ஜூன் 19, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Ex 34:4b-6, 8-9
Dan 3:52-56
2 Cor 13:11-13
John 3:16-18
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)
பெந்தகொஸ்தே ஞாயிறில் நாம் பரிசுத்த ஆவி விழ கொண்டாடுகிறோம், அதன் அடுத்த ஞாயிறில், நாம் மூவொரு கடவுள் விழவை கொண்டாடுகிறோம்.
முதல் வாசகம் தந்தை இறைவன் இரக்கமும் பரிவும் கொண்டவர் என்றும், எப்படி அவர் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல காத்தார் என்பதையும் நமக்கு எடுத்து காட்டுகிறது. அவர் "இரக்கமும், பரிவும், கோபம் கொள்ள மிக அதிக நேரமும், நம்பிக்கையும் " கொண்டவர் என்பதை பார்க்கிறோம். -- மிகச் சரியான தந்தை -- . அவரை இப்படி பார்ப்பதில் நமக்கு மிகவும் கடினமாக இருந்தால், நமது ஆண்மாவிற்கு மருந்திட வேண்டும். நமது இவ்வுலக தந்தையிடமிருந்து, கடவுள் தந்தையை முழுமனதுடன் பிரித்து பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாசகம் மூன்று கடவுளையும் நமக்கு காட்டுகிறது:, இயேசுவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் நட்புறவும் நம்மோடு இருப்பதாக. இதோடு, இதனாலும், மகிழ்ச்சியாகவும், நல்ல நடத்தையோடும், மன ஒற்றுமையோடும், அமைதியோடும் நாம் வாழவேண்டும்.
இதையே மாறாக சொல்வதானால், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து மரணத்தை வெற்றி கொண்டார். நாம் பாவங்களை எதிர்த்து செல்ல நமக்கு தேவையான அருளை கொடுக்கிறார், மேலும் தந்தை கடவுளின் அன்பையும் கொடுத்து, நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய உதவி செய்கிறார். மேலும் தூய ஆவியை கொடுத்து, நாம் பரிசுத்த கிறிஸ்தவர்களாக தொடர்ந்து வாழ உதவி செய்கிறார்.
நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை நமக்கு சொல்கிறது. அவர் நமது பாவங்களுக்காக தீர்ப்பளிக்க வரவில்லை, மாறாக, அவர் தமது மகனை கொடுத்து தீர்ப்பிலிருந்து நம்மை காப்பாற்றுகிறார். நமது பாவங்கள் நம்மை இவ்வுலக மரணத்திற்கு இட்டு செல்கிறது, ஆனால், இயேசு, நம் பாவங்களை எடுத்து கொண்டு, நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். ஆனால், நாம் அதற்கு விருப்ப பட வேண்டும். !
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment