Friday, August 19, 2011
ஆகஸ்டு 21, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆகஸ்டு 21, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 16
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.20பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இயேசு இராயப்பரை பாறையாக்கி, அங்கு தான் திருச்சபையை கட்டுவேன் என்று சொல்கிற பொழுது, ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" என்று கூறுகிறார். "அலகையால் எப்பொழுதும் வெற்றி கொள்ள முடியாது" (எபேசியர் 6)
இயேசு, "நரகம்" திருச்சபையை என்றுமே வெல்லாது என்று சொல்ல வில்லை, ஆனால், பாதாளத்தின் வாயில்களே விண்ணரசை வெல்லாது என்று கூறுகிறார். கண்டிப்பாக சாத்தான் வெல்லபோவதுமில்லை; வாயில்கள் என்றுமே தாக்காது, ஆனால் பாதுகாக்கும். ஒரு எல்லைக்குள் உள்ள , சுவருக்குள் உள்ள அனைத்தையும் கதவுகள் பாதுகாக்கிறது. உங்களுக்கு தெரிந்து யாராவது குற்றம் செய்து சிறைக்கு சென்றுள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது சாத்தானின் வேலைகளால் சிறைக்கு சென்றுள்ளார்களா?
சாத்தானில் வேலைகளை செய்பவர்களை, கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களுக்கு எதிராக இருக்க வேண்டியதில்லை. ஆனால், நாம் பாதாளத்தின் வாயில்க்ளை தாக்க வேண்டும். அதனை தாக்கி கீழே தள்ள வேண்டும், மேலும், சாத்தான்கள் இழுத்து செல்லும் நம் சகோதரர்களை நாம் இழுத்து விண்ணரசிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
2000 வருடங்களுக்கு முன் இயேசு எப்படி சாத்தானிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தாரோ, அதையே, உங்கள் மூலம் இயேசு இன்று செய்கிறார்.
பாவங்களிலிருந்து விடுதலை பெற துடிக்கும் பாவிகளை மீட்க, இயேசு இராயப்பருக்கு சாவியை கொடுத்து, நல்லாயனாக (போப்) கிறிஸ்தவர்களுக்காக அவரை திருநிலை படுத்தினார். இதே சாவி ஒவ்வொரு தலைமுறையாக அடுத்தடுத்த போப்பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த சாவிகள் எவை? பாதாளத்தின் வாயில்களை அருட்சாதனங்கள் மூலம் திறக்க முடியும்; அந்த சாவிகள் முடிவில்லா வாழ்விற்கு உள்ள கதவை திறக்கிறது. பாவ மனிதன் பாவ சங்கீர்த்தனத்தில் இருக்கும் பொழுது, குருவானவர் மன்னிபின் அருளை கொடுக்கும்பொழுதும், மணமகனையும், மணமகளையும் திருமணத்தில் இணைக்கும் பொழுதும், இயேசுவே குருவாணவர் மூலம் அதனை செய்கிறார்.
இந்த அருட்சாதனங்களை, நாம் மிகவும் கவனமாகவும், ஆர்வத்துடனும் எடுத்து கொள்ளும்பொழுது, கடவுள் உண்ணத ஆற்றல், சாத்தானை வெற்றி கொள்ள முடியும்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment