Friday, May 13, 2011

மே 15, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 15, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை.
ஈஸ்டர் காலத்தின் 4ம் ஞாயிறு



Acts 2:14a, 36-41
Ps 23: 1-6
1 Peter 2:20b-25
John 10:1-10


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 10


ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை
1 ' நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார்.4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது. ' 6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இயேசுவே நல்ல ஆயர்
7 மீண்டும் இயேசு கூறியது: ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே.8எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை.9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்

(thanks to www.arulvakku.com)





உங்களின் தெய்வீக வாழ்வில் வளர ஏதாவது முட்டுகட்டையாக இருக்கிறதா? அல்லது, உங்கள் உறவில் ஏதாவது ப்ரச்னையா? நீங்கள் ஏதாவது வேறு நெருக்கடியிருந்து உங்களால் வெளியே வர முடியாமல் , ஒரு கட்டத்தில் மாட்டி கொண்டு இருக்கிறீர்களா? அதனால், உங்கள் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் , திருப்தியையும் இழந்து நிறிகின்றீர்களா?


இன்றைய நற்செய்தி, இயேசு தான் , அந்த கட்டத்திலிருந்து வெளியே வரும் கதவு என்று கூறுகிறது. இவ்வுலக முட்டுகட்டையிலிருந்து விலகி நாம் மோட்சத்தின் கதவுகளை நோக்கி செல்ல இயேசு நமக்கு உதவி செய்கிறார். அதனால், இவ்வுலக வாழ்விலும் நாம் நித்திய வாழ்வை அனுபவிப்போம். அதனால், நாம் நிறைந்த அன்பினால் கட்டப்பட்ட வாழ்வை இவ்வுலகில் வாழ்வோம்.



நமது வழி தடைபட்டு போனால், நாம் இயேசுவை நமக்கு வழிகாட்டியாக இருக்க செய்து , அவர் நம்மை தடைகளை தாண்டி அழைத்து செல்ல அவரிடம் வேண்டி கொள்ள வேண்டும். கடவுள் நம்மிடம் செய்ய சொன்னதை செய்யும்பொழுது, யாராவது அதற்கான வழியை தடை செய்தால், இயேசு தான் நமக்கு வழியை திறக்கும் கதவாக இருப்பார். இயேசு அதனை வேறு வழியில் நிறைவேற்றிட உறுதுணையாக இருப்பார். கடவுள் நமக்கு மிகவும் செயல் குழைந்து போக கூடிய செயலை செய்ய சொல்லி , அதற்கான வழியே இல்லாத பொழுது, நாம் அதனை நிறுத்தி விடாமல், இயேசுவை நோக்கி வேண்டினால், அவர் அதற்கான வேறு வழியை நமக்கு காட்டுவார்.



இயேசு காட்டும் வழியில் நாம் செல்லும்பொழுது, கடைசி வாசல் செல்லும் வரை, இயேசுவோடு நாம் ஒன்றினைந்து, ஒன்றும் பேசாமல் அவர் பின் செல்லும் ஆட்டினை போல நாமும் செல்ல வேண்டும். நாம் அடுத்த இலக்கிற்கு செல்வதற்கு முன், நாம் நமது வழியில் பெரிய பயணத்தில் செல்ல வேண்டும்.


நாம், இயேசுவை விட்டு தனியே சென்று , அவரை விட்டு ஒதுங்கி இருக்கும்பொழுது தான், ஆட்டினை திருடி, அதனை வெட்டி கொண்டு செல்ல வரும் திருடன், நம்மை தொட முடியும்.


நம்பிக்கையினமையும், கவலையும் இரண்டு திருடர்கள் ஆவர், நமது அமைதியை கெடுத்து விடும், சந்தோசத்தை அழித்து விடும், திருப்தியை கொடுக்காது, நமது காயங்களை குணப்படுத்தாது. ஆனால் நாம் நினைப்பது போல், அவைகள் ஒன்றும் அவ்வளவு சக்தி வாய்ந்தவை அல்ல. அழிவை பற்றிய நமது பயத்தினால், அதனுடைய உண்மையான ஆற்றலை நாம் தெரிந்து கொள்வதில்லை. இயேசு நமது நல்லாயன் என்பதனை, அந்த கவலைகள் நம்மை மறக்க செய்கின்றன. இயேசு நல்லாயன், நமக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றிட, நமக்கு வழி காட்டுவார்.



© 2011 by Terry A. Modica

No comments: