Friday, May 28, 2010

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 30, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த திரித்துவ திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

________________________________________
யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 16

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.


கடவுள் , உங்களுக்கு தெரியாததை உங்களுக்கு தெரியப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் யேசுவிடம் என்ன கேட்டு கொண்டிருக்கிறீர்கள் , இன்னும் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை? திருச்சபை உங்களுக்கு கூறும் போதனைகளில் எது உங்களுக்கு ப்ரியவில்லை அல்லது உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை? இன்றைய நற்செய்தியில், யேசு இன்னும் உங்களுக்கு நிறைய சொல்ல ஆசைபடுகிறார் என்று கூறுகிறார். ஆனால் அவர் கூறும் எல்ல விசயங்களையும் நம்மால், கையாள முடியாது.

ஏன் இன்னும் நாம் தயாராய் இல்லை? ஏனெனில், நாம் இன்னும் பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்படைத்து நம்மை தயார் படுத்தவில்லை. பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த விடவில்லை. நாம் நம்மையே கடவுளிடம் கொடுத்து நம்மை மாற்ற அவரிடம் கேட்க வேண்டும். உண்மை நமக்கு பெரிய சுமையாகவே இருக்கும், அது நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாக இருப்பதால், நாம் உடனடியாக ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
யேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக யேசுவிற்கு வந்தது. கடவுள் நமக்கும் அதே பரிசுத்த ஆவியை கொடுத்திருக்கிறார். அதே ஞானம், அதே உண்மை, எல்லா அன்பளிப்புகளும், அதனை உபயோகப்படுத்தவில்ல என்றால், அதெல்லாம் வீனான பொருளாகிவிடும் ஆனால், நம்மையும் பரிசுத்த ஆவியிடம் ஒப்படைத்து அவர் நம்மை தூய்மைபடுத்த வேண்டும். பரிசுத்த திரித்துவத்தில், தந்தை கடவுள் நமது பாவங்களை மன்னிப்பவர், யேசு அந்த மன்னிப்பை வழங்குபவர், பரிசுத்த ஆவி நம்மை தூய்மைபடுத்தி, இனிமேல் பாவம் செய்யாதே என்ற ஆற்றலை வழங்குபவர்.

பாவசங்கீர்த்தனத்தில், குருவானவர் யேசுவின் ப்ரசன்னமாகவும், இந்த திருச்சபையின் உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியின் செயலாகும், ஆனால், அதற்கு மேலும், குற்ற உணர்வை சுத்தமாக தூக்கி எறிவதாலும், பாவ நடத்தையிலிருந்து மாறி அந்த பாவங்களை இனிமேல் செய்யாமல் இருக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். திருப்பலியில் நடக்கும் பாவ மன்னிப்பில், பரிசுத்த திரித்துவ கடவுள் நம் மனம் திருந்துவதை ஏற்று கொண்டு, நம்மை இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ மாற்றுகிறார்கள்.
தாழ்ச்சியுடன் இருப்பது, நம்மால் இருக்க முடியும். நம் வாழ்வில் இன்னும் பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கு, நம்மாலே பதில் கண்டு பிடிக்க முடியும், எப்படி? தந்தை கடவுளின் விருப்பங்களை யேசுவுடன் இனைந்து நாம் இவ்வுலகில் நிறைவேற்றினால், இன்னும் பரிசுத்த வாழ்வில் வாழ்ந்தால், நமக்கு பதில் கிடைக்கும்.

© 2010 by Terry A. Modica

No comments: