Friday, May 7, 2010

மே 9 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 9 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2, 22-29
Ps 67:2-3, 5-6, 8
Rev 21:10-14, 22-23
John 14:23-29



யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 14

23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ' என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவு+ட்டுவார்.27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.28 ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி நமக்கு நல்ல பாடத்தை கற்று தருகிறது. இயேசுவை நாம் அன்பு செய்தோம் என்றால், அவரின் கட்டளைகளையும் , போதனைகளையும் நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்று அர்த்தம். நாம் அதனை தான் செய்ய விரும்புகிறோம். கிறிஸ்துவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அவரை போல வாழ முயற்சிக்கிறோம். யேசு அன்பு செய்வது போல , நாம் அன்பு செய்ய ஆசைபடுகிறோம். நாம் இதனையெல்லாம் செய்யும்போது, கடவுள் நம்மில் நீடித்து இருக்க ஆசைபடுகிறோம்.

எனினும், இது ஒன்றும் அவ்வளவு சுலபமானதில்லை. ஒவ்வொரு நாளும், அவரின் வார்த்தையை காப்பாற்றவும், அவரை போல வாழவும், நாம் முயற்சிக்கும்போது பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. அது மாதிரியான சவாலான நேரங்களில் இயேசு எப்படி கையான்டார் என்பதனை நாம் மறந்து விடுகிறோம். மக்கள் அவர்களின் தோல்விகளிலும், அன்பற்ற நடவடிக்கைகள் மூலமும், நமக்கு தொல்லை தருகின்றனர். மேலும், இதனையெல்லாம் பார்த்து விட்ட்ய், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி, பதில் நடவடிக்கையாக பாவ செயல்கலில் ஈடுபடுகிறோம்.

நமது நற்செய்திகளில், எந்த ஒரு இடத்திலும், ஒவ்வொரு சம்பவத்திற்கும், நாம் எப்படி கிறிஸ்துவை போல இருக்க வேன்டும் என குறிப்படவில்லை. "அது மாதிரியான நிகழ்ச்சிகள் நமக்கு நேர்ந்தால், கடவுளின் கொள்கயான #127 வை பின்பற்றுங்கள்:”



அதனால் யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பதாக நமக்கு உறுதியளிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து கொன்டு, யேசுவையும், அவரின் பரிசுத்த வழியையும் நாம் ஒவ்வொரு முறை சவாலை சந்திக்கும் போது நமக்கு வழி காட்டுகிறார். காலையில் எழுந்தது முதல், இரவில் தூங்கும் வரை நம்மோடு கூடவே பரிசுத்த ஆவியானவர் இருந்து நமக்கு வழி காட்டுகிறார்.


அப்புறம் என்ன, ? நமது ப்ரச்னை, எப்படி கிறிஸ்துவின் கட்டளைகளை கடைபிடிக்க வேன்டும் என்று நமக்கு தெரியாமல் இல்லை, ஆனால் நாம் கிறிஸ்துவின் கட்டளைகளை படி நடக்க பரிசுத்த ஆவியை துனையாக வைத்து கொள்ள மறந்து விடுகிறோம். அல்லது, அவரது பரிந்துரைகளை, வழிகாட்டுதலை நன்றாக புரிந்து கொள்ள நம்மால் முடியவில்லை. கடவுளின் முழு துனையும் நமக்கு உள்ளது. ஆனால் நமது வாழ்வில் சவால்களை , நாம் தான் கையாள வேண்டும் என நினைது கடவுளின் துணையின்றி முயற்சிக்கிறோம்.

பரிசுத்த ஆவியின் குரலை கேட்க , அவருடன் கூடவே எப்பொழுது இருக்க, இந்த பயிற்சியை செய்யுங்கள். ஒவ்வொரு மணி நேரமும், பாவங்களை கழுவி தூய்மையாக இருங்கள். ஒவ்வொரு மணி நேரமும் மாறும்போது, உங்கள் கடிகாரத்தில் அலாரம் வைத்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் அலாரம் அடிக்கும் போது, பரிசுத்த ஆவியான்வர் உங்களோடு இருந்து உங்களுக்கு வழிகாட்டுவதற்கு நன்றி சொல்லுங்கள். இன்னும் அடுத்த 60 நிமிடன்களுக்கு உஙளை வழி நடத்துவதற்கும் நன்றி சொல்லுங்கள். இதையே சில வாரங்கள் தொடர்ந்து செய்தால், நீஙள் அனைவரும் கடவுள் நம்மோடு இருப்பதையும், எப்பொழுது அவர் நமக்கு உதவி செய்கிறார் என்பது நமக்கு தெரியும்.

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

No comments: