்கு மேற்பட்டவரோடு இனைகிறாரோ அங்கெல்லாம் கடவுளின் அன்புடன், நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும்.
ஒவ்வொரு இணைப்பும், (கடவுளால் உண்டாக்கப்பட்டது) அனைத்தும் புனிதமானது. ஒவ்வொரு உறவும், இவ்வுலகிற்கு யேசுவின் தியாகத்தையும், அவரின் உண்மையான அன்பையும் பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்துவின் உடலில் (நமது திருச்சபை) பிரிவினையும், வேற்றுமையும் இருந்தால், எவ்வளவு துன்பத்திற்கும் வேதனையுமாக இருக்கும். !
© 2010 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment