Saturday, July 23, 2011

ஜூன் 24, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 13

புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
முத்து உவமை
45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
வலை உவமை
47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். '
முடிவுரை
51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள்.52 பின்பு அவர்,'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், விண்ணரசை, நிலத்தில் புதைந்துள்ள புதையலுக்கும், விலை உயர்ந்த முத்தாகவும், மீன் வலை பிடித்து, நல்லதை வைத்து கொண்டு, தீயதை தூக்கிபோதுவது போலவும் உவமையாக இயேசு சொல்கிறார். இதையே மாறாக சொல்வதானால், நமது கிறிஸ்தவ வாழ்வு தான், விலை மதிப்புள்ளவை ஆகும். நமது நெஞ்சில் வீனான பொருட்கள் இருந்தால், அதை தூக்கி எறிந்து விட்டு, விலை மதிப்புள்ள பொருட்கள் வைக்க அதனை தயார் படுத்துங்கள். நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் தற்காலிகமனவை, இவ்வுலகில் அதற்கு மதிப்பிருக்கலாம், ஆனால் அதனை வின்னரசிற்காக உபயோகப்படவில்லயென்றால், அவையெல்லாம் மதிப்பில்லாதவை தான்.

உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்று கூறுகிறது. தவறான முத்துக்களையும், வீனாய் போன மீன்களையும் நாம் களைந்து தூக்கி எறிந்தால் தான் நாம் கடவுளை போல் ஆக முடியும். நாம் வின்னரசிற்கு உபயோகமாக இருக்க முடியும். இரக்கமுள்ள கடவுளின் கைகளில், ஆற்றல் மிகுந்த கடவுளின் கைகளில் நாம் இருக்கும் பொழுது, நமக்கு கெட்டது நடந்தால் கூட, அது நமது நல்ல முத்துககளை மிண்ன செய்யும், நம்மிடம் உள்ள நல்ல விசயங்களை வெளியே காட்டும்.


முதல் வாசகத்தில், சாலமன், கடவுளிடம் அதிகம் சொத்துக்களும், பொன்னும் பொருளும் கேட்டிருக்கலாம், கடவுளும் கொடுத்திருப்பார். ஆனால், அதற்கு பதிலாக சாலமன், புரிந்து கொள்ளும் இதயத்தையும், ஆற்றலையும் கேட்டார். அதன் மூலம் அவர் ஞாணம் பெற்று அதனால், நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யமுடியும். அவர் அட்சி அவ்வளவு சரியாக செய்யாமல் இருந்தாலும், மிகவும் ஞானமுள்ள , அறிவும் நிறைந்த மன்னர் என்று உலகம் முழுதும் பேசியது. அதன் மூலம் அவர் பல செல்வங்களை பெற்றார்.

கடவுளரசின் செல்வத்தை முதலில் நாம் தேடினால் தான், இவ்வுலகின் பொருட்களை நாம் பாதுகாப்பாக உபயோகிக்க முடியும் என்று இந்த கதை சொல்கிறது. எவ்வளவு அதிகமாக நாம் கிறிஸ்துவை அன்பு செய்து, அவர் வழியில் செல்கிறோமோ, அப்போது தான், எது உண்மையான மதிப்புடையது என்பது நமக்கு தெரியும். நம்மால், கடவுளுக்கு ஆகாத குப்பை பொருள் என்ன என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும். மேலும் வின்னரசிற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் உபயோகிக்க முடியும்.


© 2011 by Terry A. Modica

No comments: