Friday, January 14, 2011

ஜனவரி 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 1

29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
(thanks to www.arulvakku.com)

ஒவ்வொரு திருப்பலியிலும், "இதோ இறைவனின் செம்மறி, இவரே உலகின் பாவங்களை போக்குபவர்" என்று இன்றைய நற்செய்தியில் வருவது போல குருவானவர் சொல்வதை நாம் கேட்கிறோம். அதற்கு பதிலுரையாக நாம் : " இறைவா உன்னை பெறுவதற்கு நான் தகுதியற்றாவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்" என்று சொல்கிறோம்.

இந்த ஆண்மாவின் குணமடைதல், திருப்பலியின் ஆரம்ப நிலையிலேயே, நாம் பாவ மன்னிப்பு கேட்கும்பொழுது ஆரம்பித்து விடுகிறது. இந்த குணமடைதலால், நாம் யேசுவை தெய்வமாகவும், மனிதனாகவும் முழுவதுமாக பெறுகிறோம். அதன் மூலம், கோவிலை விட்டு வெளியேறி, யோவானை போல , நாமும், "யேசு தான் கடவுளின் மகன் " என்று இவ்வுலகிற்கு எடுத்துரைக்க தயாராக நாம் செல்கிறோம்.
திருப்பலியில் உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கிறதா?

திருப்பலியின் எல்லா பகுதிகளிலும் இந்த ஆண்ம குணமடைதல் பங்களிப்பு இருக்கிறது. நாம் பாடல் குழுவோடு இனைந்து பாடும்பொழுது, இயேசு அங்கே இருக்கிறார். பாவ மன்னிப்பு அருட்சாதனத்தில் இயேசு அங்கே இருக்கிறார். நாம் முழுமனதுடன் நமது பாவ மன்னிப்பையும், மனம் திருந்துவதையும் பார்க்கிறார். நற்செய்தி வாசகத்திலும் இயேசு இருக்கிறார், எப்படி ரொட்டி துண்டு உடைந்து நம்மை வளர்க்கிறதோ, அதே போல் ஒவ்வொரு நற்செய்தி வார்த்தையும் உடந்து நமது ஆன்மீக வளர்ச்சிக்காக உதவும். ப்ரசங்கம் நன்றாக இல்லாவிட்டாலும், அந்த திருப்பலியில் ப்ரசங்கமே இல்லாவிட்டாலும் , பரிசுத்த ஆவியானவர் நமக்கு தனியாக ப்ரசங்கம் சொல்கிறார். (நமது மனத்தில் ஒடும் ஏனோதானோ எண்ணங்கள் இறைவனின் செயலாகும்) மேலும் ஒவ்வொரு வேண்டுதலிலும் யேசு அங்கே இருக்கிறார்: நமது ப்ரார்த்தனைகளிலும் , குருவானவர் சொல்லும் ஜெபத்திலும் இயேசு இருக்கிறார்.

எல்லா திருப்பலியும், நம்மை மாறச் செய்கிறது, நம்மை தயார்படுத்துகிறது, கிறிஸ்துவின் சாட்சியாக நம்மை வெளியே அனுப்புகிறது. ஞான்ஸ்நாணம் கொடுத்த யோவானை போல நாமும் : "அவரை எனக்கு தெரியாது", அதனையே மாற்றி : " நாம் ரொட்டி துண்டையும், திராட்சை ரசத்தையும் தான் பார்த்தேன்",மேலும் " நான் பாவியாய் இருக்கிறேன் , மேலும் நான் செய்த அழுவுகள் எனக்கு தெரியவில்லை" மேலும் "எப்படி நாம் குணமடைகிறோம் என்பது எனக்கு ஆச்சரியாமாக இருக்கிறது" .

யோவனை போல நாமும்: "இப்போது நானும், கடவுளின் மகனை பார்த்து விட்டேன்" என்று சாட்சியம் கூற முடியும், "பரிசுத்த ஆவியானவர் திவிய நற்கருணையில் இயேசு இருக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதே பரிசுத்த ஆவியானவர், எனது பாவங்களை எனக்கு கான்பித்து அதிலிருந்து மீண்டு வர உதவினார். எனது புண்களை குணமாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தார்"

© 2010 by Terry A. Modica

No comments: