மே 23 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்று இரண்டு நற்செய்தி வாசகங்கள் நாம் வாசிக்க முடியும். அதில் யேசு, , ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று இரண்டு முறை கூறுகிறார். முதலில், இயேசு அவரின் சீடர்களுக்கு அமைதியின் அன்பளிப்பை கொடுக்கிறார், அதன் மூலம், அவர்களின் கவலைகளை விட்டு விட்டு, அவர்களின் நடுவே நின்றிருக்கும் யேசுவை அவர்கள் கண்டு கொள்ள முடியும்.
மீண்டும், அவரின் இறைசேவையை ,சீடர்கள் தொடர அவர்களை அழைக்கும் பொழுதும், அவர்களிடம், "' உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று கூறி, பரிசுத்த ஆவியோடு வாழும்பொழுது , இவ்வுலகத்திற்காக, மக்களுக்காக கடவுளின் சேவையை நாம் தொடரமுடியும். யேசு நம்மோடு இருக்கிறார் என்று நாம் நினைக்கும் பொழுது, நாம் அமைதியோடு இருக்க முடிகிறது. இருந்தாலும், மற்றவர்களிடம் இயேசுவை பற்றி சொல்லும்பொழுது, நமக்கு சவாலக தான் இருக்கிறது. ஏனெனில், நாம் தகுதியற்றவர்களாக, அல்லது அதிக உறசாகத்துடனும், மேலும், நாம் நிராகரிக்கபடுவோஓம் என்றும், அல்லது நம்மை கேலி செய்வார்கள் என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் தான் அவர் நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.
தந்தை கடவுள் நம்மிடம் கேட்கும் இறைசேவையை செய்யும்பொழுது, நம்ம என்னவெல்லாம் தேவையோ அதனையெல்லாம் நமக்கு தருபவர் பரிசுத்த ஆவியானவர் ஆவார். அதனால், நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நமக்கு ஆறுதல் தராமல் இருக்க மாட்டார், அதுவும் மக்கள் நம்மை நிராகரிக்கும் பொழுது கண்டிப்பாக நம்முடன் இருப்பார்.
பரிசுத்த ஆவியின் துனையுடன் , யேசுவோடு நாம் இனைந்து இருப்பதால், நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய நன்மை, நம்து உள் அமைதி, நமக்கு என்ன நடந்தாலும், மற்றவர்கள் நம்மை என செய்தாலும், அல்லது ஒன்றுமே செய்ய வில்லை என்றாலும், நமது உள் அமைதி அமைதியாகவே இருக்கும். ஆவியோடு வாழ்வது என்றுமே அமைதியை தரும். பரிசுத்த ஆவியின் கொடைகளில் ஒன்று நமக்கு அமைதியை தருவது.
இன்றைய நற்செய்தியின் இறுதியில், யேசு அவருடைய சீடர்களுக்கு (முதல் கத்தோலிக்க குருக்கள்) பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்து, இறைவனின் ப்ரசன்னம் இங்கே தொடர்ந்து இருக்க அவர்களை தயார் படுத்தினார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை குருக்கள் மூலமாக யேசு நம்மிடம் வர தயார் படுத்தினார்.
பரிசுத்த ஆவியின் மன்னிக்கும் ஆற்றல், நமது பாவ வாழ்விலும் , அமளியான வாழ்விலும் , நாம் அமைதியை அனுபவிக்க ஆற்றல் தருகிறது. மன்னிப்பது ரொம்பவும் கடினமாக இருந்தாலும் கிறிஸ்துவின் ஆவியில், நாம் அதனை செய்ய முடியும். நம்மை காயப்படுத்துபவர்களை நாம் மன்னிக்கலாம், அவர்கள் திருந்தாவிட்டாலும் நாம் மன்னிக்கலாம். இது தான் நமக்கு அமைதியை கொடுக்கும்.
© 2010 by Terry A. Modica
Saturday, May 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment