Friday, October 22, 2010

அக்டோபர் 24,2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 24,2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30 வாரம்
Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18




பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை
9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நமது நோக்கம், நம்முடைய சொந்த சுய லாபங்களுக்காக இருந்தால், அதன் விளைவு என்ன என்பதை விளக்கி சொல்கிறது. "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் " கூடிய விரைவிலோ அல்லது சிறிது காலம் சென்றாலும் தம்மை தாமெ உயர்தி கொள்பவர்கள் தாழ்த்தபடுபவார்கள். அவர்கள் அதனை புரிந்து கொண்டார்களா அல்லது தெரிந்தும் அப்படி செய்தார்கள என்பது தெரியாது. அவர்களின் சொந்த நடவடிக்கையினாலே அவர்கள் தனது மதிப்பை குறைத்து கொள்வார்கள். அவர்கல் சந்திக்கும் மக்கள் அவர்களை உயர்வாக கருத மாட்டார்கள். கண்டிப்பாக, கடவுளும் அவர்களை உயர்வக மதிப்பதில்லை.


ஒரு நல்ல மாற்று முறை என்ன வென்றால், நமது அன்பை மற்றவர்களுக்காக கொடுக்கும்பொழுது, நம்மை பணிவுடனும், அடக்கத்துடனும் இருக்க செய்கிறது. நமது நோக்கம் அன்பில் நிலைத்திருக்காவிட்டால், நாம் சரியாக தான் நடந்து கொள்கிறோம் என்று நாம் நினைத்தாலும், அது சரியான வழி இல்லை. மற்றவர்களின் மேல் சரியாக அக்கறை கொண்டு, அவர்களுக்கு நாம் நல்லது செய்யும்பொழுது, நாம் நாமாகவே சரியாக இருக்கிறோம் என்று நினைத்து இருந்தாலும் , இந்த நல்ல செயல்கள் மூலமாக நாம் தாழ்ந்து கடவுளுடன் பரிசுத்த வாழ்வில் தொடர்வோம்.


மற்றவர்களிடம் நாம் அன்பு செய்ய வேண்டும் என்று தான் நாம் சரியாக படைக்கபட்டிருக்கிறோம். நமக்கு நாமே சரி என்று நிர்ணயித்து கொள்வது, நாமே முடிவெடுத்து கொள்வது ஆகும். இது நம்மை நல்ல விசயங்கள் செய்வதற்காக ஊக்குவிக்கிறது. ஆனால் இது நமது சுய லாபங்களுக்காக நம்மையே பாராட்டுவது போல ஆகும். அதன் மூலம், கடவுளின் அங்கீகாரத்தை பெறுவதற்கும், அல்லது நமது சொந்த லாபங்களுக்காகவும், இதனை செய்யலாம். அன்பு, தான் சரியானது. அது தான் மற்றவர்களுக்காக பல சேவைகள் செய்ய ஊக்குவிக்கும்.

இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் போல தான் நாம் பலர் இருக்கிறோம். நம்மை விட இன்னும் பாவ வாழ்வில் இருப்பவரை பற்றி நினைத்து பாருங்கள், கோவிலுக்கு செல்லாதவர்கள், உங்களை போல அதிகம் ஜெபம் செய்யாதவர்கள். உங்களை போல நேரத்திற்கும், அக்கறைக்கும் மதிப்பு கொடுக்காதவர்களை நினைத்து பாருங்கள். ஒரு சிலரை அன்பு செய்வது மிகவும் கடினமாக உள்ள சிலரை நினைத்து பாருங்கள்.

இதற்கெல்லாம், சரியான தீர்வு என்னவெனில், கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதனை நினைத்து அவரிடம் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். கடவுளின் அன்பை நம்மோடு இனைத்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டால், முழு ஆற்றலோடும், எடுத்த காரியத்தில் வெற்றியோடும் நம்மால் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியும் . நாம் கடவுளின் திவ்ய நற்கருணையோடு இனைந்து நாம் எல்லா சேவைகளிலும் ஈடுபட்டால், அவர் நம்மை நமக்கு உள்ள குறைகளை முழுதும் நீக்கி கடவுளுக்கு எது சரியென்று படுகிறதோ அதனையே நமக்கும் ஆற்றலாய் கொடுத்தருளுவார்.

© 2010 by Terry A. Modica

Saturday, October 16, 2010

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 – 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை
1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில்,கடவுளிடம் விசுவாசம் கொள்பவர்களிடம் , அவர்கள் நீதி வேண்டி அவரிடம் வந்தால் , கண்டிப்பாக அவர்க்ளுக்கு தேவையான உரிமையையும், பாதுகாப்பையும் தருவார். நம்மை யாராவது நிராகரித்தாலோ, ஒதுக்கபட்டாலோ, தவறான குற்றமிழைக்கபட்டாலோ, கடவுள் நம்மை காப்பார். மேலும் கடைசியாக, எவ்வளவு சீக்கிரமாக உங்களை காப்பாற்ற வருவார்? நிச்சயம் உடனே வருவார். அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா?

கடவுள் எப்பொழுமே மெதுவாக தான் நாம் வேண்டும் ஜெபத்திற்கு பதிலளிப்பார். (சில நேரங்களில் மாதங்கள் , வருடங்கள் ஆகலாம்). , அந்த ப்ரச்னை முடிவிற்கு வரும் வரை, யேசு உங்களோடு இருப்பார், மேலும் சாத்தானிடமிருந்து உங்களை காப்பார்.

யேசு எங்கே என்பது நமது கேள்வியல்ல. அல்லது ஏன் அவர் உடனே நமக்கு உதவி செய்ய வில்லை என்பது நமது கேள்வி அல்ல. இன்றைய நற்செய்தியில் கடைசி வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, யேசு உங்களிடம் வரும்போது நம்பிக்கையோடு இருப்பீர்களா? அல்லது ப்ரச்னையில் உள்ள பயத்தால் அவரை நாம் அடையாளம் கொள்ளவில்லையா?

நாம் விசுவாசத்தோடு வாழாவிட்டால், நமது ப்ர்ச்னையை இன்னும் பெரிதாக்கி செல்கிறோம். கடவுளை உதவிக்கு அழைத்த பின் இன்னும் மனச்சோர்வு அடைகிறீர்களா? நன்றாக கவனியுங்கள், யேசு உங்கள் அருகிலேயே நிற்கிறார், உங்கள் அதி விசுவாசத்தையும் நம்பிக்கையும் பெற. கடவுள் உங்கள் தடைகளை உடைதெறியாமல் இருப்பதால், நீங்கள் செயல்குழைந்து போகிறீர்களா? மேலும் கவனியுங்கள் யேசு உங்கள் நீங்கள் செல்லும் வழியை விட்டு, வேறு வழிக்கு , அவர் காட்டும் வழியில் செல்ல சொல்கிறார்.

நாம் எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எதிராக வேலை செய்யும் சாத்தானின் ஆவியை யேசு வெட்டி உங்களை விட்டு தூர ஒட்டுகிறார். ஆனால், அந்த யேசுவின் செயலை நம்பவில்லையானால், யேசுவின் வாளினால், உங்களுக்கு ஒரு உதவியும் இல்லை.
உங்களை அடிக்கடி எப்பொழுதுமே தொந்தரவு செய்பவர்களை என்ன செய்யலாம். உங்கள் கண்கள் யேசுவை பார்க்காமல், அவர்களையே பார்த்து கொண்டிருந்தால், யேசு உங்களுக்கு கொடுக்கும் உரிமையை நீங்கள் தவற விட்டு விடுவீர்கள். நாம் விசுவாசத்தோடு வாழும்போது, யேசு நமக்கு கொடுக்கும் உரிமையை, அன்பளிப்பை நாம் அனுபவிக்க முடியும். அதனை நாம் இதயத்திலும், அவரது அமைதியையும், சமாதானத்தையும்,இடைவிடா முயற்சியையும் நாம் அனுபவிப்போம்.

© 2010 by Terry A. Modica

Friday, October 8, 2010

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு
2 Kings 5:14-17
Psalm 98:1-4
2 Timothy 2:8-13
Luke 17:11-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17


பத்து தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்
11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?18கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார்.19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ஏன் 9 தொழு நோயாளிகள், தங்கள் நோய் குணமாகிய பின் யேசுவிடம் திரும்பி வந்து நன்றி சொல்லவில்லை? ஒரு வேளை, அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லது நணபர்களிடமும் சொல்ல சென்று விட்டார்களோ? அல்லது உண்மையிலேயே நாங்கள் குணமாகிவிட்டோம், அதனால் உங்களோடு நாங்களும் சேர்ந்து இருக்கலாம் என்று அவர்களிடம் கூறினார்களோ? அல்லது ஒரு வேலை வாங்கி கொண்டு தங்கள் சம்பாத்தியத்தை பார்க்கலாம் என்று இருந்தார்களோ? ஏனெனில் தற்போது மற்றவர்களிடம் பிச்சை எடுத்து வாழமுடியாது என்று வேலை தேடியிருக்கலாம்.

எல்லாமே தகுதியான, மற்றும் நம்ப தகுந்த பதில்களே ஆகும்.
அந்த சமாரிய தொழுநோயாளிக்கும் மட்டும் என்ன வித்தியாசம். வித்தியாசம் அவனது உள்ளத்தில் இருந்தது. அவனது தெய்வீக ஆண்மாவில் இருந்தது. யேசுவின் மேல் உள்ள அவனது விசுவாசம் அவனது உடலை மட்டுமல்ல, அவனது ஆன்மாவையும் குணமாக்கியது. அவனுக்காக மட்டும் அவன் கடவுளை பார்க்க போகவில்லை. கடவுளுக்காகவும் அவன் யேசுவை பார்க்க சென்றான். அவனிடமிருந்து சிலவற்ற அவன் யேசுவுக்கு கொடுக்க விரும்பினான். பாராட்டுதல், ஆராதனை நன்றி மற்றும் பல, அவன் யேசுவிற்கு கொடுக்க விரும்பினான்.

நாமும் அப்படித்தான் இருக்கிறோமோ?
நாம் திருப்பலிக்கு செல்லும்பொழுது, நமக்காக மட்டும் தான் போகிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் போகிறோமா? இது இரண்டும் நடந்தால், நாம் கோவிலில் நல்ல ஒரு அனுபவத்தை அடைகிறோம். யேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு யேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறீர்களா? உங்கள் வேண்டுதலில் பெரு மகிழ்ச்சி அடைகிறீர்களா? நீங்கள் சந்தோசத்துடனே அங்கே இருக்கிறீர்களா?
நாம் நமது வேண்டுதலை கடவுளிடம் வைக்கும் பொழுது, நமக்காக அதனை கேட்கிறீர்களா? அல்லது கடவுளுக்காகவும் அந்த வேண்டுதல், கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை என்று நினைத்து பாருங்கள். அந்த தேவைகள் கடவுளரசிற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ?
ஒரு குறிக்கோளை நாம் அடையும் போது, அதனால் கடவுள் பயனடைகிறாரா? நமது சோதனைகளுக்கிடையே அவர் நமது வேண்டுதலுக்கு பதிலளிக்கும்போது , அவருக்கு என்ன கைமாறு கிடைக்கிறது?
கடவுள் அவருக்கே கொடுக்க முடியாத சில விசயங்கள் உங்களிடம் உள்ளன. நமது பாராட்டுதல் மற்றும் வேண்டுதல், ஆராதனை. இந்த அன்பளிப்புகளை குறைவாக மதிப்பிடாதீர்கள்.

© 2010 by Terry A. Modica

Friday, October 1, 2010

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Habakkuk 1: 2-3; 2: 2-4
Psalm 95:1-2,6-9
2 Timothy 1:6-8, 13-14
Luke 17:5-10

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

இயேசுவின் அறிவுரைகள்
(மத் 18:6 - 9; மாற் 9:42 - 48)
. ' 5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ' எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் ' என்று கேட்டார்கள்.6அதற்கு ஆண்டவர் கூறியது: ' கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ' நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில் ' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.7 ' உங்கள் பணியாளர் உழுது விட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ' நீர் உடனே வந்து உணவருந்த அமரும் ' என்று உங்களில் எவராவது சொல்வாரா?8 மாறாக, ' எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம் ' என்று சொல்வாரல்லவா?9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ' நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் ' எனச் சொல்லுங்கள். '

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, நமக்கு அதிகம் தொந்தரவாக உள்ளது. கடினமான வேலைகளை செய்து, அதனை கடவுளுக்கு அர்ப்பணிக்கும்பொழுது, கடவுளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது "நீங்கள் ஒரு நல்ல பணியாளன்"
நாம் வீட்டினில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அதற்குரிய பாராட்டு கிடைக்காமல், மேலும் பல வேலைகள், நம்மை செய்ய சொல்வார்கள்!. குடும்பத்தில், பெற்றோர்கள் நாள் முழுதும் வேலை செய்து ஓய்வாக இருக்கும் நேரத்தில் கூட, குழந்தைகளுக்காக படிப்பு வேலை செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில், நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை பளு தரப்படுகிறது, ஏனெனில் சோம்பேறிகளாக உள்ள நபரிடம் வேலை கொடுப்பதை விட, நல்ல முறையில் வேலை செய்பவர்களுக்கே அதிக வேலை கொடுக்கபடுகிறது. பங்கு கோவிலிலும், 10 சதவிகித மக்களே எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.
"கடவுளே நான் உங்கள் இறையரசின் நல்ல ப்ணியாளன் இல்லை! ஏனெனில், எனக்கு இடப்பட்ட வேலைகளை மட்டுமே நான் செய்கிறேன்!". என்று நாம் இந்த வேலைகளை செய்யும்போது , நம்முடைய பதில் இதுவாக இருக்கும் என்று இயேசு சொல்கிறார். அதிக வேலை பளு நமக்கு கொடுக்கபடவேன்டும் என்று இயேசு கூறுகிறாரா? அப்படி ஒன்றும் இல்லை. என்ன சொல்கிறார் என்றால், நமக்கு கொடுக்கபட்ட வேலைகளை செய்வதை விட, நமது அன்பினாலும், அக்கறையினாலும் நாமே அந்த வேலைகளை எடுத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.


ஓய்வெடுப்பதும் மிக முக்கியமாகும். இயேசுவும் சில நேரம் எடுத்து கொன்டு ஜெபம் செய்து, அவர் சக்தி பெறுவார். மற்றவர்களுக்கு வேலை கொடுப்பது சரியானது தான், அதனால், நாம் மட்டுமே எல்லா வேலைகளை செய்து நாம் நமது சக்தியை வீனடிக்க வேண்டியது இல்லை. இயேசுவும் சில வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். இதே போல் சமமக பிரித்து கொள்வது தான் நாம் எல்லாருக்கும் தேவையானது.
எனினும், நம்மில் பலர், இன்னும் கொஞ்சம் அதிகம் வேலை செய்ய வேன்டும் என்று நினைப்பதில்லை, அதற்காக முயற்சி எடுப்பதுமில்லை. ஏனெனில், நமக்கு எதிலும் சமமான , ஆக்கபூர்வமான விசுவாசம் இல்லை. மிதமான நிலையிலேயே, இருக்க விரும்புகிறோம். ஒரு வேலை நாம் செய்ய வேன்டிய தேவையிருந்தால் தான் நாம் செய்கிறோம். அல்லது நமக்கு தோதுவாக இருந்தால் தான் அந்த வேலையை செய்கிறோம். இதையே தான் நமது தெய்வீக வாழ்விலும் செய்கிறோம். மேலும் ஒரு மரத்தை கடலில் போய் விழு என்றால் , விழுந்துவிடும் என்று இயேசு சொல்வதை பார்த்து நாம் ஆச்சரியபடுகிறோம். எப்பொழுது நீங்கள் இது போல ஆச்சரியத்தை பார்த்தீர்கள்?

அதிக விசுவாசத்துடனும், அதிக சேவையும், வேலையும் செய்வதிலும் உள்ள தொடர்பு இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது: இந்த இரண்டுமே நடக்க, நாம் கடவுளின் அன்பு முழுமையானது என்றும், எவ்வித நிபந்தனையற்றது எனவும், நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதிலிரிந்தே கடவுள் நமக்கு சேவை செய்ய எப்பொழுது தயாராய் இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. அதனால், நம் மூலம், அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது. நாம் அயற்சி ஆகும்பொழுது , கடவுள் நமக்கு மீண்டும் உற்சாகமும், ஆற்றலும் சக்தியும் கொடுப்பார். இதனை நீங்கள் நம்புகிறீர்களா?

© 2010 by Terry A. Modica