Friday, October 8, 2010

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு
2 Kings 5:14-17
Psalm 98:1-4
2 Timothy 2:8-13
Luke 17:11-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17


பத்து தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்
11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?18கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார்.19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், ஏன் 9 தொழு நோயாளிகள், தங்கள் நோய் குணமாகிய பின் யேசுவிடம் திரும்பி வந்து நன்றி சொல்லவில்லை? ஒரு வேளை, அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லது நணபர்களிடமும் சொல்ல சென்று விட்டார்களோ? அல்லது உண்மையிலேயே நாங்கள் குணமாகிவிட்டோம், அதனால் உங்களோடு நாங்களும் சேர்ந்து இருக்கலாம் என்று அவர்களிடம் கூறினார்களோ? அல்லது ஒரு வேலை வாங்கி கொண்டு தங்கள் சம்பாத்தியத்தை பார்க்கலாம் என்று இருந்தார்களோ? ஏனெனில் தற்போது மற்றவர்களிடம் பிச்சை எடுத்து வாழமுடியாது என்று வேலை தேடியிருக்கலாம்.

எல்லாமே தகுதியான, மற்றும் நம்ப தகுந்த பதில்களே ஆகும்.
அந்த சமாரிய தொழுநோயாளிக்கும் மட்டும் என்ன வித்தியாசம். வித்தியாசம் அவனது உள்ளத்தில் இருந்தது. அவனது தெய்வீக ஆண்மாவில் இருந்தது. யேசுவின் மேல் உள்ள அவனது விசுவாசம் அவனது உடலை மட்டுமல்ல, அவனது ஆன்மாவையும் குணமாக்கியது. அவனுக்காக மட்டும் அவன் கடவுளை பார்க்க போகவில்லை. கடவுளுக்காகவும் அவன் யேசுவை பார்க்க சென்றான். அவனிடமிருந்து சிலவற்ற அவன் யேசுவுக்கு கொடுக்க விரும்பினான். பாராட்டுதல், ஆராதனை நன்றி மற்றும் பல, அவன் யேசுவிற்கு கொடுக்க விரும்பினான்.

நாமும் அப்படித்தான் இருக்கிறோமோ?
நாம் திருப்பலிக்கு செல்லும்பொழுது, நமக்காக மட்டும் தான் போகிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் போகிறோமா? இது இரண்டும் நடந்தால், நாம் கோவிலில் நல்ல ஒரு அனுபவத்தை அடைகிறோம். யேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு யேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறீர்களா? உங்கள் வேண்டுதலில் பெரு மகிழ்ச்சி அடைகிறீர்களா? நீங்கள் சந்தோசத்துடனே அங்கே இருக்கிறீர்களா?
நாம் நமது வேண்டுதலை கடவுளிடம் வைக்கும் பொழுது, நமக்காக அதனை கேட்கிறீர்களா? அல்லது கடவுளுக்காகவும் அந்த வேண்டுதல், கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை என்று நினைத்து பாருங்கள். அந்த தேவைகள் கடவுளரசிற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ?
ஒரு குறிக்கோளை நாம் அடையும் போது, அதனால் கடவுள் பயனடைகிறாரா? நமது சோதனைகளுக்கிடையே அவர் நமது வேண்டுதலுக்கு பதிலளிக்கும்போது , அவருக்கு என்ன கைமாறு கிடைக்கிறது?
கடவுள் அவருக்கே கொடுக்க முடியாத சில விசயங்கள் உங்களிடம் உள்ளன. நமது பாராட்டுதல் மற்றும் வேண்டுதல், ஆராதனை. இந்த அன்பளிப்புகளை குறைவாக மதிப்பிடாதீர்கள்.

© 2010 by Terry A. Modica

No comments: