Friday, August 12, 2011

ஆகஸ்டு 14, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 14, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு

Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Romans 11:13-15, 29-32
Matthew 15:21-28


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 15

கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(மாற் 7:24 - 30)
21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் 'என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் 'என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நாம் மற்றவர்களை பற்றி நாம் மதிப்பிடவும், தீர்ப்பளிக்கவும் நம்மில் ஏற்படும் மனப்போக்கையும் நாம் ஆராய வேண்டும் என்று நமக்கு சவால் விடுகிறது. கானானிய பெண்ணுக்கு அவளுடைய பெண் பாலும், நாடும் அவளுக்கு எதிராக இருந்தது.

கண்டிப்பாக, இயேசு உலகம் எல்லாவற்றிற்கும் இரட்சகர் தான், ஆனால், சீடர்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை. நமக்கும் தான் தெரியவில்லை. அவர்களுடைய மனதை இன்னும் விசாலாமக்க (நம் மனதையும்) , இயேசு கானானிய பெண் அவளுடைய விசுவாசம் , அவளுக்கு உள்ள தடைகளையெல்லாம் தாண்டவேண்டும் என்று காத்திருந்தார், பிறகு இயேசு குணமாக்கினார்.

இயேசுவிற்கு, வெளியாட்கள் யார் என்றால், இறையரசை ஏற்காதவர்கள் மட்டுமே, ஆவர். ஆனால், நாம் உடனேயே இவ்வாறு நினைப்பதில்லை. நமது திருச்சபையில், நிறைய பேரை தவறாக தான் நாம் மதிப்பீட்டு வருகிறோம். நிறைய பேர் இக்குழுவிலிருந்து நீக்கப்பட்டவராகவே நினைக்கின்றனர். நாம் ஒருவரையொருவர் பற்றி தவறான முடிவிற்கு மிக விரைவாகவே வந்து விடுகிறோம்.

எடுத்து காட்டாக, ஒரு பெற்றோராக உள்ளவர்களை, நாம் ஏன் அங்கீகரித்து, அவர்களை நமது கோவிலுக்கு அழைப்பதில்லை. கோவிலில் பல நிகழ்ச்சிகளில், அவர்கள கலந்து கொள்ள அழைத்து, அவர்கள் கலந்து கொள்ளும்பொழுது, அவர்கஆள் குழந்தகளை நாம் பார்த்து கொள்ளலாமே?

நீங்கள் விவாகரத்தானவர்கள் என்றால், மற்றவர்கள் உங்களை ஒதுக்குகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இதுவே தவறான முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஓரினச்சேர்க்கையாளர்களை , திருச்சபை இரக்கத்துடன் அவர்களை பரிசுத்த வாழ்விற்கு அழைத்தும், அவர்கள் வெளியாட்களாக அவர்கள் நினைக்கிறார்கள்.?

சாதாரன மக்காள், இறைசேவையில் குருவானவரோடு சேராமால் தடுக்கபடுகிறோம் என்று நினைக்கிறார்கள். ?
நமது சக கிறிஸ்தவர்களை நாம் தவறாக தீர்ப்பளிப்பதால், அவர்களை வருத்தப்பட வைக்கிறோம். இதனால், கோவிலில் தேவையான வேலைகள் நடைபெறாமலே போய்விடுகின்றன. யாரையெல்லாம், நாம் தவறாக தீர்ப்பளிப்பதால் அவர்களுடைய திறமைகளை நாம் ஒதுக்கி தள்ளுகிறோம். ஆனால் நாம் நல்ல உணர்வுடன், மற்றவர்களை பற்றி தவறாக எண்ணாமல் இருந்தால், நாம் கிறிஸ்துவை போல இருந்தும், அவர்களிடமிருந்து கிறிஸ்துவை நாம் பெறுவோம்.


© 2011 by Terry A. Modica

No comments: