Saturday, June 11, 2011

ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13
John 20:19-23

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20




இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


"தந்தையே உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பித்தருளும்." என்று இன்றைய வாசகத்தின் பதிலுரையில், நாம் ஜெபிக்கிறோம். இதனால் தான், திருச்சபை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

பரிசுத்த ஆவியின் துனையின்றி, கிறிஸ்தவம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்க வாய்ப்பில்லை.

கிறிஸ்துவின் ஆவியின் துனையின்றி, நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும் இவ்வுலகில் இப்போது கிறிஸ்துவாக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மை என்ன செய்ய சொன்னாரோ அதனை செய்ய நம்மால் முடியாது.


பரிசுத்த ஆவியின் ஞாயிறு திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறது, அதே போல, நமக்கு இது நமது ஆண்மீக வாழ்விற்கு பிறந்த நாளாகும். அது என்னவெனில், இந்த திருச்சபையின் உறுப்பினாராக, நாம் குழுவாக எல்லோரும் இனைந்து , நமது ஞானஸ்நாணம் நமது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை குறித்தும், உறுதிபூசுதலில், ஆயர், ஞானஸ்நாணத்தில், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கியதை உறுதி படுத்தியும் இவ்விழாவை கொண்டாடுகிறோம்.


ஞான்ஸநாணத்தின் மூலமும்,உறுதி பூசுதலின் மூலமும், நாம் பெற்ற பரிசுத்த ஆவியின் திருவிழா, நாம் கடவுளின் ஆற்றலை பெற்று , பாவங்களை விட்டு நம்மால் வெளியே வரமுடியும் என்பதை இந்த பெந்த கோஸ்தே திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ள உலகை நம்மால் மாற்ற முடியும் என்பதையும் இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. கடவுள் எப்படி இவ்வுலகின் முகத்தை மாற்ற போகிறார்? . நம் மூலமாக!, முதலில், தந்தை கடவுள், இயேசுவிற்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, இவ்வுலகில் இயேசுவிற்கு கொடுக்க பட்ட அழைப்பை அவர் செய்து முடிக்க உதவினார். இப்போது, தந்தை கடவுள், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கி, யேசு விட்ட இடத்திலிருந்து, இப்பூமியை புதுபிக்க, நம்மை தொடர செய்துள்ளார்.

இறைசேவை செய்யவோ, அல்லது தீங்கிற்கு எதிராக , நியாயத்தை பேசவோ, உங்களுக்கு தகுதி குறைவாக உள்ளது என நீங்கள் நினைத்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருப்பதே போதுமானது. பரிசுத்த ஆவியோடு உள்ள தொடர்பில், முன்னேறி செல்லுங்கள். !

© 2011 by Terry A. Modica

No comments: