ஜூன் 5 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறின் 7ம் ஞாயிறு
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
இயேசுவின் வேண்டல்
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் எல்லா வாசகங்களும் நமக்கு சந்தோசத்தை கொடுப்பவை, ஆனால் இன்றைய பதிலுரை பாடல், வாசகங்களின் ஒருமித்த கருத்தை நமக்கு கூறுகிறது. "
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் ."
இந்த வசனத்தை நமது சுவரில் மாட்டி வைத்திருக்கலாம், நமது மேஜையில் இருக்கலாம், எல்லோருக்கும் பிடித்தமான ஒரு வசனம். ஏனெனில், நாம் இருளிலிலும், நம்பிக்கையில்லாமலும் இருக்கும்பொழுது, நம்மை இந்த வசனம் தான் தூக்கிவிடுகிறது. அல்லேலூயா!.
பல வருடங்களுக்கு முன்பு, என்னோடு வாழ்வின் முக்கியமான வசனமாக ஆனது. அதனை ஒரு போட்டாவாக தயார் செய்து எனது மேஜையில் வைத்துள்ளேன். http://gnm.org/RandomQuotes/inspire102.htm .எனக்கு மன சோர்வாக இருக்கும்பொழுது அதனை பார்த்து கொள்வேன். கடவுளின் அனைத்து வாக்குறுதிகளும், அவர் நிறைவேற்றுவார் என்பதை நாம் நம்புகிறேன். நான் எதற்காக வேண்டினேனோ அவை என்ன வந்து சேரவும், கடவுளின் நல்ல பலன்கள் நம்மை வந்து சேர , பல காலங்கள் ஆகும். இன்னும் பல நேரங்களில், முழுமையாக வந்தடையாமல் இருக்கும். ஆனால் இந்த வசனம் கடவுள் மேல் நான் கொண்ட விசுவாசத்தை இன்னும் வளர்க்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுள் இவ்வுலகில் அவர் காட்டிய மாட்சிமையை எடுத்து கூறுகிறார். இயேசு எப்படி அவரை பின் செல்பவர்கள், இயேசுவின் மேல் விசுவாசமும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பதை, அவர்களை பாராட்டி கூறுகிறார். நாம் அக்கறை கொண்டுள்ள பலர், நாம் சொல்வதை கேட்டு , நம்மில் நம்பிக்கை வைத்து நம்மை முழுதுமாக அவர்கள் ஏற்று கொள்ளும்பொழுது, நாம் எப்படி சந்தோசப்படுகிறோம்.
இப்படி யாராவது உங்கள் அன்பை, இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தை நிராகரித்தால் , நீங்கள் இயேசுவிடம் சென்று அந்த நிராகரித்த அன்பை நாம் இயேசுவிடம் கொடுபோம். நற்செய்தியில் சொல்லியிருப்பது போல, இயேசுவின் வார்த்தைகளை நாம் கேட்டு, அவர் தந்தை கடவுளிடமிருந்து தான் வந்தார் என்பதை நாம் ஏற்று கொள்கிறோம். அதன் மூலம் கடவுளின் திட்டத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். இயேசு உங்களுக்காக வேண்டிகொள்கிறார். கூடிய விரைவில், நல்ல விசயங்களை , ஆண்டவரின் நலன்களை இந்த பூமியில் கான்பீர்கள்
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment