Friday, May 27, 2011

மே 29, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 29, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு

Acts 8:5-8, 14-17
Ps 66:1-7, 16, 20
1 Peter 3:15-18*
John 14:15-21*


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 14


15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.16 ″ உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். ″
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், பரிசுத்த ஆவியை நமக்கு உண்மையை எடுத்துரைப்பவர் என்று இயேசு கூறுகிறார். சில அறிஞர்கள் பரிசுத்த ஆவியை "ஆலோசனை" கூறுபவர் என்றும் சொல்கின்றனர். கிரேக்க மொழியில் இதற்கு அர்த்தம் "நம்முடன் வருபவர்", இந்த வார்த்தைக்கு வழக்கறிஞர் என்றும் அர்த்தம் கொள்ளலாம். நாம் தவறான குற்றம் சாட்டப்பட்டாலோ, தவறாக கண்டிக்கபட்டாலோ, தவறான தண்டனை பெற்றாலோ நமக்காக பரிசுத்த ஆவி வாதிடுவார் , நம்மோடு கூட இருப்பார் என்று இயேசு நம்மிடம் கூறுகிறார்.





"அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்" என்று இயேசுவே பரிசுத்த ஆவியை குறிப்பிடுகிறார். கடவுளுக்கு நம்மை பற்றிய எல்லா உண்மைகளும் தெரியும். மற்றவர்கள் நம்மை பற்றி தவறாக பேசினாலும், கடவுள் நம்மை முழுதுமாக அறிந்தவர் ஆவர். நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்: கடவுள் நம்மை பற்றிய என்ன எண்ணத்துடன் இருக்கிறார் என்பது தான் நாம் முக்கியமாக எடுத்து கொள்ள வேண்டும். மேலும், நாம் நம்மை பற்றி கொண்ட எண்ணத்திற்கு மேலே அவர் நம்மை பற்றி மதிப்பீடு வைத்துள்ளார்.

நாம் நம்மை பற்றிய மிகவும் மோசமான மதிப்பீடு வைத்துள்ளோம். நியாயமாக நாம் நினைக்கவேண்டியதை விட, மிகவும் கீழ்த்தரமாக நாம் மதிப்பீடு வைத்துள்ளோம். அதனால் தான், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் அதிகம் கவலைபடுகிறோம். நாம் நியாயமாக நம் தவறுகளை, எண்ணங்களை ஆராய்ந்து, திருப்பலியில் , பாவமன்னிப்பு கேட்டும், அல்லது பாவசங்கீர்த்தனத்திலும் மன்னிப்பு கேட்டும், கடவுளோடு இணைந்தால் , இயேசு "நான் உங்களை கண்டிக்க வரவில்லை, இனிமேல் பாவம் செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்புவார்.




நீங்கள் சோதனைக்கு உட்படும்பொழுது, இயேசுவே நேரில் வந்து நம்மை மீட்க வேண்டும் எப்பொழுதாவது நீங்கள் ஆசைபட்டதுண்டா? இயேசு நம்மை தனியாக விட்டு செல்லவில்லை, எப்பொழுதும் பரிசுத்த ஆவியாக நம்மோடு இருந்து, நம்மை காப்பார்.



நாம் இயேசுவை அன்பு செய்ய வேண்டுமென்றால், அவரது கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கு மாறாக, நாம் நடக்கும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் கடவுளிடம் "இந்த பெருமதிப்புள்ள குழந்தை, உண்மையிலேயே பரிசுத்தமாக வாழ விரும்புகிறார்கள்" என்று கூறி, பிறகு நம்மிடம், "எப்படி பாவங்களை கைவிட்டு, பரிசுத்தமாக வாழ்வது என்று" உங்களுக்கு சொல்லி தருகிறேன் என்றும், மற்றவர்களிடம், "நீங்கள் என்னை அன்பு செய்தால், என்னுடைய நன்பனையும் அன்பு செய்யுங்கள் " என்றும் கூறி நமக்கு ஆதரவாக இருக்கிறார்.

© 2011 by Terry A. Modica

No comments: