Friday, January 27, 2012

ஜனவரி 29, 2012 ஞாயிரு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 29, 2012 ஞாயிரு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 1
தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்
(லூக் 4:31 - 37)
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி, இயேசுவின் அதிகாரத்தையும், அவர் யார் என்பதையும் காட்டுகிறது. நமது வாழ்வில், அவரது அதிகாரத்தையும் , ஆட்சியையும் அவருக்கு அர்ப்பணித்தோமானால், உங்கள் கடினமான நேரத்தில் கூட , கடவுளில் சந்தோசமாக இருப்போம்,

ஏன், ஏனெனில், கிறிஸ்துவின் அதிகாரம் எல்லாவற்றிற்கும் மேலானது என்பது நமக்கு தெரியும். அதன் அர்த்தம் என்ன என்றால், கிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ் நாம் அர்ப்பணித்த அனைத்தும், நல்ல வெற்றியையே தரும் என்பது ஆகும். கஷ்டமான விசயங்கள் கூட நமக்கு ஆசிர்வாதமாக மாறிவிடும். விபத்து கூட வெற்றியாக முடியும். கவலைகள் சந்தோசங்களாக மாறும். படபடப்பும், வெறுப்பும், புதிய வளர்ச்சிக்கும் , புதிய அறிவை, புதிய அனுபவத்தையும் கொடுத்து, மற்றவர்களுக்கு நாம் சேவை செய்யும் மனிதனாக ஆக்கும்.
எனினும், நாம் கிறிஸ்துவின் அதிகாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு, நாமே பொறுப்பை எடுத்து கொண்டு, ப்ரச்னையை நாம் முடித்து விடுவோம் என்று நினைத்தால், எப்படி கடினமான வாழ்வை மாற்றி நல்ல விதமாய் கொண்டு வரலாம் என நினைத்தால், நமது ப்ரச்னைகள் இன்னும் மோசமாக தான் போகும். இது தான் "நன்னெறி நம்பிக்கை" என்பதாகும். இதையே தான் போப் பெனடிக்ட் "திருச்சபையின் கருத்துகளை அப்படியே ஏற்று கொள்வது .. " (ஏப்ரல் 19, 2005) என்று சொல்கிறார்.

சந்தோசத்தின் பாதை, இயேசுவின் பாதங்களிலினால் போடப்பட்டுள்ளது. சாத்தானிடமிருந்தும், நமது மனித வாழ்வின் கஷ்டங்களிலிருந்தும், இயேசுவின் அதிகாரத்தின் கீழ் வைத்தோமானால், நாம் அதிலிருந்து பலனடைவோம். அவரின் போதனைகளை கேட்டு நாம் கீழ்படிய வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவரை நாம் நம்ப வேண்டும். அவரின் வழி தான் சரியான வழி என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது எல்லாவற்றிற்கும் அர்த்தம் என்ன என்றால், இயேசுவோடு இனைந்து, சிலுவை வழி சென்று நாம் உயிர்த்தெழுதலில் நாம் மனப்பூர்வமாக தொடரவேண்டும்.

நமக்காக காத்திருக்கும் வெற்றியை நாம் அடைய குறுக்கு வழி கிடையாது. சாத்தானை வெல்ல நாம் சுலபமான வழி கிடையது. இது உணமையில்லையெனில், இயேசு சிலுவையில் கஷ்டப்பட்டு மரணித்திருக்க வேண்டியதில்லை.

நல்ல செய்தியாக, நாம் சந்தோசபட நமக்கு இருக்கிறது என்ன வென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்யும், மிகுந்த ஆற்றலும், இவ்வுலகிலே மிகுந்த ஞானமும் உள்ள கடவுளின் அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதே, அதுவே நம் நம்பிக்கையுமாகும். கேள்வி என்னவெனில்: நீங்கள் கடவுளிடம் சரணடைவீர்களா?

© 2012 by Terry A. Modica

Saturday, January 21, 2012

ஜனவரி 22, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 22, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொதுக்கால் 3ம் ஞாயிறு
Jonah 3:1-5,10
Ps 25:4-9
1 Cor 7:29-31
Mark 1:14-20

மாற்கு நற்செய்தி

2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மத் 4:12 - 17; லூக் 4:14 - 15)
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.



முதல் சீடர்களை அழைத்தல்
(மத் 4:18 - 22; லூக் 5:1 - 11)
16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுதுமக சரணடையவேண்டும் என நம்மை அழைக்கிறது. "காலம் நிறைவேறிவிட்டது" - 2000 வருடங்களௌக்கு முன்பு அல்ல. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அல்ல,இப்பொழுதே உங்கள் வாழ்வில் இயேசு தேவையாக இருக்கிறார்.
"இறையாட்சி நம் கைகளில்" - கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன தேவையோ, அது இங்கே உங்கள் கைகளில் தயாராக இருக்கிறது.

"மனம் மாறி , கடவுளின் நற்செய்தியை நம்புங்கள்" என்பதற்கு அர்த்தம், "என் பின்னால் வாருங்கள், என்னிடமிருந்து கற்று கொண்டு, என்னை போல் மாறுங்கள்" என்பதாகும். முதல் அப்போஸ்தலர்களுக்கு , உங்களிடம் உள்ளது அனைத்தையும் துறந்து விட்டு, எல்லா நேரத்திலும், இயேசுவோடு , முழு வாழ்வும் அவரோடு இனைந்து செயல்படவேண்டும்" என்பதே அவர்களுக்கு சொல்லப்பட்டது. அதையே தான் நமக்கும் சொல்லபடுகிறது: நமது சொந்த திட்டங்களை ஒரத்தில் வைத்து விட்டு , இயேசுவை அவர் எங்கு சென்றாலும், நாமும் பின் செல்ல வேண்டும்.
இன்றைய நாகரீக உலகில், இயேசுவை விட , நவீன எலக்ட்ரானிக் கருவிகளோடு தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம், மேலும் அதையே நம்பியிருக்கிறோம். நம்மில் பலர், விடுமுறைக்கு செல்லும்பொழுது கூட , நம் செல்போனில் நம் கம்பெனி ஆட்கள் கூப்பிட முடியும். எப்படியாவது, இது போன்ற தொந்தரவுகளை தவிர்க்க தெரிய வேண்டும். செல்போன் போன்ற சாதனங்களை ஒதுக்கி வைத்து விட்டு, இயேசுவோடு இனைந்திருக்க வேண்டும். இது நமது திருச்சபையின் சமூக நீதியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது: ஞாயிறன்று, நாம் அலுவலக வேலைகளை வைத்து கொள்ள கூடாது. ஏன்? ஏனெனில், அந்த நாளில், இயேசுவோடு நாம் நேரம் செலவழித்து, நம்மையே புதுபித்து கொள்ள வேண்டும்.
துரதிஸ்டவசமாக, இயேசு நம் வீட்டிற்கு வந்து, நம் காலண்டரில் , "யேசுவோடு ஓய்வெடு" என்று எந்த தேதியிலும் குறித்து வைப்பதில்லை. அப்படி எழுதியிருந்தால், நாம் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தலாம். கண நேரத்தில், இயேசு கொடுக்கும் குறிப்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் இறையரசின் மோட்சத்தை நாம் அனுபவிக்க , நாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசுவை பின் செல்ல நாம் கற்று கொள்ள வேண்டும். அவர் வழி நமக்கு ஆச்சரியபட வைத்தாலும், நாம் பின் செல்ல வேண்டும்.

© 2012 by Terry A. Modica

Saturday, January 14, 2012

ஜனவரி 15, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 15, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு

1 Sam 3:3b-10, 19
Ps 40:2, 4, 7-10
1 Cor 6:13c-15a, 17-20
John 1:35-42

யோவான் (அருளப்பர்) நற்செய்தி



முதல் சீடர்களை அழைத்தல்
35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39 அவர் அவர்களிடம், ' வந்து பாருங்கள் 'என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இராயப்பரிடம் இயேசு என்ன கேட்டாரோ, அதையே நம்மிடமும்: "'என்ன தேடுகிறீர்கள்?'" என்று கேட்கிறர். நீங்கள் ஜெபம் செய்யும் பொழுதும், சிலுவையை உற்று நோக்கும்பொழுதும், இயேசுவின் திரு உருவ படத்தை பார்க்கும்பொழுதும், நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?


இயேசு சொல்கிறார்: "வந்து பாருங்கள்!" , வந்து எதனை பார்ப்பது? அவரின் நோய் குணமாக்கும் ஆற்றல், நமது ஜெபத்திற்கான பதிலாக நமக்கு தரும் கொடைகளையா? தெய்வீக ஆற்றலையா? நாம் இதையெல்லாம் தேடுவது, நம்மிடம் இவை இல்லை என்பதலா ?
தந்தை கடவுள் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் இயேசு பூர்த்தி செய்பவராக இருந்தார். முழு அன்போடும், முழு இரக்கத்தோடும் , தெய்வீக குணமளிப்பவராகவும் , நமது ஜெபத்திற்கெல்லாம், தந்தையிடம் எடுத்து செல்பவராகவும், நமக்கு உண்மையாகவே தேவையான எல்லாவற்றிற்குமாக இயேசு இருக்கிறார். பிறகு ஏன் நமக்கு இன்னும் ஏதோ தேவையாக இருக்கிறது? ஏன் நமது வாழ்வு இன்னும் முழுமையாக இல்லை? ஏன் நமது ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை.?
இதற்கு எல்லாம் பதில், இராயப்பர், இயேசுவை பின் சென்ற பின் என்ன நடந்ததோ அதன் மூலம், நமக்கு கிடைக்கிறது. கடவுளின் அழைப்பிற்கு சாமுவேல் என்ன பதில் சொன்னாரோ : "இதோ! அடியேன், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்பது தான் பதில்.

இயேசுவின் தெய்வீக செயல்களை கண் முன்னே பார்க்கும் பாக்கியம் இராயப்பருக்கு கிடைத்தது. தாமாகவே கடவுளின் அன்பை , இயேசுவின் கண்கள் மூலம், இராயப்பர் அனுபவித்தார். இயேசுவின் குரலில் இரக்கத்தையும், இயேசுவின் சிரிப்பில் மன்னிப்பையும் இராயப்பர் உணர்ந்தார்.

இதெல்லாம் இருந்தும், இராயப்பர் என்ன தேடி வந்தாரோ, அதனை உண்மையாகவே கண்டு புடிக்க வில்லை. இராயப்பர் எப்படி குழப்பமாகவும், முடிவெடுக்க முடியாமலும் இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இயேசு உயிரோடு இருந்த வரை இராயப்பர் இயேசுவின் முழுமையை முழுதாக உணரவில்லை. கிறிஸ்துவின் அழைப்பை முதல் திருச்சபைக்கு தலைமை ஏற்க இராயப்பர் இயேசு இறந்த பிறகு ஏற்று கொண்டார்.

இதே தான் நமக்கும், இயேசுவின் உண்மையான, கண்களையும், அவரது குரலையும், இன்னும் பார்க்காமால் இருந்தால், நாம் எதனை தேடுகிறோமோ, அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது, நாம் அதனை கண்டுகொள்வோம். ஏன்? இவையெல்லாவற்றையும், நம்மொடு வைத்திருந்தோம், அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது தான், நம்மிடம் இருப்பதை நாம் உணர்கிறோம். இது தான் தெய்வசெயலாக, : "இதோ! அடியேன், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று கூறுகிறோம்.
© 2012 by Terry A. Modica

Friday, January 6, 2012

ஜனவரி 8, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 8, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் ஞாணஸ்நானம்
Isaiah 42:1-4,6-7 or Isaiah 55:1-11
Ps 29:1-4,9-10 or Isaiah 12:2-6
Acts 10:34-38 or 1 John 5:1-9
Mark 1:7-11
மாற்கு நற்செய்தி

அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)

ஏன் இயேசுவுக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கப்பட்டது? அவருக்கு பாவ மன்னிப்பு தேவையில்லையே? ஏன்,? இயேசு ஏதாவது செய்தாரா? நாம் பாவங்களிலிருந்து நம்மை காப்பாற்ற நமக்காக சிலுவையில் இறந்தார்! இன்னும் இதைவிட இயேசுவுக்கு அதிகம் இருந்தது.
இயேசுவே அவராக பாவிகளோடு இணைத்து கொண்டார். முதலில் நம்மில் ஒருவராக பணிவுடன் நம்மோடு இணைந்து கொண்டார், சாதாரண மனிதனாக நமக்குள்ள தேவைகளை போல, அவரும் வாழ்ந்தார். நமக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, தண்ணீரில் கிறிஸ்து நம்மில் வரத்தான், இயேசுவும் தண்ணீரில் ஞாண்ஸ்நாணம் பெற்று கொண்டார். நம் தண்ணீர் ஞாணஸ்நாணத்தால், நாம் புது வாழ்வை தொடங்கி, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நித்திய வாழ்வில் இணையலாம்.
நாம் யார் என்பதை இயேசுவும் ஒவ்வொரு முறையும் அவர் நமக்கு எடுத்து காட்டும் செயல்களிலும், முன் மாதிரியாகவும் இருந்தார். நாம் கடவுளின் குழந்தைகளாகவே படைக்கபட்டிருக்கிறோம். இயேசுவிற்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, பரிசுத்த ஆவி இறங்கி வந்தார், ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' அப்பொழுது, கடவுள் இவ்வாறு கூறினார். இதே மாதிரி நம் ஒவ்வொருவர் ஞாணஸ்நாணத்திலும் நடக்கும் என்பதை இயேசு அன்று நமக்கு காட்டினார்,
பரிசுத்த ஆவி உங்கள் மேலும் இறங்கி வந்தார் , மேலும் கடவுள் "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.

ஞாணஸ்நாணம் தண்ணீர்தான் கடவுளின் கருவறையாக இருந்து , நாம் அவரின் குடும்பத்தில் மீண்டும் பிறந்து , அவரது இறைசேவையில் நாம் இணைகிறோம். தீர்த்த நீரை எடுத்து நாமே சிலுவை இட்டுக் கொள்ளும்பொழுது , நாம் நமது ஞாணஸ்நாணத்தை மீண்டும் புதுபித்து கொள்கிறோம்.
யோர்தான் ஆற்றில், இயேசு சாதாரண வாழ்விலிருந்து, இறைசேவை வாழ்விற்காக மீண்டும் பிறந்தார். நமக்கும் ஞாணஸ்நாணம் மறுபிறப்பை கொடுக்கிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் மறு பிறப்பை எடுக்கும்போது, நீங்கள் மணம் வருந்தி, மன்னிப்பை பெற வேண்டுமா? கடவுள் உங்கள எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ, அதற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும். இறை சேவைக்கும் நம்மை ஆயத்தமாக்கி கொள்ள வேண்டும்.
திருச்சபையின் இவ்வருட வாழ்வை தொடங்கும்போது, நாம் நமது ஞாணஸ்நாண மறுபிறப்பில், நமது பொறுப்பை உறுதி செய்து, நம்மையே சுத்த படுத்தி கொண்டு, பரிசுத்த வாழ்விலும், இறைசேவையிலும், நாம் கிறிஸ்துவை பின் செல்பவர்களாக :
சாத்தானை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் செயல்களை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் பொய் வாக்குறுதிகளை எதிர்க்கிறீர்களா?
கடவுளை விசுவசிக்கிறீர்களா?
எல்லாம் வல்ல கடவுள், இப்பூமியையும் , வானத்தையும் படைத்த கடவுளை ஏற்று கொள்கிறீர்களா?
தந்தை கடவுளின் ஒரே மகனான கிறிஸ்துவை நம்புகிறீர்களா? கன்னி மரியாளின் மூலம் பிறந்தவரும், சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, நல்லடக்கம் செய்யபட்டு, மீண்டும் உய்ரித்தெழுந்து, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து இருக்கும் கிறிஸ்துவை விசுவசிக்கீறீர்களா?
பரிசுத்த ஆவியை நம்புகிறீர்களா? பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை நம்புகிறீர்களா? புனிதர்களின் பட்டத்தை நம்புகிறீர்களா? பாவ மன்னிப்பை விசுவசிக்கிறீர்களா ? மறு பிறப்பை நம்புகிறீர்களா? நித்திய வாழ்வை நம்புகிறீர்களா?
இந்த ஜெபத்தை பின் வருமாறு சொல்லுங்கள்:
அன்பு கடவுளே, நாம் பாவி, உன்னையே என் வாழ்வில் முதல்வனாக வைக்க பல்வேறு சமயங்களில் மறந்தும் ஒதுக்கியும் வைத்து விடுகிறேன். என்னை மன்னியும், என்னை மாற்றும், என்னை புதுப்பித்தருளும், உணமையாகவே, நீங்கள் என் கடவுளாக வாழ்நாள் முழுது இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இயேசு அவரது வாழ்வை தந்தையின் கைகளில் சமர்பித்தது போல், யோவான் ஞாணஸ்நாணத்தில் தன்னை அர்ப்பணித்தது போல, நானும் செய்கிறேன். என்னையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். ஆமென்!.
கடவுள் இதற்கு மறுமொழியாக:
' என் அன்பார்ந்த மகன்/மகழ் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.
© 2011 by Terry A. Modica